Search This Blog

Showing posts with label கடப்பா. Show all posts
Showing posts with label கடப்பா. Show all posts

Monday, January 27, 2014

Kadappa

#கடப்பா : கடப்பா என்பது இந்தியாவின் தஞ்சாவூர் பகுதிகளில் இட்லிக்கு தொட்டுக்கொள்ளும் குருமா போன்ற உணவாகும். ஆனால் குருமாவை விட நீர்க்க இருக்கும். இது  உருளை கிழங்கு, பச்சை பருப்பு ஆகியவற்றுடன் பிரத்தியேகமாக அரைத்த மசாலாவுடன் சேர்த்து செய்யப்படுகிறது. எப்போதும் இட்லியை சாம்பார் அல்லது சட்னியுடன் சாப்பிடுவதற்கு பதில் மாறுதலுக்காக கடப்பாவை செய்து ருசிக்கலாம். ஒருமுறை சாப்பிட்டு சுவைத்தவுடன் மறுமுறையும் செய்ய தூண்டும். அத்தகைய ருசி உடையது இந்த கடப்பா!!

கடப்பா

தேவையான பொருட்கள் :


2                                    உருளை கிழங்கு வேக வைத்தது
4 Tbsp                           பச்சை பருப்பு வேக வைத்தது
1 Tbsp                           காலி ப்ளோவேர் துண்டுகள்
2 Tbsp                          காரட் துண்டுகள்
1 சிறியது                 தக்காளி, துண்டுகளாக்கவும்
1 நடுத்தர                 வெங்காயம், நீள வாக்கில் அறியவும்
1/2 Tsp                         உப்பு

மசாலா அரைக்க :

4 Tsp                         தேங்காய் துருவல்
1 Tsp                          கச காசா
4                                 முந்திரி பருப்பு
1 1/2 Tsp                    சீரகம்
2                                 ஏலக்காய்
4                                 சின்ன வெங்காயம்
3 ( அட்ஜஸ்ட் )      பச்சை மிளகாய்

தாளிக்க :
1/2 Tsp                        சீரகம்
4                                  கிராம்பு
1 சிறு துண்டு         பட்டை
1 Tsp                           எண்ணெய்

செய்முறை :
மசாலாவிற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
முதலில் சீரகம் தாளித்து அடுத்து கிராம்பு மற்றும் பட்டை சேர்க்கவும்.
அடுத்து கருவேப்பிலை மற்றும் நீள வாக்கில் மெல்லியதாக அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் சிறிது நிறம் மாறியதும் தக்காளி மற்றும் காய்களை  சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
இப்போது பருப்பை சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு சிறிய தீயில் கொதிக்க விடவும்.
காய்கள் வெந்த பிறகு உருளை கிழங்கை கையினால் துண்டுகளாக்கி லேசாக நசுக்கி சேர்க்கவும்.
மசாலாவையும் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கடப்பா

உப்பு சரி பார்க்கவும்.
எல்லாம் ஒன்றுபோல் சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.


கடப்பா

இட்லியை ஒரு தட்டில் எடுத்து அதன் மேல் கடப்பாவை ஊற்றி மிதக்க விட்டு சுவைக்கவும். ஆஹா!... என்ன சுவை!!.. ஆஹாஹா..



மற்ற மசாலா குழம்பு வகைகளின் சமையல் குறிப்புகள்

அவியல் காலிப்ளவர் தக்காளி குருமா குடைமிளகாய் குருமா