Search This Blog

Showing posts with label diwali sweet. Show all posts
Showing posts with label diwali sweet. Show all posts

Saturday, September 27, 2014

Payatham Paruppu Urundai

#பயத்தம்பருப்புஉருண்டை : #ரவாஉருண்டை போலவே இதுவும் பாரம்பரியமாக தீபாவளியின் போது செய்யப்படும் இனிப்பு வகைகளில் ஒன்றாகும். இவைகள் இரண்டையும் புதிய நெய் காய்ச்சும் போது செய்தால் சுவையும் மணமும் மிக மிக அருமையாக இருக்கும். உருண்டை பிடிப்பதுதான் சிறிது சிரமமான வேலை. ஆனால் ருசியை நினைத்தால் உருண்டை பிடிப்பது சிரமமாக தோன்றாது.
மேலும் இந்த உருண்டை ரவா உருண்டையை காட்டிலும் சத்துக்கள் நிறைந்தது. பருப்பில் செய்திருப்பதால் ப்ரோடீன் சத்து அதிகமாக உள்ள தின் பண்டமாகும். குழைந்தைகளுக்கு அவசியம் செய்து கொடுக்க வண்டிய இனிப்பாகும்.
இனி எப்படி என காண்போம்.

பயத்தம்பருப்பு உருண்டை


தேவையான பொருட்கள் :
1/2 கப்                               பயத்தம் பருப்பு
1/2 கப்                               சர்க்கரை
2 அ 3                                 ஏலக்காய்
1/4 கப்                               நெய்
5 - 6                                    முந்திரி பருப்பு

செய்முறை :
ஒரு வாணலியை அடுப்பின் மேல் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.
அதில் பருப்பை சேர்த்து விடாமல் கிளறி பொன்னிறமாக வறுக்கவும்.
பொன்னிறமாக வறுத்த பின்னர் ஒரு தட்டில் தனியே எடுத்து வைத்து ஆற விடவும்.
பொன்னிறமாக வறுத்த பயத்தம் பருப்பு மற்றும் சர்க்கரை


ஆறிய பின்னர் மிக்ஸியில் நன்றாக மைய அரைத்து மாவாக்கவும்
சல்லடையில் சலித்து எடுத்து வைக்கவும்.

மிக்ஸியில் வறுத்த பயத்தம் பருப்பை  நன்றாக மைய அரைத்து மாவாக்கவும்


மிக்சியில் சர்க்கரை மற்றும் ஏலக்காயை நன்றாக மைய அரைத்து தூளாக்கவும்.
அரைத்த மாவையும் சர்க்கரையையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கலக்கவும்.

அரைத்த மாவையும் சர்க்கரையையும் ஒன்றாக கலக்கவும்


முந்திரியை சிறு துண்டுகளாக்கவும்.
வாணலியில் நெய் விட்டு வறுத்தெடுத்து மாவு சர்க்கரை கலவையுடன் சேர்க்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கவும்.

நெய்


சூடானவுடன் மாவு சர்க்கரை கலவையை சிறிது சூடேறும் வரை கலக்கவும்.

Mix with hot ghee


அடுப்பை அணைத்து விட்டு கை பொறுக்கும் சூடு வந்த பிறகு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

சூடான நெய்யுடன் கலக்கப் பட்ட பயத்தமாவு சர்க்கரை கலவை

உருண்டை பிடிக்க முடியாமல் உடைந்து போகுமானால் மேலும் சிறிது நெய்யை சூடாக்கி ஊற்றி கலந்து உருண்டை பிடிக்கவும்.
சுவையான சத்துக்கள் நிரம்பிய பயத்தம் பருப்பு உருண்டை தயார். சுவைத்து மகிழவும்.
பயத்தம் பருப்பு உருண்டை

மூடியுடன் கூடிய டப்பாவில் எடுத்து வைத்து பாதுகாக்கவும்.

குறிப்பு :

  • 1 அல்லது 2 கிலோ பயத்தம் பருப்பை சிவக்க வறுத்து மாவு அரைக்கும்  இயந்திரத்தில் அரைத்து வைத்துக்கொள்ளலாம். தேவை ஏற்படும்போது சிறிது எடுத்து இவ்வாறு உருண்டைகள் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • சர்க்கரையின் அளவை தேவைக்கேற்ப கூட்டி குறைத்துக் கொள்ளவும்.







மற்றும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
தினை மாவு உருண்டை
தினை மாவு உருண்டை
குலாப் ஜாமூன்
குலாப் 
ஜாமூன்
ஆளிவிதை உருண்டை
ஆளிவிதை உருண்டை
ஸ்ரீ கண்ட்
ஸ்ரீ கண்ட்
ரவா உருண்டை
ரவா உருண்டை



Thursday, September 25, 2014

Rawa Urundai

#ரவாஉருண்டை : ரவா உருண்டை மாவு உருண்டைகளில் மிக மிக ருசியானது. பாரம்பரியமாக தீபாவளியின் போது செய்யக்கூடிய இனிப்புகளில் ஒன்றாகும். புதியதாக உருக்கிய நெய் கொண்டு செய்தால்  சுவையும்  மணமும் அருமையாக இருக்கும்.
இனி எவ்வாறு செய்வது என காணலாம்.

ரவா உருண்டை


தேவையான பொருட்கள் :
1/2 கப்                                     ரவா
1/2 கப்                                     சர்க்கரை
1/4 கப்                                     நெய்
2 அ 3                                      ஏலக்காய்
5 அ 6                                       முந்திரி பருப்பு

செய்முறை :
அடுப்பில்  அடிக்கனமான பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.
1/2 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரியை சிறு துண்டுகளாக்கி போட்டு சிவக்க வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.

பின்னர் அதே பாத்திரத்தில் நெய் விடாமல் வெறுமனே ரவாவை வாசனை வரும் வரை வறுக்கவும். சிவக்க விடக்கூடாது. ரவாவின் நிறம் மாறாமல் வெண்மையாகவே இருக்க வேண்டும்.

ரவாவின் மணம் வரும் வரை  நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும்

சூடு ஆறிய பின்னர் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
பொடித்ததை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அடுத்து சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக தூளாக்கி பொடித்த ரவாவுடன் சேர்க்கவும்.
வறுத்து வைத்துள்ள முந்திரியையும் சேர்க்கவும்.
ஒரு நீட்ட கரண்டியால் நன்றாக கலந்து விடவும்.

பொடித்த ரவா மற்றும் சர்க்கரை கலவை

மற்றொரு  கனமான பாத்திரத்தில் நெய்யை  இலேசாக சூடாக்கி, கலந்து வைத்துள்ள ரவா சர்க்கரை கலவையுடன் கலக்கவும்.

ரவா சர்க்கரை கலவையுடன் சூடான நெய் சேர்த்து கலக்கவும்

கைகளால் பிசறி விட்டு உருண்டைகளாக அழுத்தி பிடித்து வைக்கவும்.
உருண்டை பிடிக்கும் போது உடைந்து விழுந்தால் இன்னும் சிறிது சூடான நெய் விட்டு உருண்டை பிடித்து வைக்கவும்.

ஒரு காற்றுப் புகா பாத்திரத்தில் எடுத்து வைத்து பத்திர படுத்தவும்.
ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை வைத்திருக்கலாம்.

ரவா உருண்டை

ஆனால் இதன் அலாதியான சுவை அவ்வளவு நாட்கள் வைத்திருக்க விடுமா என்ன?!! செய்யும் போதே அல்லது செய்த அன்றே காலி ஆகி விடும்.
ஒன்று எடுத்து சுவைத்தால் மற்றொன்று எடுத்து சாப்பிட கட்டாயமாக  தூண்டும்... இதன் சுவையும் மணமும் !!....
செய்துதான் பாருங்களேன்!!... அப்போதுதான் நான் சொல்வதின் உண்மை உங்களுக்கும் புரியும்.