Search This Blog

Friday, November 7, 2014

Spinach Kuzhi Paniyaram

#பசலைகீரைகுழிபணியாரம் : குழிபணியாரம் செய்யும் போது பொதுவாக வெங்காயம், மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து செய்யப்படுவதுதான் வழக்கம். ஆனால் இங்கு குழிபணியாரத்தின் சத்தை மேலும் அதிகரிக்க கொடிபசலை கீரையை சேர்த்து செய்யப்பட்டிருக்கிறது. இக்கீரையை சேர்ப்பதனால் நம் உடலுக்கு தேவையான நார் சத்தும் கிடைக்கிறது.
இனி எப்படி செய்வது என காணலாம்.

பசலைகீரை குழிபணியாரம்

தேவையான பொருட்கள் :
1 கப்                                   தோசை மாவு அ இட்லி மாவு
1/2 கப்                                    ரவா
2 Tbsp                                     பாப்பரை மாவு
1 Tbsp                                    ரவா
3/4 Tsp                                   உப்பு

தேவையான கீரைகள் :

10                                             கொடிபசலை கீரை, பொடியாக வெட்டிக்கொள்ளவும்
10                                            கறுவேப்பிலை
3 Tsp                                        கொத்தமல்லி நறுக்கியது
15                                             புதினா பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
மற்ற பொருட்கள் :
1                                              வெங்காயம், பொடியாக வெட்டிக்கொள்ளவும்
1 அ 2                                     பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி வைக்கவும்.
தாளிக்க:
1 Tsp                                       கடுகு
2 Tsp                                      உளுத்தம் பருப்பு
2 Tsp                                      கடலை பருப்பு
1 சிட்டிகை                           பெருங்கயபொடி
3 Tsp                                      எண்ணெய்

குழி பணியாரம் சுட்டெடுக்க தேவையான எண்ணெய்.
செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள மாவு அனைத்தையும் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பதினைந்து நிமிடங்கள் ஊற விடவும்.

பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
மற்றொரு அடுப்பில் குழி பணியாரக்கல்லை சூடாக்கவும்.

 கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு , பெருங்காயம் தாளித்த பிறகு பச்சை மிளகாய் கறுவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் வெங்காயம் சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும்.
மாவில் சேர்த்து கலக்கவும்.
வெட்டி வைத்துள்ள கீரைகளையும் சேர்த்து கலக்கவும்.
பணியார கல் சூடானதும் ஒவ்வொரு குழியிலும் இரண்டிரண்டு சொட்டு எண்ணெய் விடவும்.
ஒரு கரண்டியால் மாவை எடுத்து குழிகளை நிரப்பவும். மேலேயும் பணியாரத்தை சுற்றியும் ஒன்றிரண்டு சொட்டு எண்ணெய் விட்டு வேக விடவும்.
கொடிபசலை குழி பணியாரம்


ஓரத்தில் சிவந்தவுடன் ஒரு தேக்கரண்டியால் திருப்பி விட்டு வேக விடவும்.

கொடிபசலை குழி பணியாரம்


இரண்டு புறமும் பொன்னிறமானதும் பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சூடான சுவையான சத்தான கொடிபசலை குழி பணியாரம் தயார்.

கொடிபசலை குழி பணியாரம்

தக்காளி சட்னியுடன் சுவைக்கவும்.

குறிப்பு : பாப்பரை விதைகள்தான் கைவசம் இருக்கிறது என்றால் மிக்சியில் அதனை மாவாக பொடித்துக்கொள்ளவும்.



No comments:

Post a Comment