Search This Blog

Tuesday, January 14, 2014

Bajji

#பஜ்ஜி : டீயுடன் சாப்பிட மிகவும் ஏற்ற அருமையான மாலை சிற்றுண்டிகளில் பஜ்ஜி ஒன்றாகும். மிக குறைந்த நேரத்தில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு மிக எளிதாக செய்து விடலாம். வாழைக்காய், கத்தரிக்காய், உருளை கிழங்கு, வெங்காயம், பஜ்ஜி மிளகாய், குடை மிளகாய் ,.... போன்ற பலவற்றை உபயோகித்து பஜ்ஜி செய்யலாம். இவற்றில் வாழைக்காய் பஜ்ஜியும் மிளகாய் பஜ்ஜியும் மிகவும் பிரசித்தம். டீ கடைகளில் பஜ்ஜியை கடித்துக்கொண்டே பலரும் டீயை சுவைப்பதை காணலாம்.
எவ்வாறு செய்யலாம் என பார்ப்போம்.

பஜ்ஜி
வெங்காய பஜ்ஜி - Onion Bajji 
பஜ்ஜி
வாழைக்காய் பஜ்ஜி - Banana Bajji 
 தேவையான பொருட்கள் :



மாவிற்கு :
1/2 கப்                                           கடலை மாவு
1 Tbsp குவித்து                           அரிசி மாவு
1/4 Tsp                                            மிளகாய் தூள்
1 சிட்டிகை                                 மஞ்சத்தூள்
1/4 Tsp                                           சீரகத்தூள்
1 சிட்டிகை                                சமையல் சோடா
1/4 Tsp                                           உப்பு ( அட்ஜஸ்ட் )

பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
காய் :
வாழைக்காய் , கத்தரிக்காய், உருளை கிழங்கு, வெங்காயம்

செய்முறை :
சமையல் சோடா நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு கலந்துக் கொள்ளவும்.


மாவு சிறிது தளர இருக்க வேண்டும். காயை நனைத்து எடுத்தால் அதில் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு தேவையான பதத்தில் இருக்க வேண்டும்.
பொரிப்பதற்கு முன் விருப்பப்பட்டால் சமையல் சோடாவை கலந்துக் கொள்ளவும்.


அடுப்பில் எண்ணெயை சூடாக்கவும்.
காய்கறிகளை மெல்லிய துண்டுகளாக அரிந்து எண்ணெய் சூடானதும் மாவில்








நனைத்து பொரித்தெடுக்கவும்.


சூடான காபி அல்லது டீயுடன் சுவைக்கவும்.




சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

மோதகம் காரம்
மோதகம் காரம்
வாழைப்பூ விரல்கள்
வாழைப்பூ விரல்கள்
புளிக்கூழ்
புளிக்கூழ்
பகோடா
பகோடா
வாழைத்தண்டு சாட்
வாழைத்தண்டு சாட்

No comments:

Post a Comment