Search This Blog

Tuesday, April 29, 2014

Amaranth Adai

#அமராந்த்அடை :  அமர்நாத் விதைகள் ஒரு கீரையின் விதையாகும். இதனை அமராந்தம் என்றும் அழைக்கப் படுகிறது. இதனை இங்கு சட்டிஸ்கரில் ராஜ்கிர் காரா என அழைக்கிறார்கள். இந்த விதைகள் கச கசா விதைகளை போலவே இருக்கும். ஆனால் கச கசாவை விட அளவில் சற்றே  பெரியது. நிறமும் சற்றேறக்குறைய அதைப் போலவே இருக்கும்.

Amaranth Seeds or Amarnath seeds 

அமர்நாத் கீரை & விதை பயன்கள் 
அமராந்த் 

அமராந்த் [ Amaranth ] என்பது தண்டு கீரை அதாவது முளை கீரை வகையை சார்ந்தது. இது பச்சை, பச்சை இலையில் நடுவே சிகப்பு, மற்றும் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் இலைகளை கொண்டது போன்ற  பல வகைகள் உள்ளன. சாப்பிடுவதற்காக சிலவற்றை பயிர் செய்யப்படுகிறது. சில அலங்கார செடியாக தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.இந்த செடியின் தண்டு, இலை மற்றும் விதைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதனை பற்றி மேலும் அறிய

Amaranth Plant 

இங்கு அமராந்த் மாவை உபயோகித்து ஒரு ருசியான அடை செய்வது எப்படி என பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :
1/2 கப்                                     அமராந்த் மாவு
1/2 கப்                                     கோதுமை மாவு
1/4 கப்                                     பயத்தம் மாவு
2 Tsp                                        அரிசி மாவு
1/2 Tsp                                     உப்பு
1/4 கப்                                    வெங்காயம் பொடியாக நறுக்கியது
1 கப்                                       பாலக் கீரை பொடியாக நறுக்கியது
2 Tsp                                       கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
5 அ 6                                     கருவேப்பிலை
எண்ணெய் அடை சுட தேவையான அளவு.

செய்முறை :
மாவு அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்க்கவும்.
ஒரு கப் தண்ணீர் விட்டு இட்லி மாவு போல கெட்டியாக கலக்கி வைக்கவும்.
மாவுடன் வெங்காயம் மற்றும் கீரைகளை சேர்த்து கலக்கவும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் விட்டு, பின்னர் இரண்டு கரண்டி மாவை தோசை கல்லின் நடுவே வைத்து பரப்பவும்.
ஒரே தடிமனாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.


ஊற்றிய அடையின் மேலும் சுற்றியும் எண்ணெய் விட்டு மூடி வேக விடவும்.
அடையின் ஓரம் சிவக்க ஆரம்பித்தவுடன் திருப்பி போடவும்.


இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.


இஞ்சி சட்னியுடன் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.












மேலும் சில தோசை மற்றும் அடை வகைகள்
முயற்சி செய்து பார்க்க

பரங்கிக்காய் அடை
பரங்கிக்காய் அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை
பெசரட்டு
பெசரட்டு
வாழைப்பூ பசலை அடை
வாழைபூபசலைஅடை



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.


No comments:

Post a Comment