Search This Blog

Saturday, January 31, 2015

Kuthiraivaali-Sakkarai-Pongal

#குதிரைவாலிசக்கரைபொங்கல் : #குதிரைவாலி #சிறுதானியங்கள் வகைகளுள் ஒன்று. அரிசி மற்றும் கோதுமையை ஒப்பிடும் போது குதிரைவாலியில் அதிக நார் சத்து நிரம்பியுள்ளது.
குதிரைவாலியை ஆங்கிலத்தில் Barnyard millet என அழைக்கப்படுகிறது.
இனி குதிரைவாலி சக்கரை பொங்கல் எவ்வாறு செய்யலாம் என காணலாம்.


குதிரைவாலி சக்கரை பொங்கல்


தேவையான பொருட்கள் :
1/2 கப் குதிரைவாலி அரிசி
1/4 கப் பயத்தம் பருப்பு
1/2 கப்பால்
1 சிட்டிகைஉப்பு 
1 கப்வெல்லம் [ adjust ]
4ஏலக்காய்
சிறு துண்டு ஜாதிக்காய்
2 Tspசர்க்கரை
1 சிட்டிகைபச்சை கற்பூரம் [ Edible Camphor ]
4 Tspநெய்
4 - 5முந்திரி பருப்பு
5 - 6பாதாம் பருப்பு
செய்முறை :
சக்கரை பொங்கல் செய்ய துவங்குவதற்கு 5 அ 6 மணி நேரம் முன்பே பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைக்கவும்.
பொங்கல் செய்ய துவங்குவதற்கு முன்பு ஊறிய பாதாம் பருப்பின் தோலை நீக்கி விட்டு சிறு துகள்களாக நறுக்கி தனியே வைக்கவும்.

சக்கரையுடன் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயை பொடித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியையும் பருப்பையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் இட்டு கழுவி 2 கப் தண்ணீர் மற்றும்  1/2 கப் பால் சேர்க்கவும்.
ஒரு சிட்டிகை உப்பும் சேர்க்கவும்.
குக்கரில் 1 கப் தண்ணீர் விட்டு குதிரைவாலி-பருப்பு உள்ள பாத்திரத்தை உள்ளே வைக்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி வேக விடவும்.
மூன்று விசில் வந்ததும் தீயை குறைத்து மேலும் 5 நிமிடங்கள் வேக விடவும். 
ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும்.

அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை நசுக்கி போடவும்.
மிதமான தீயில் கரையும் வரை கரண்டியால் கலக்கவும்.
வெல்லம் கரைந்ததும் மாசுக்களை நீக்க வடி கட்டவும்.
தனியே எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை சூடாக்கி நெய்யில் முந்திரியை சிவக்க வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.

ஆவி அடங்கி குக்கரை திறந்ததும் அடுப்பை மறுபடியும் பற்ற வைத்து ஒரு அடி கனமான  பாத்திரத்தை சிறிய தீயின் மேல் வைக்கவும்.
வெந்த அரிசி பருப்பை சேர்த்து கரண்டியால் நன்கு மசித்தவாறு கிளறவும்.
இப்போது வெல்லம் கலந்த தண்ணீரை சேர்க்கவும்.
கை விடாமல் நன்கு கிளறவும்.
ஒன்றாக சேர்ந்து வரும் வரை நன்கு கிளறவும்.
கடைசியாக ஏலக்காய்-ஜாதிக்காய் பொடியையும் நெய்யையும் 
பிறகு ஊறவைத்து நறுக்கி வைத்துள்ள பாதாம் பருப்பு துகள்களையும் சேர்த்து  கிளறவும்.

அடுப்பை அணைத்து விட்டு பச்சை கற்பூரம் நுணுக்கி போட்டு கலந்து விடவும்.
பின்னர் பரிமாறும் பாத்திரத்தில் குதிரைவாலி சக்கரை பொங்கல் எடுத்து வைக்கவும்.
குதிரைவாலி சக்கரை பொங்கல்
குதிரைவாலி சக்கரை பொங்கல் குதிரைவாலி சக்கரை பொங்கல்

கிண்ணத்தில் எடுத்து வைத்து வறுத்த முந்திரியால் அலங்கரித்து நெய் விட்டு சுவைக்கவும்.

குதிரைவாலி சக்கரை பொங்கல்

நெய்யை மேலே விட்டு சூடாக இருக்கும் போதே சுவைத்தால் ருசி அபாரமாக இருக்கும்.




மற்ற சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்ய
தினை பொட்டுக்கடலை உருண்டை
தினை பொட்டுக்கடலை
வரகரிசி திருவாதிரை களி
வரகரிசி திருவாதிரை களி
தினை இனிப்பு குழி பணியாரம்
தினை இனிப்பு குழி பணியாரம்
தினை சக்கரை பொங்கல்
தினை சக்கரை பொங்கல்
அவல் கேசரி
அவல் கேசரி - அவல் இனிப்பு


மற்ற சிறுதானிய சமையல் குறிப்பிற்கு

சிறுதானிய சமையல் வகைகள்





Thursday, January 29, 2015

Vengayam-Thakkali-Chutney

#வெங்காயம்தக்காளிசட்னி : #வெங்காயம் மற்றும் #தக்காளி யை வதக்கி வறுத்த உளுத்தம் பருப்பு மற்றும் சிகப்பு மிளகாயுடன் சேர்த்து அரைத்து எடுத்தால் அருமையான சட்னி தயார். வெங்காயத்தின் இனிப்பு சுவையும் மணமும் இந்த சட்னியின் ருசியை மேலும் சுவையுடையதாக ஆக்குகிறது.
சென்ற பதிவில் கார சாரமான பூண்டு தக்காளி சட்னியின் செய்முறையை பார்த்தோம்.
இனி வெங்காயம் தக்காளி சட்னியை எவ்வாறு செய்வது என காணலாம்.

வெங்காயம் தக்காளி சட்னி

தேவையான பொருட்கள் :
2தக்காளி
2வெங்காயம், பெரிய அளவு
4சிகப்பு மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
2 Tspஉளுத்தம் பருப்பு
துண்டு சிறியது பெருங்காயம்
2 அ 3பூண்டு பற்கள்
கோலிகுண்டுஅளவுபுளி
1 1/2 Tspஉப்பு [ adjust ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1/4 Tspபெருங்காயத்தூள்
10கறுவேப்பிலை
2 Tspஎண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் விட்டு சூடானதும் சிகப்பு மிளகாயையும் பெருங்காயத்தையும்  சிவக்க வறுத்து எடுக்கவும்.
அடுத்து உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.


அதே வாணலியில் மேலும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி எடுக்கவும். நன்கு வாசனை வரும் வரை வதக்கி எடுக்கவும்.
அடுத்து அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு தக்காளியை வதக்கவும்.
மிருதுவாகவும் வேகும் வரையிலும் வதக்கி எடுக்கவும்.
அனைத்தையும் ஆற வைக்கவும்.


இவையனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
வாணலியை எண்ணெயுடன் சூடாக்கி கடுகு சேர்த்து வெடித்த பின்னர் கறுவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை கிண்ணத்தில் உள்ள சட்னியின் மேலே கொட்டவும்.
கலந்து பரிமாறவும்.

வெங்காயம் தக்காளி சட்னி

இட்லிதோசை, மற்றும் ஆப்பம் போன்ற உணவு வகைகளுடன் ருசிக்க அருமையாக இருக்கும்.





சில சட்னி வகைகளின் சமையல் குறிப்புகள் :

  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை காட்டினால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பின் பக்கத்திற்கு செல்லலாம்

பூண்டு மிளகாய் சட்னி கறுவேப்பிலை பூண்டுமிளகாய்சட்னி பூண்டு தக்காளி சட்னி
கொத்தமல்லி தேங்காய் சட்னி நெல்லிக்காய் புதினா துவையல்







இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

Wednesday, January 28, 2015

Poondu-Thakkali-Chutney

#பூண்டுதக்காளிசட்னி : ஒரு கார சாரமான சட்னி செய்முறையை காணலாம். மைக்ரோவேவில் இந்த சட்னிக்கு தேவையான பொருட்களை வறுத்து எடுப்பது எப்படி என்றும் பார்க்கலாம்.

பூண்டு தக்காளி சட்னி

தேவையான பொருட்கள் :
2தக்காளி
8சிகப்பு மிளகாய்
12பூண்டு பற்கள்
கோலிகுண்டு அளவு புளி
1 1/2 Tspஉப்பு [ adjust ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
1/4 Tspபெருங்காயத்தூள்
10கறுவேப்பிலை
2 Tspஎண்ணெய்



செய்முறை :
ஒரு மைக்ரோவேவில் வைக்கக்கூடிய பீங்கான் அல்லது கண்ணாடி கிண்ணத்தில் சிகப்பு மிளகாயை எடுத்துக்கொள்ளவும்.
ஓரிரு துளிகள் எண்ணெய் விட்டு தடவி மைக்ரோவேவ் HIGH -ல் 1 நிமிடம் வறுக்கவும்.
வறுபட்டதை ஒரு தட்டிற்கு மாற்றவும்.

அதே கிண்ணத்தில் பூண்டு பற்களை போட்டு 2 துளிகள் எண்ணெய் விட்டு 
முன்பு போலவே மைக்ரோவேவ் HIGH -ல் 1 நிமிடம் சூடு பண்ணவும்.
பூண்டு இலேசாக சிவந்து வெந்து விட்டால் வறுபட்ட மிளகாய் உள்ள தட்டில் எடுத்து வைக்கவும்.
இல்லையெனில் மேலும் சில  மணித் துளிகள் வைத்து எடுக்கவும்.


தட்டிற்கு மாற்றிய பிறகு தக்காளியை துண்டுகளாக்கி அதே கிண்ணத்தில் போட்டு சில துளிகள் எண்ணெய் விட்டு கலக்கவும்.
மைக்ரோவேவ் HIGH -ல் 1 நிமிடம் வேக விடவும்.
 விடவும்.
எல்லாவற்றையும் ஆற விடவும்.


ஆற வைத்த பிறகு மிக்சியில் மைக்ரோவேவ் செய்த பொருட்கள், உப்பு மற்றும் புளி சேர்த்து அரைக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அடுப்பில்  வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு வெடிக்க விட்ட பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்த பின்னர் பெருங்காயம் மற்றும் கறுவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை சட்னியின் மேலே கொட்டவும்.

பூண்டு தக்காளி சட்னி

இட்லிஆப்பம் மற்றும் தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையான சட்னி ஆகும்.
 காரம் அதிகமாக இருப்பதால் சட்னியின் மேல் நல்லெண்ணெய் ஊற்றி தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிக மிக அருமையாகவும் ருசியாகவும் இருக்கும்.

குறிப்பு :
மைக்ரோவேவ் இல்லாவிடின் வாணலியில் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாக வறுத்து மற்றும் வதக்கி எடுக்கவும்.




சில சட்னி வகைகளின் சமையல் குறிப்புகள் :

  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை காட்டினால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பின் பக்கத்திற்கு செல்லலாம்

பூண்டு மிளகாய் சட்னி கறுவேப்பிலை பூண்டுமிளகாய்சட்னி வெங்காயம் தக்காளி சட்னி
கொத்தமல்லி தேங்காய் சட்னி நெல்லிக்காய் புதினா துவையல்







இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

Saturday, January 24, 2015

Potato-Idly-Sambar

#உருளைகிழங்குஇட்லிசாம்பார் :


உருளைகிழங்கு இட்லி சாம்பார்


தேவையான பொருட்கள் :
1/2 கப்பயத்தம் பருப்பு
சிறு நெல்லி அளவுபுளி, வெந்நீரில் ஊற வைக்கவும்
1 பெரியதுஉருளை கிழங்கு
1/2குடைமிளகாய், பெரிய துண்டுகளாக வெட்டவும் 
2பச்சை மிளகாய், நீளவாக்கில் கீறி வைக்கவும்
1 வெங்காயம், வெட்டி வைக்கவும்
சிறிதளவுகொத்தமல்லி தழை 
10 - 15கருவேப்பிலை 
1 சிறியதுதக்காளி, நறுக்கி வைக்கவும்
2 Tspமணத்தக்காளி விதை [ optional ]
தேவையான பொடிகள் :
2 Tspசாம்பார் மிளகாய் தூள்
1 Tspகொத்தமல்லி தூள்
1 pinchமஞ்சத்தூள்
1 Tspஅரைத்து விட்ட குழம்பு தூள் [ optional ]
1/2 Tspசிகப்பு மிளகாய் தூள் [ optional ]
2 Tspஉப்பு [ adjust ]
தாளிக்க :
1 Tspகடுகு
1/4 Tspபெருங்கயத்தூள்
2 Tspஎண்ணெய்

செய்முறை :
உருளை கிழங்கை நன்கு கழுவி துண்டுகளாக்கவும்.
குக்கரில் 1 கப் தண்ணீர் மற்றும் 1/2 Tsp உப்பு சேர்க்கவும்.
உருளை கிழங்கை குக்கரில் போட்டு மூடி வெயிட் பொருத்தி 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து கிழங்கை வெளியே எடுத்து தோலுரித்து வைக்கவும்.

மறுபடியும் குக்கரில் பருப்பை கழுவி சேர்க்கவும்.
1 கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சத்தூள் சேர்த்து மூடி வேக வைக்கவும்.
ஒரு விசில் வந்தவுடன் தீயை குறைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கியதும் எடுத்து தனியே வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்டபின்னர் கறுவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வெளிர் நிறமாக மாறியதும் தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
பிறகு குடை மிளகாய் துண்டுகளையும் மணத்தக்காளி விதைகளையும் [ இருந்தால் ] சேர்த்து வதக்கவும்.
குடை மிளகாய் நன்கு வதங்கிய பின்னர் சாம்பார் மிளகாய் தூள், மஞ்சத்தூள், கொத்தமல்லித்தூள் சேர்த்து ஒரு வதக்கு வதக்கிய பின் வேக வைத்துள்ள பருப்பை சேர்க்கவும். 3/4 கப் தண்ணீரையும் சேர்க்கவும்.
உருளை கிழங்கை கைகளால் பிட்டு போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
1/2 கப் தண்ணீரில் புளியை கரைத்து  வடி கட்டி கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரில் சேர்க்கவும்.
புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதித்தால் போதும்.
கடைசியாக அரைத்து விட்ட குழம்பு தூள் சேர்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான உருளை கிழங்கு சாம்பார் தயார்.

உருளைகிழங்கு இட்லி சாம்பார்
உருளைகிழங்கு இட்லி சாம்பார் உருளைகிழங்கு இட்லி சாம்பார்

ஒரு தட்டில் இட்லியை எடுத்து அதன் மேல் சாம்பாரை ஊற்றவும்.
ஒரு தேக்கரண்டி எண்ணெய் விடவும். சுவைக்கவும்.
ம்ம்... ஆஹா!! என்ன சுவை!! .....


Idly served with potato sambar












Friday, January 23, 2015

Papaya-Radish-Lentil-Salad

#பப்பாளிக்காய்முள்ளங்கிபருப்புசாலட் : சென்ற பதிவில் பப்பாளிக்காய் காரட் சாலட் செய்வது எப்படி என பார்த்தோம்.
பப்பாளிக்காயில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருப்பதால் அடிக்கடி நமது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
இங்கு முள்ளங்கியுடன் ஒரு வித்தியாசமான சாலட் செய்யும் முறையை காண்போம்.

பப்பாளிக்காய் முள்ளங்கி பருப்பு சாலட்

தேவையான பொருட்கள் :
1 cupபப்பாளிக்காய் துருவியது
1/4 cupமுள்ளங்கி துருவியது
1/8 cupபயத்தம் பருப்பு
1 or 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது [ adjust ]
1 Tspகொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
1 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]
3/4 Tspஉப்பு [ Adjust ]

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பயத்தம் பருப்பை எடுத்துக்கொள்ளவும்.
ஓரிரு முறை கழுவி தண்ணீரை வடித்து விடவும்.
அதனுடன் துருவிய பப்பாளிக்காய், முள்ளங்கி மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலக்கி சுமார் 20 நிமிடங்கள் தனியே எடுத்து வைக்கவும்.
முள்ளங்கியிலிருந்து வெளி வரும் தண்ணீரில் பருப்பு நன்கு ஊறி விடும்.
20 நிமிடங்களுக்கு பின்னர் பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
உப்பு சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
முள்ளங்கி இலை அல்லது கொத்தமல்லி கொண்டு அலங்கரிக்கவும்.
மதிய உணவின் போது அல்லது மாலை நேர சிற்றுண்டியாக சுவைக்கலாம்.


பப்பாளிக்காய் முள்ளங்கி பருப்பு சாலட்

பப்பாளிக்காய் முள்ளங்கி பருப்பு சாலட்






மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

வாழைப்பூ வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைப்பூ தயிர் 
பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட்
சாலட்
நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி
மாங்காய் பச்சடி
மாங்காய்
பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி