Search This Blog

Sunday, January 12, 2014

Soy Chunks Pooranam

#சோயாபூரணம் : #சோயாசன்க் என்பது மிகுந்த புரத சத்து மிகுந்த உணவாகும்.
இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள :
Textured or texturized vegetable protein (TVP), also known as textured soy protein (TSP), soy meat, or soya chunks is a defatted soy flour product, a by-product of extracting soybean oil.[1] It is often used as ameat analogue or meat extender. [ source : http://en.wikipedia.org/wiki/Textured_vegetable_protein ]

சுழியன் பொங்கல் தினத்தன்று செய்யப்படுவது வழக்கம். இந்த முறை சோயா  சன்க் ( Soy Chunks - Meal Maker ) வைத்து சுழியனுக்கு உள்ளே வைக்கும் பூரணத்தை செய்யலாம் என முடிவெடுத்தேன். செயலிலும் இறங்கி விட்டேன். 
இந்த பூரணம் கொண்டு போளி மற்றும் மோதகம் போன்ற இனிப்பு வகைகளும் செய்யலாம்.

இனி எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
1/2 கப்                               சோயா சன்க் ( Soy Chunks - Meal Maker )
1/4 கப்                               கடலை பருப்பு 
1 கப்                                  வெல்லம் 
1/2 கப்                               தேங்காய் துருவல் 
1/4 Tsp                                ஏலக்காய் + ஜாதிக்காய் தூள் 
1 சிட்டிகை                     உப்பு 

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சோயா சன்க் எடுத்து தண்ணீரில் கழுவவும்.
1 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஆவி அடங்கியவுடன் வெளியே எடுத்து தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.
ஆறியதும் சோயாவை பிழிந்து அதிகப்படியாக உறிஞ்சியுள்ள தண்ணீரை வெளியேற்றிய பின் மிக்ஸியில் அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.

பருப்பையும் குக்கரில் ஒரு விசில் வரும் வரை அதிக தீயிலும்  பிறகு 8 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக வைத்து எடுக்கவும்.

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து 1/2 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் 
குறைந்த தீயில் வைத்து சூடாக்கவும்.
வெல்லம் கரையும் வரை ஒரு கரண்டியினால் கலக்கவும்.
பின் வடிகட்டி எடுத்து வைக்கவும்.

ஒரு கனமான பாத்திரத்தில் சோயா சன்க்ச், மசித்த பருப்பு, வெல்லக்  கரைசல், மற்றும் தேங்காய் சேர்த்து குறைந்த தீயில் வைத்து கரண்டியால் கலக்கவும்.

அப்படியே சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் அடுப்பின் மீது குறைந்த தீயில் வேக விடவும்.
அவ்வப்போது கரண்டியினால் கிளறி விடவும்.
நன்கு எல்லா பொருட்களும் சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பை நிறுத்தி விடவும்.
இப்போது ஏலக்காய் ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.
சோயா பூரணம் தயார்.

ஒரு மூடியின் கூடிய பாத்திரத்தில் ஆறியவுடன் எடுத்து வைத்து  குளிர் சாதன பெட்டியில் சேமித்து  வைக்கவும். 3 அல்லது 4 நாட்கள் வரை வைத்து உபயோகிக்கலாம்.

சோயா பூரணம்

இந்த இனிப்பு பூரணம் கொண்டு சுழியன், மோதகம், மற்றும் போளி போன்ற உணவு வகைகளை செய்யலாம்.



மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்க்க :

தேங்காய் பூரணம்
தேங்காய்
பூரணம்
போளி - சோயா பூரணம்
போளி - சோயா பூரணம்
போளி மாவு
போளி
மாவு
போளி - உருளை பூரணம்
போளி - உருளை பூரணம்
புளிக்கூழ்
புளிக்கூழ்



No comments:

Post a Comment