Search This Blog

Tuesday, June 30, 2015

Peerkangkai-Thuvaiyal

#பீர்கங்காய்துவையல் : #பீர்கங்காய் ஒருவிதமான இனிப்பு சுவையுடையது. தோல் வரிகளுடன் சிறிது கடினமாக இருக்கும். ஆனால் உள்ளே சதை பற்று மிகவும் மென்மையானது. மேலும் எளிதில் வேகக் கூடியது. பொதுவாக சமைக்கும் போது தோலை நீக்கிய பின்னர் உள்ளே உள்ள சதை பற்றை அரிந்து சாம்பார் அல்லது கூட்டு செய்ய சேர்க்கப்படுகிறது. இந்த தோலையும் எண்ணெய் விட்டு வதக்கினால் வெந்து விடும். பிறகு சுவைக்கு தேவையான பொருட்களையும் வறுத்து தேங்காயுடன் சேர்த்து அருமையான சட்னி தயாரிக்கலாம்.
தோல் மட்டுமின்றி முழு பீர்கங்காய் கொண்டு சட்னி செய்தாலும் அருமையாக இருக்கும்.
இனி செய்முறையை பார்ப்போம்.

பீர்கங்காய் துவையல்

தேவையான பொருட்கள் :
1/2 கப்பீர்கங்காய் தோல்
1/2 கப்பீர்கங்காய் துண்டுகள்
3 - 4 Tspதேங்காய் துருவல்
1 1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/4 Tspகொத்தமல்லி விதை
2 or 3சிகப்பு மிளகாய்
சிறு துண்டுபெருங்காயம்
1 or 2 Tspஇஞ்சி துண்டுகள்
கோலிகுண்டு  அளவு புளி
1/2 Tspஉப்பு
2 Tspஎண்ணெய்

செய்முறை :
புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு சுடு தண்ணீரில் ஊற வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானபின் மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
சிவந்த பின் எடுத்து தனியே வைக்கவும்.
பெருங்காயத்தை வறுத்தெடுக்கவும்.
மீண்டும் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு இஞ்சியை வாசனை வரும் வரை வதக்கி எடுக்கவும்.
இப்போது மறுபடியும் எண்ணெய் விட்டு பீர்கங்காய் தோல் மற்றும் பீர்கங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
மூடி போட்டு தோல் வேகும் வரை சிறிய தீயில் வைத்திருக்கவும்.
அவ்வப்போது மூடியை திறந்து கரண்டியால் பிரட்டி விட்ட பின் மூடி வேக விடவும்.
வறுத்த பொருட்கள் அனைத்தும் நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு மற்ற பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
உப்பு சரி பார்த்த பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
பொங்கல், உப்புமா போன்ற டிபன் வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.





மேலும் சில சட்னி வகைகள் :

இஞ்சி துவையல்
இஞ்சி துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
கரிசலாங்கண்ணி
கொத்தமல்லி சட்னி 1
கொத்தமல்லி
கொத்தமல்லி விதை சட்னி
கொத்தமல்லி விதை
கொத்தமல்லி புதினா துவையல்
கொத்தமல்லி புதினா

Thursday, June 25, 2015

Drinks-for-all-Seasons

#சுவைமிகுபானங்கள் : #பானங்கள் அந்தந்த காலத்திற்கு உகந்தவாறு அமைவது அவசியம். குளிர் காலத்தில் பானங்கள் சூடாக இருந்தால் குளிருக்கு இதமாக இருக்கும். அதே போல வெய்யில் காலத்தில் தாகத்தை தணிக்கவும் உடல் உஷ்ணத்தை குறைக்கவும் கூடிய பானங்கள் அருந்துவது இயல்பு. பருவ காலத்திற்கு ஏற்றவாறு அதன் தன்மை மாறுபடும்.
இதை தவிர கஞ்சி போன்ற பானங்கள் ஒரு முழு உணவாக அல்லது உடல் நல குறைவு ஏற்படும் காலங்களில் அருந்தப்படுகிறது.
இத்தகைய சுவைமிகு பானங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது..
  • கீழே உள்ள படங்களின் மேல் அம்பு குறி [ cursor ஐ ] யை வைத்தால் சமையல் வகைகளின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் தங்களை பதிவிற்கு எடுத்துச் செல்லும்.

கஞ்சி வகைகள்
கஞ்சி வகைகள்

சூப் வகைகள்
சூப் வகைகள்

பானங்கள் மற்றும் பழ ரசங்கள்
பானங்கள் மற்றும் பழ ரசங்கள்

Fruit-Juices-and-Beverages

#பானங்கள் மற்றும் #பழரசங்கள் : தேநீர், மோர் போன்ற பானங்கள் மற்றும் பழங்களை கொண்டு செய்யப்பட்ட பழ ரசங்களின் இணைப்புகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

முலாம்பழம் மாங்காய் பழரசம்
முலாம்பழம் மாங்காய் பழரசம்

  • கீழே உள்ள படங்களின் மேல் அம்பு குறி [ cursor ஐ ] யை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் தங்களை பதிவிற்கு எடுத்துச் செல்லும்.

தேநீர் பானம் வகைகள்
நீர்மோர்
நீர்மோர்
பானகம்
பானகம்
எலுமிச்சை இஞ்சி பானம்
எலுமிச்சை இஞ்சி பானம்
கிரீன்டீ புதினாவுடன்
கிரீன்டீ புதினாவுடன்
கிரீன்டீ துளசியுடன்
கிரீன்டீ துளசியுடன்
புதினா கஷாயம்
புதினா கஷாயம்
டீ - தேநீர்
டீ - தேநீர்


பழரச பானம் வகைகள்
மாங்காய்பானம் - ஆம்பண்ணா
மாங்காய்பானம் - ஆம்பண்ணா
முலாம்பழம் ஆரஞ்சு பழரசம்
முலாம்பழம் ஆரஞ்சு பழரசம்
முலாம்பழம் துளசி பழரசம்
முலாம்பழம் துளசி பழரசம்
முலாம்பழம் புதினா பழரசம்
முலாம்பழம் புதினா பழரசம்
முலாம்பழம் மாங்காய் பழரசம்
முலாம்பழம் மாங்காய் பழரசம்
முலாம்பழம் மாம்பழ பழரசம்
முலாம்பழம் மாம்பழ பழரசம்
தர்பூசணி பழரசம்
தர்பூசணி பழரசம்
முலாம்பழம் ஆப்பிள் பழரசம்
முலாம்பழம் ஆப்பிள் பழரசம்
முலாம்பழம் ஆரஞ்சு பழரசம்
முலாம்பழம் ஆரஞ்சு பழரசம்





Thursday, June 18, 2015

Cholam-Sorghum

#சோளம் : #சிறுதானியம் வகைகளில் மிகவும் அதிகமாக இந்தியாவில் பயிரிடப்படும் தானியம் ஆகும்.
இவை வறண்ட பகுதிகளில் மழையை ஆதாரமாக கொண்டு விளைவிக்கப்படுகிறது. சோளத்தை பெரும்பாலும் பூச்சிகளின் தாக்கம் இருப்பதில்லை. அதனால் இப்பயிருக்கு பூச்சிகொல்லிகளை அதிக அளவில் பயன் படுத்துவது இல்லை.
சோளத்தில் உடலுக்கு தேவையான புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், இரும்பு போன்ற தாது பொருட்கள், நார் சத்து, செறிவூட்டப் படாத கொழுப்பு மற்றும் அத்தியாவசியமான விட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறந்த ஆக்ஸிஜனேற்றியும் [ antioxidant ] ஆகும்.
மற்ற #சிறுதானியங்கள் போல இதுவும் பசை தன்மை அற்றது. அமிலத்தன்மையை உருவாக்குவது இல்லை.
ஆனால் மூல நோயாளிகளுக்கு சோளம் ஏற்றதல்ல.
மேலும் அறிந்துகொள்ள கீழ்காணும் இணைப்பை சொடுக்கவும்.
சோளம்
இங்கு சோளம் உபயோகித்து செய்யப்பட்ட உணவு வகைகளின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை [ cursor ஐ ] வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பு பதிவை காணலாம்.
சிற்றுண்டி வகைகள்
சோள இட்லி
சோள இட்லி
சோள குழிபணியாரம்
சோள குழிபணியாரம்
சோளம் ஆப்பம்
சோளம் ஆப்பம்
சோளம் தோசை
சோளம் தோசை
சோள கஞ்சி
சோளம் கஞ்சி





Wednesday, June 17, 2015

Chola-Kanji

#சோளகஞ்சி : இந்தியாவில் மிக அதிகமாக விளைவிக்கப்படும் சிறு தானியங்களில் #சோளம் ஒன்றாகும். இது ஆங்கிலத்தில் #Sorghum என அழைக்கப்படுகிறது.
சோளத்தில் இரும்பு, கால்சியம், ஆகிய தாதுக்களும் தயமின், பி கரோட்டின் மற்றும் ரிபோப்ளவின் போன்ற விட்டமின்களும் நிறைந்துள்ளன.
மேலும் அறிய
சிறு தானியங்கள்
முழு சோள தானியம் மற்றும் சோள மாவு உபயோகப்படுத்தி செய்யப்படும் சமையல் செய்முறைகளை இதுவரை பார்த்திருக்கிறோம்.
இங்கு உடைத்த சோளம் [ சோள ரவா ] உபயோகப் படுத்தி கஞ்சி செய்வது எப்படி என பார்ப்போம்.

சோள கஞ்சி பால் கலந்தது

தேவையான பொருட்கள் :
1/4 கப்சோளம் உடைத்தது [ சோள ரவா ]
1/2 கப்பால்
1/2 கப்தயிர் கடைந்தது
1/2 Tsp உப்பு
1/8 Tspஓமம் 
1/8 Tspபெருங்கயத்தூள் 
1/4 Tspகடுகு 
5 - 6கருவேப்பிலை
1/2 Tspஎண்ணெய் 



செய்முறை :
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1 1/4 கப் தண்ணீர் விட்டு உடைத்த சோளத்தை சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.
கரண்டியால் விடாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
சில நிமிடங்களில் கஞ்சி பதத்தை அடைந்து விடும்.
மேலும் சில நிமிடங்கள் சோளம்  நன்கு மலர்ந்து வேகும் வரை மிக சிறிய தீயில் கொதிக்க விட்டு  உப்பு சேர்த்து இறக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து பால் கலந்து மேலே ஓமம் தூவி சூடாக பருகலாம்.
அல்லது
தயாரித்த கஞ்சியை ஆற வைத்து தயிர் ஊற்றி கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காய தூள் மற்றும் கறுவேப்பிலை தாளித்து கொட்டியும் பருகலாம்.

விருப்பமான துவையல் அல்லது ஊறுகாய் தொட்டுக்கொண்டு சுவைக்கலாம்.
சோள கஞ்சி பால் கலந்தது சோள கஞ்சி மோர் கலந்தது



மற்ற கஞ்சி வகைகள் :
குதிரைவாலி வெந்தய கஞ்சி கோதுமைரவா கஞ்சி மக்காசோளரவா கஞ்சி கம்பு கூழ்


பலவகையான சமையல் செய்முறைகள்

சிறுதானிய சமையல் செய்முறைகள்


Tuesday, June 16, 2015

Maangai-kaara-chutney

#மாங்காய்காரசட்னி : #மாங்காய் உபயோகித்து மற்றுமொரு சட்னி. முன்பு பதிவிட்ட அனைத்து சட்னியிலும் மாங்காயுடன் தேங்காய்  துருவலை சேர்த்துதான் சட்னி செய்துள்ளேன். இந்த முறை மாங்காய் மட்டுமே உபயோகித்து ஒரு சட்னி முயற்சி செய்தேன்.வெகு சமீபத்தில் தொலை காட்சியில் ரேவதி சண்முகம் அவர்கள் செய்து காட்டிய முறையை ஒட்டி இருக்கும். ஆனால் நான் மேலும் சில பொருட்களையும் புதினாவையும் கூடுதலாக சேர்த்து செய்துள்ளேன்.
இனி சட்னி செய்முறையை காண்போம்.


மாங்காய் கார சட்னி

தேவையான பொருட்கள் :
3/4 கப்மாங்காய் துருவியது
3 or 4சிகப்பு மிளகாய்
3 or 4பச்சை மிளகாய்
1 Tspகடுகு
1 1/2 Tspஉளுத்தம் பருப்பு
2 Tspகடலை பருப்பு
1/2 Tspகொத்தமல்லி விதை
1/4 Tspபெருங்காய தூள்
20 - 25புதினா இலைகள்
1 Tspஎண்ணெய்
1 Tspஉப்பு [ adjust ]

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகை வெடிக்க விட்ட பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை சேர்க்கவும்.
சாரணியால் திராவி விட்டுக்கொண்டே இருக்கவும்.
பருப்பு  இலேசாக நிறம் மாறியதும்  கொத்தமல்லி விதை மற்றும் பெருங்காய தூளை சேர்த்து வறுக்கவும்.
பொன்னிறமாக வறுபட்டவுடன் சிகப்பு மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஓரிரு நிமிடம் வதக்கவும்.
மிளகாயை இலேசாக வறுத்தால் போதுமானது.
அடுப்பை அணைத்து விட்டு வறுத்த பொருட்களை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
வாணலியில் துருவிய மாங்காயை சேர்த்து இருக்கும் சூட்டில் வதக்கவும்.
எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
உப்பு சரி பார்த்த பின்னர் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சாதத்தில் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
பொங்கல், & இட்லி மற்றும் தோசை ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
Maangai Spicy Chutney [ Raw mango spicy chutney ]





மேலும் சில சட்னி வகைகள் முயற்சி செய்து பார்க்க
மாங்காய் தேங்காய் சட்னி
மாங்காய் தேங்காய் சட்னி
சிகப்பு பூண்டு மிளகாய் சட்னி
சிகப்பு பூண்டு மிளகாய் சட்னி
மாங்காய் சட்னி 1
மாங்காய்
சட்னி 1
வல்லாரை சட்னி 1
வல்லாரை
சட்னி 1
வல்லாரை பருப்பு துவையல்
வல்லாரை பருப்பு துவையல்