Search This Blog

Thursday, November 6, 2014

Vanilla-Cake-on-stove-top

#வெனிலாகேக்அடுப்பின்மேல்செய்முறை [ #VanillaCakeOnStoveTop ] : இது என் அம்மாவின் செய்முறை ஆகும்.  அவர்கள் வெண்ணெய் உபயோகித்து செய்வார்கள். ஆனால் இங்கு கடைகளில் உப்பில்லா வெண்ணெய் கிடைப்பதில்லை.அதனால் நான் ரீபைண்ட் சூரிய காந்தி எண்ணெயை உபயோகித்துள்ளேன். என்னிடம் கேக் செய்ய அவன் [ Oven ] இல்லாததால் அடுப்பின்மேல் [ #bakingonstovetop ] செய்துள்ளேன்.
இங்கு கேக்கிற்கு மாவு தயாரிப்பது எப்படி மற்றும் அடுப்பின் மேல் எவ்வாறு கேக்கை சுட்டெடுப்பது என விளக்கமாக கூற முயற்சி செய்கிறேன்.

Vanilla Cake


Ingredients :
1 1/4 Cupமைதா 
1 1/4 Tspபேக்கிங் பவுடர் [ Baking powder ]
3/4 Cupசர்க்கரை 
1 Tspசோம்பு
சிறு துண்டுஜாதிக்காய்
1 1/2 Cupரீபைண்ட் எண்ணெய் 
1/2 Cupபால்
2முட்டை
1/2 Tspவெனிலா எஸ்சென்ஸ்

உணவு கட்டி எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் அலுமினியம் காசரோல்கள் [ Aluminium casseroles ] 2 அல்லது 3 தேவை [ 500 ml கொள்ளளவு உடையது ]
  2 கப் மணல் தேவை.
குக்கர் தேவை.
இரும்பு தோசைக்கல் அல்லது தட்டையான இரும்பு வாணலி தேவை.

செய்முறை :
அலுமினியம் காசரோல்களில் எண்ணெய் அல்லது நெய் தடவி தயாராக வைக்கவும்.
மைதாவையும் baking powder ஐயும் ஒன்றாக கலந்து இரண்டு/மூன்று முறை சலித்து தனியாக எடுத்து வைக்கவும்.

Greased Aluminium casserole Sieve maida and baking powder

மிக்ஸியில் சர்க்கரை, சோம்பு, மற்றும் ஜாதிக்காயை நன்கு பொடித்தெடுத்து தனியாக வைக்கவும்.

Grind sugar, fennel & nutmeg into a fine powder

அடுப்பை கேக் சுட்டெடுக்க தயார் செய்ய :
மாவு தயாரிக்கும் முன்பு அடுப்பை தயார் செய்வது அவசியம்.
அப்போதுதான் கேக்கை சுடுவதற்கு ஏற்ற வெப்பத்தை குக்கர் அடைய ஏதுவாக இருக்கும்.
எடுத்துக்கொண்ட இரும்பு தோசைக்கல் அல்லது இரும்பு வாணலியை அடுப்பின் மேல் வைக்கவும்.
அதன் மேல் மணலை பரப்பவும்.
இப்போது குக்கரை மணலின் மேல் வைக்கவும்.
குக்கரின் உள்ளே அடியில் வைக்கும் தட்டை வைக்கவும்.
காஸ்கட்டை பொருத்தவும். ஆனால் குக்கரின் மேல் வெயிட் பொருத்த தேவையில்லை.
அதிக தீயில் 10 நிமிடங்கள் சூடாக்கவும்.
குக்கர் சூடாவதற்குள் மாவை தயார் செய்து விடலாம்.


மாவு தயாரிக்கும் முறை :

முட்டையை உடைத்து ஒரு சுத்தமான ஈரமில்லாத பாத்திரத்தில் ஊற்றவும். மின்சாரத்தில் இயங்கும் முட்டை அடிக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி நுரைக்க அடிக்கவும்.


சுமார் ஒரு நிமிடம் அடித்தால் போதுமானது.
அடித்த முட்டையில் பொடித்த சர்க்கரையை போட்டு அதே கருவியால் மேலும் ஒரு நிமிடம் அடிக்கவும். அல்லது கலவை கெட்டியாகும் வரை அடிக்கவும்.


இப்போது எண்ணெய், வெனிலா எஸ்சென்ஸ், மற்றும் 1/4 கப் பாலை சேர்த்து ஒரு மரக்கரண்டி அல்லது நீண்ட தேக்கரண்டியினால் கலந்து விடவும்.
கலந்த பிறகு மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.


இவ்வாறு கலக்கும் போது மாவு கெட்டியாக இருந்தால் சிறிது பாலை சேர்த்து கலக்கவும். மாவு நன்றாக கலந்து ஒன்று சேர்ந்தாற்போல மென்மையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.


எண்ணெய் தடவி வைத்துள்ள அலுமினியம் காசரோல்களில் முக்கால் பாகம் நிரம்பும் வரை மாவை ஊற்றவும். [ நான் இரண்டு அலுமினியம் காசரோல்களில் நிரப்பினேன் ].

Vanilla cake batter Fill 3/4 th of aluminium casserole with batter


இந்த வேளையில் குக்கரும் சரியான சூட்டை அடைந்திருக்கும்.
மாவு நிரப்பிய அலுமினியம் காசரோல்களை குக்கரினுள் வைத்து மூடவும்.
நடுத்தர தீயில் 40 முதல் 50 நிமிடங்களுக்கு சூடாக்கவும்.
கேக் தயாரானால் வாசனையே மூக்கை துளைக்கும்.

after 20 minutes of baking

ஒரு சுத்தமான குச்சியை கேக்கினுள் சொருகி எடுக்கவும்.
மாவு ஏதும் ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது என பொருள்.
இல்லாவிடின் மேலு 5 முதல் 10 நிமிடங்கள் அடுப்பில் சுட்டெடுக்கவும்.
கலந்த மாவின் அளவை பொறுத்து சுட்டெடுக்கும் நேரம் மாறு படும்.


Vanilla cake ready to take out of the cooker vanilla cake

கேக்கை குக்கரிலிருந்து எடுத்து வெளியே வைத்து ஆற விடவும்.
அலுமினியம் காசரோல்களிலிருந்து எடுத்து கம்பி வலை இருந்தால் அதன் மேல் வைத்து ஆற விடவும்.
இல்லாவிடின் இரண்டு  நீண்ட கரண்டியின் மேல் வைத்து ஆற விடவும்.
நன்கு ஆறிய பிறகு பின்னர் கத்தியால் துண்டுகள் போடவும்.

Vanilla cake
Vanilla cake Cut vanilla cake into pieces

சூடு முழுவதுமாக ஆறிய பின்னர் ஒரு காற்றுப் புகா பாத்திரத்தில் எடுத்து வைத்து சுமார் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

இம்மாதிரி சுவையும் மணமும் கொண்ட கேக்கை எந்த கேக் விற்கும் கடைகளிலும் கிடைக்காது.
சோம்பும் ஜாதிக்காயும் இந்த கேக்கிற்கு தனி சுவையை கொடுக்கின்றது.

குறிப்பு ;
விருப்பமானால் முந்திரி, உலர்ந்த திராட்சை அல்லது டூட்டி ப்ரூட்டி மாவினில் கலந்து பிறகு கேக் மாவின் மேல் தூவியும் கேக் சுட்டெடுக்கலாம்.

2 comments:

  1. அருமையான செய்முறை ...விளக்கப்படங்களும் அருமை

    ReplyDelete