Search This Blog

Wednesday, January 22, 2014

Varagarisi Payasam

#வரகரிசிபாயசம் : #வரகரிசி #சிறுதானியம் வகைகளில் ஒன்றாகும். இதன் தானியங்கள் பார்ப்பதற்கு மிக மிக சிறிய ஜவ்வரிசி போலவே இருக்கும்.

 வரகரிசியை ஆங்கிலத்தில் #கோடோமில்லெட் என அழைக்கப்படுகிறது. வரகு அரிசியின் அறிவியல் பெயர் Paspalum Scrobiculatum.  அரிசியை போலவே இதனை சமையலில் உபயோக படுத்தலாம்.
மேலும் சிறு தானிய வகைகளை பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Millet

வரகு பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Kodo_millet

தமிழில் வரகு 

வரகரிசி
தமிழ் : வரகரிசி ; English : Kodo Millet 

இதனை அரிசியை சமைப்பது போலவே அதே அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். ருசி அரிசி சாதத்தை விட அருமையாக இருக்கும். இப்போது இந்த வரகரிசியை கொண்டு பால் பாயசம் செய்வதெப்படி என பார்ப்போம்.


வரகரிசி பாயசம்

சுமார் 1 கப் பாயசம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் :


2 Tbsp                                       வரகரிசி  வேகவைத்தது
1 1/2 Tbsp                                 சர்க்கரை
1 சிட்டிகை                           உப்பு
1 1/4 கப்                                   பால்
2 Tsp                                         பாதாம் துருவியது
3 அ  4                                      குங்கும பூ
1/4 Tsp                                      ஏலக்காய் பொடி
1 சின்ன துண்டு                 ஜாதி பத்திரி, பொடித்துகொள்ளவும்

செய்முறை :
அடுப்பில் பாலை சூடாக்கவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் வேகவைத்த வரகரிசி , உப்பு மற்றும் ஜாதி பத்திரி ஆகியவற்றை சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடவும்.


அவ்வபோது கரண்டியால் கலக்கி விடவும்.

வரகரிசி பாயசம்

சர்க்கரை மற்றும் குங்குமபூ  சேர்த்து மேலும் 7 முதல் பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அடிபிடிக்காமல் இருக்க அவ்வப்போது கரண்டியால் கலக்கி விடவும்.

கடைசியாக  ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்.

ஒரு கிண்ணத்தில் எடுத்து பாதாம் துகள்களை தூவி பரிமாறவும்.

வரகரிசி பாயசம்





மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
வரகரிசி புளியோதரை வரகரிசி தக்காளி சாதம் வரகரிசி தேங்காய் பாயசம்

No comments:

Post a Comment