Search This Blog

Sunday, May 4, 2014

Vazhakkai Podimaas

#வாழைக்காய் பொடிமாஸ் : #பொடிமாஸ் என்றவுடனேயே உருளை கிழங்கு பொடிமாஸ்தான் எல்லோருக்கும் நினைவிற்கு வரும். உருளை கிழங்கு பொடிமாஸ் வேகவைத்த உருளை கிழங்குடன் வெங்காயம் மற்றும் சில மசாலா சாமான்களை உபயோகப் படுத்தி செய்யப்படும் ஒரு கறியாகும்.
அதே போல வாழைக்காயையும் உபயோகித்து செய்யலாம். உருளை கிழங்கு பொடிமாஸ் போலவே மிக்க ருசியாய் இருக்கும்.
இனி செய்வது எப்படி என பார்ப்போம்.



தேவையான பொருட்கள் :
1                                            வாழைக்காய்
1 சிட்டிகை                          மஞ்சத்தூள்
1/4 Tsp                                  மிளகாய் தூள் 
1/4 Tsp                                  உப்பு
1/2                                        வெங்காயம், பொடியாக நறுக்கவும்
8                                           கறுவேப்பிலை
1 Tbsp                                   தேங்காய் துருவல் 

தாளிக்க :
1 Tsp                                     கடுகு
1 Tsp                                     உளுத்தம் பருப்பு
2                                           சிகப்பு மிளகாய், உடைத்து வைக்கவும்
1/4 Tsp                                 பெருங்காய தூள்
1 Tsp                                    எண்ணெய்

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வாழைக்காயை தோல் நீக்கி எடுத்துகொள்ளவும்.
அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.


காய் முக்கால் பாகம் வெந்தால் போதுமானது.

சிறிது சூடு ஆறியதும் காரட் துருவியில் துருவி வைக்கவும்.


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விடவும்.
கடுகு வெடிக்க விட்ட பின்னர் உளுத்தம் பருப்பு, சிகப்பு மிளகாய், பெருங்காய தூள் சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்த பின் மஞ்சத்தூள் ஒரு சிட்டிகையும், மிளகாய் தூள்  கருவேப்பிலையையும் சேர்க்கவும்.
இப்போது வாழைக்காய் துருவியதை சேர்த்து நன்கு கிளறவும்.


மூடியால் மூடி ஓரிரு நிமிடங்கள் சிறிய தீயின் மேல் அடுப்பில் வைத்திருக்கவும்.
.பின்னர் திறந்து தேங்காய் சேர்த்து கிளறி பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

மதிய உணவின் போது  சாம்பார் சாதத்துடன் மற்றும் ரசம் சாதத்துடன் மிக அருமையாக இருக்கும்.







No comments:

Post a Comment