Search This Blog

Wednesday, January 22, 2014

Varagarisi Coconut Payasam

#வரகரிசிதேங்காய்பாயசம் :  #வரகரிசி ஆங்கிலத்தில் #கோடோமில்லெட் என அழைக்கப்படுகிறது. வரகு அரிசியின் அறிவியல் பெயர் Paspalum Scrobiculatum  அரிசியை போலவே இதனை சமையலில் உபயோக படுத்தலாம்.
மேலும் சிறு தானிய வகைகளை பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Millet

வரகு பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Kodo_millet

தமிழில் வரகு 

இந்த பாயசம்  தேங்காய் அரைத்து வெல்லத்துடன் செய்த பாயசம். பாலுடன் செய்த பாயசத்தை பிறிதொரு சமயம் பார்த்தோம். அதை விட வெல்லத்துடன் சேர்த்து செய்யும் போது சுவை இன்னும் அருமையாக இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள அளவில் சுமார் 1 1/2 முதல் 2 கப் தயாரிக்கலாம்.

வரகரிசி தேங்காய் பாயசம்

தேவையான பொருட்கள் :


வரகரிசி
தமிழ் : வரகரிசி ; English : Kodo Millet 

1 Tbsp                                        வரகரிசி
1 சிட்டிகை                             உப்பு
1/4 கப்                                       வெல்லம் ( அட்ஜஸ்ட் )

அரைக்க :
1/4 கப்                                      தேங்காய் துருவல்
1/2 Tsp                                       கச கசா
1/4 Tsp                                       அரிசி [ அ ] அரிசி மாவு
2                                                 ஏலக்காய்
சிறிய துண்டு                       ஜாதிக்காய்
3                                                 முந்திரி பருப்பு

சுவை கூட்ட :
நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் கிஸ்மிஸ்

செய்முறை :
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் நன்கு மைய  அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.

வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கி கரைக்கவும்.
பிறகு வடிகட்டி வைக்கவும்.

வேக வைத்த வரகரிசியை கரண்டியால் மசித்து 1/2 கப் தண்ணீருடன் அடுப்பில் குறைந்த தீயில் சூடாக்கவும்.
வெல்ல கரைசலை விட்டு கலக்கவும்.
2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 5 - 8 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

ஒன்று சேர்ந்து பதமாக வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
நெய்யில் முந்திரி மற்றும் கிஸ்மிஸ் இரண்டையும் வறுத்து பாயசத்தின் மேல் கொட்டவும்.
மிக மிக சுவையான வரகரிசி தேங்காய் பாயசம் தயார்.

ஒரு கிண்ணத்தில் எடுத்து பரிமாறவும்.

வரகரிசி தேங்காய் பாயசம்


  • தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கலாம்.
  • பொதுவாக பாயசத்தின் நிறம் வெல்லத்தின் நிறத்தை பொருத்தே அமையும்.
  • வெல்லத்தின் அளவை சுவைக்கேற்றவாறு கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.


மற்ற சில சமையல் குறிப்புகள்
வரகரிசி  பாயசம்
வரகரிசி
பாயசம்
வரகரிசி தக்காளி சாதம்
வரகரிசி தக்காளி
சாதம்
வரகரிசி புதினா பிரியாணி
வரகரிசி புதினா
பிரியாணி



1 comment: