Search This Blog

Showing posts with label Pearl Millet Murukku. Show all posts
Showing posts with label Pearl Millet Murukku. Show all posts

Tuesday, September 30, 2014

Kambu-Murukku

#கம்புமுறுக்கு : #கம்பு உபயோகித்து டிபன் வகைகளை  மட்டும் இல்லாமல் மற்ற தின் பண்டங்களும் செய்து பார்க்கலாமே என முயற்சி செய்ததுதான் இந்த முறுக்கு. கொடுக்கப்பட்டுள்ள அளவு கொண்டு 6 அல்லது 7 நடுத்தர அளவு முறுக்குகள் செய்யலாம்.
இனி செய்முறையை காண்போம்.

கம்பு முறுக்கு


தேவையான பொருட்கள் :
1/2 Cupகம்பு மாவு[ Pearl Millet Flour ]
1 Tbspகடலை மாவு [ Gram Flour ]
1 1/4 Tbspபொட்டுகடலை மாவு [ Pottukadalai maavu ]
1/2 Tspஉப்பு  [ Adjust ]
1/2 Tspசிகப்பு மிளகாய் தூள்
2 pinchபெருங்காயம்
1/4 Tspஓமம்[ Optional ]
1/4 Tspசீரகம்
1/4 Tspஎள்ளு
1 Tspசூடான எண்ணெய்

பொரித்தெடுக்க தேவையான எண்ணெய்.
முறுக்கு பிழிய முறுக்கு அச்சு.

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.

கொடுக்கப்பட்டுள்ள மாவு மற்ற பொடிகள் அனைத்தையும் ஒரு பேசின் அல்லது வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.


கைகளால் நன்கு கலந்து விடவும்.

ஒரு தேக்கரண்டி சூடான எண்ணெயை மாவில் விட்டு கைகளால் பிசறி விடவும்.

பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கெட்டியான மாவாக பிசைந்துக் கொள்ளவும்.

முறுக்கு பிழியும் அச்சில் முறுக்கு துவாரம் உள்ள தட்டை போட்டு மாவை நிரப்பவும்.

எண்ணெய் சூடாகி விட்டதா என பார்த்த பின்னர் சிறு தட்டிலோ அல்லது சாரணியின் பின்புறமோ முறுக்கை பிழிந்து எண்ணையில் கவனமாக மெதுவாக போடவும்.
எடுத்துக்கொண்ட எண்ணெயின் அளவிற்கு ஏற்றவாறு ஒரு தடவைக்கு 3 அல்லது 4 முறுக்குளை போட்டு பொரிக்கவும்.


ஓரிரு நிமிடங்கள் அப்படியே பொரிய விடவும்.


பின்னர் சாரணியால் திருப்பிவிட்டு பொரிக்கவும்.

கம்பு முறுக்கு

பொரிவது அடங்கியவுடன் எடுத்து டிஷ்யு தாளின் மேல் வைக்கவும்.


கம்பு முறுக்கு

மறுபடியும் எண்ணெய் சரியான சூட்டில் இருக்கிறதா என சோதித்த பின்னர் அடுத்த ஈடு முறுக்குகளை போட்டு பொரிக்கவும்.

பின்னர் காற்று புகா டப்பாவில் எடுத்து வைத்து பத்திரபடுத்தவும்.

கம்பு முறுக்கு

சுவையான கம்பு முறுக்கு தயார். டீ அல்லது காபியுடன் சுவைக்க அருமையாக இருக்கும்.

குறிப்பு :
அதிக அளவில் செய்யும் போது ஒரே முறை மாவை தண்ணீர் விட்டு பிசைய கூடாது. எல்லா பொருட்களையும் கலந்து சூடான எண்ணெய் விட்டு பிசறி வைக்கவும். 
அதிலிருந்து சிறிதளவு இரண்டு அல்லது மூன்று முறைக்கு தேவையானதை தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
மறுபடியும் தேவையான மாவு இரண்டாவது ஈடு அடுப்பில் இருக்கும் பொது தயார் செய்தால் எல்லாவற்றின் சுவையும் ஒரே சுவையுடன் இருக்கும்.
ஒரே தடவை பிசைந்து போடும் பொது கடைசியாக போகப்போக முறுக்கு கடுக்கென்று இருக்கும்.