Search This Blog

Saturday, March 29, 2014

Murungaikai Palakottai Kothamalli koottu

#முருங்கைக்காய்பலாகொட்டைகொத்தமல்லிகூட்டு : முருங்கைகாயும் பலகொட்டையும் சாம்பார்  மட்டுமல்ல கூட்டு செய்தாலும் மிக மிக ருசியாக இருக்கும். இந்த கூட்டை செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் .... ம்ம்ம்.... அதன் ருசியே தனிதான்!!..
இனி எப்படி செய்வது என பார்ப்போம்.

முருங்கைக்காய் பலாகொட்டைகொத்தமல்லிகூட்டு


தேவையான பொருட்கள் :


1                                                   : முருங்கைக்காய், துண்டுகளாக வெட்டவும்.
6                                                   :  பலாகொட்டை, நான்காக வெட்டவும்.
1 சிறியது                                 : பெரிய வெங்காயம்
3 பற்கள்                                    : பூண்டு, பொடியாக நறுக்கவும்.
1/4 கப்                                         : கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1 சிட்டிகை                               : மஞ்சத்தூள்
3/4 Tsp                                          : சாம்பார் பொடி
3/4 Tsp                                          : உப்பு
2 Tbsp                                           : வேக வைத்த பச்சை பருப்பு

அரைக்க :
3 Tsp                                            : தேங்காய் துருவல்
1/4 Tsp                                         : சீரகம்
1/4 Tsp                                         : அரிசி மாவு

தாளிக்க :
1/2 Tsp                                        : வெங்காய வடவம்
1/2 Tsp                                        : எண்ணெய்

செய்முறை :
மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.


குக்கரில் அரிந்து வைத்துள்ளவற்றையும் மற்ற பொடிகளையும் போட்டு 1/2 கப் தண்ணீர் விடவும். மேலும் வேகவைத்த பருப்பு மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வெயிட் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.


உடனே ஆவியை வெளியேற்றி விட்டு திறக்கவும்.


அரைத்து வைத்துள்ள தேங்காயையும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையும் சேர்க்கவும்.
மீண்டும் அடுப்பின் மேல் மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் அல்லது எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும்.


பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

முருங்கைக்காய் பலாகொட்டைகொத்தமல்லிகூட்டு

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி வடவத்தை தாளித்து கூட்டின் மேல் சேர்க்கவும்.

முருங்கைக்காய் பலாகொட்டைகொத்தமல்லிகூட்டு


சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

முன்பே கூறியது போல சூடான சாதத்தில் போட்டு ஒரு துளி நெய் விட்டு பிசைந்து வெங்காய வத்தல் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் .... ம்ம்ம்.... அதன் ருசியே தனிதான்!!.. ஊறுகாயுடனும் நன்றாக இருக்கும்.




மற்ற கூட்டு வகைகள் முயற்சி செய்து பார்க்க

முட்டைகோஸ் கூட்டு முருங்கைக்காய் கத்தரிக்காய் கூட்டு

No comments:

Post a Comment