Search This Blog

Saturday, October 31, 2020

Liquid_Or_Powder_Mix_for_Rice

 சாதத்துடன் கலந்து சாப்பிட :

சாதத்துடன் கலந்து சாப்பிடக் கூடிய  கலவைகள் மற்றும் பொடிகள் ஆகியவற்றின் செய்முறைகளின் இணைப்புகளை இங்கு தொகுத்துள்ளேன்.  

மதிய உணவு உட்கொள்ளும் போது முதலில் பருப்பு சாதத்துடன் தொடங்குவதுதான் முறை. சாம்பார் அல்லது குழம்பு சாதம் சாப்பிடுவதற்கு முன்னர் பருப்பு சாதம் சுவைக்கப்படுவது வழக்கம். சூடான சாதத்தின் மேல்  வேகவைத்து உப்பு சேர்த்த துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பை போட்டு, ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பிசைந்து, சாம்பார் அல்லது தயிர் பச்சடியுடன் சாப்பிட வேண்டும்.

அவ்வாறு பருப்பு இல்லையெனில் முதலில் சாதத்துடன் கீரை மசியல் அல்லது கழனி சாறு [ பால் சாறு ] அல்லது துவையல் அல்லது பொடி போட்டு சாப்பிட்ட பின்னரே சாம்பார்/குழம்பு மற்றும் ரசம் என்று சுவைப்பது வழக்கம்.

கீரை மசியல் என்ற கலவை முளைக்கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, சிகப்பு முளைக்கீரை ஆகிய ஏதேனும் ஒரு கீரையை வேகவைத்து பருப்பு சேர்த்து அல்லது சேர்க்காமலும் கடைந்து செய்யப்படுகிறது. பச்சை நிறம் மாறாமல் வேகவைத்த கீரையை பூண்டு  மற்றும் உப்பு சேர்த்து மத்து கொண்டு கடைந்தோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ செய்யலாம். இந்த கீரை மசியலை சூடான சாதத்தில் இட்டு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது வத்தக்குழம்பு தொட்டுக்கொண்டு சுவைத்தால் அருமையாக இருக்கும்.

கழனி சாறு என்றும் பால் சாறு என்றும் அழைக்கப்படும் கலவை மணத்தக்காளி கீரை அல்லது முருங்கைக்கீரை அல்லது அகத்திக்கீரை போன்ற கீரைகள் கொண்டு செய்யப்படுகிறது. தற்போது குறிப்புட்டுள்ள ஏதேனும் ஒரு கீரையை வேகவைத்து எடுத்தபின்னர் அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து விட வேண்டும். பின்னர் தேங்காய் பால் எடுத்து கீரையுடன் சேர்த்து சீரகம் தாளித்து வெங்காயத்தை வதக்கி போட்டு செய்யப்படுகிறது. சூடான சாதத்தில் பால் சாறு கீரையுடன் சேர்த்து விட்டு நன்கு அழுத்திப் பிசைந்து சாம்பார் அல்லது காரக்கறியுடன் சுவைக்கலாம்.

விதவிதமான துவையல் வகைகள் பருப்பு, கீரை, மூலிகைகள் உபயோகித்து அரைத்து செய்யப்படுகிறது. அவ்வாறு அரைத்தெடுத்த துவையலை சூடான சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது குழம்புடன் சுவைத்தால் அருமையாக இருக்கும்.

இதைப்போலவே சாதத்துடன் பொடி சேர்த்து நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது குழம்புடன் சுவைத்தால் அருமையாக இருக்கும்.

தொக்கு போல எண்ணெய்ச்சட்டியில் அடுப்பின் மீது வைத்து செய்யப்படும் புளிக்காச்சல் மற்றும் தக்காளி தொக்கு போன்றவற்றையும் சாப்பாட்டில் முதலில் சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சுவைத்து மகிழலாம்.

இணைப்புகளை சொடுக்கி தேவையான செயற்குறிப்பு பதிவுகளை அடையலாம்.



கீரை மசியல் வகைகள்
பாலக் கீரை மசியல்
பாலக் கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
அரைக்கீரை மசியல்
அரைக்கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல் 1
சிகப்பு கீரை மசியல் 1


பால்சாறு - கழனி சாறு வகைகள்
மணத்தக்காளிகீரை பால்சாறு
மணத்தக்காளிகீரை பால்சாறு
முருங்கைகீரை பால் சாறு
முருங்கைகீரை பால் சாறு


தொக்கு வகைகள்
புளிக்காச்சல்
புளிக்காச்சல்
தக்காளி தொக்கு
தக்காளி தொக்கு



துவையல் வகைகள்
இஞ்சி துவையல்
இஞ்சி துவையல்
கொத்தமல்லிபுதினா துவையல்
கொத்தமல்லிபுதினா துவையல்
பருப்பு துவையல்
பருப்பு துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
வேப்பம்பூ துவையல்
வேப்பம்பூ துவையல்
வல்லாரை பருப்பு துவையல்
வல்லாரை பருப்பு துவையல்
நெல்லிக்காய் பீர்க்கங்காய் துவையல்
நெல்லிக்காய் பீர்க்கங்காய் துவையல்
பிரண்டை துவையல்
பிரண்டை துவையல்
பீர்க்கங்காய் துவையல்
பீர்க்கங்காய் துவையல்
வல்லாரை துவையல்
வல்லாரை துவையல்
பொடுதலை துவையல்
பொடுதலை துவையல்
துரை துவையல்
துரை துவையல்


பொடி வகைகள்
மிளகுப்பொடி ஆளிவிதையுடன்
மிளகுப்பொடி ஆளிவிதையுடன்
கொத்தமல்லிமுருங்கைக்கீரைபொடி
கொத்தமல்லிமுருங்கைக்கீரைபொடி
ஆளிவிதை பொடி
ஆளிவிதை பொடி
மிளகுப்பொடி
மிளகுப்பொடி


பல்வேறு சமையல் செயற்குறிப்புகள்




Wednesday, October 21, 2020

Other_Tiffins

 இங்கே மேலும் சில பலகாரங்களின்  செய்முறை இணைப்புகளை பகிர்ந்துள்ளேன்.



சோளம் குழி பணியாரம்
சோளம் குழி பணியாரம்
தினை குழி பணியாரம்
தினை குழி பணியாரம்
பசலைக்கீரை குழி பணியாரம்
பசலைக்கீரை குழி பணியாரம்
பசலைக்கீரை சோளம் வதக்கல்
பசலைக்கீரை சோளம் வதக்கல்
நூடுல்ஸ் தக்காளி சட்னியுடன்
நூடுல்ஸ் தக்காளி சட்னியுடன்
கேழ்வரகு இனிப்பு குழி பணியாரம்
கேழ்வரகு இனிப்பு குழி பணியாரம்



விதவிதமான சமையல் செய்முறைகள் 


Tuesday, October 20, 2020

Kozhukattai_Varieties

 #கொழுக்கட்டைவகைகள்  [#DumplingVarieties ] :

கொழுக்கட்டை என்ற பலகாரம் பொதுவாக ஆவியில் அல்லது நீரில் வேக வைத்து செய்யப்படும் ஒரு அற்புதமான உணவாகும். உப்பு மற்றும் காரம் அல்லது இனிப்பு  ஆகியவற்றை அரிசிமாவு அல்லது பிற தானியங்களுடன் சேர்த்து மாவு பிசைந்து இட்லி வேகவைப்பது போல் ஆவியில் வேகவைத்து சில கொழுக்கட்டை வகைகள் தயாரிக்கப்படும். 

மேலும் சில கொழுக்கட்டை வகைகள் மாவு தயாரித்தவுடன் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுத்து பின்னர் தாளித்து சுவைக்கப்படும்.

மற்றொரு வகை கொழுக்கட்டை செய்யும் போது பூரணம் தயாரித்து அதனை மாவினுள் வைத்து பலவிதமான வடிவங்களில் கொழுக்கட்டை செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கப்படும்.

இங்கே பல வகையான  கொழுக்கட்டை செய்முறைகள் இணைப்பை பகிர்ந்துள்ளேன். 



அமராந்தம் கொழுக்கட்டை
அமராந்தம் கொழுக்கட்டை
அரிசி பிடி கொழுக்கட்டை
அரிசி பிடி கொழுக்கட்டை
மோதகம் - கொழுக்கட்டை
மோதகம் - கொழுக்கட்டை
அமராந்தம் நீர் கொழுக்கட்டை
அமராந்தம் நீர் கொழுக்கட்டை
உடைத்த மக்காசோளம் பிடி கொழுக்கட்டை
உடைத்த மக்காசோளம் பிடி கொழுக்கட்டை
குதிரைவாலி உப்புமா கொழுக்கட்டை
குதிரைவாலி உப்புமா கொழுக்கட்டை
கம்பு சிங்காரா நீர்கொழுக்கட்டை
கம்பு சிங்காரா நீர் கொழுக்கட்டை





Monday, October 19, 2020

Powders_For_Cooking

 சமையல் பொடிகள் :

நமது அன்றாட சமையலுக்குப் பல விதமான பொடிகள் தேவை. கடைகளில் விதவிதமான பொடிகள் வெவ்வேறு பெயர்களில் கிடைக்கின்றன. கடைகளில் நமக்கு சமையலுக்கு தேவையான பொடிகள் இலகுவாக கிடைத்தாலும் நாமே அவற்றை சுகாதாரமான முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

நமது தமிழகத்து சமையலுக்கு மிக அத்தியாவசியமான  பொடிகள் சாம்பார் மிளகாய் தூள்  [ சாம்பார் பொடி ] மற்றும் ரசம் செய்ய பொடி [ ரசப்பொடி ]. இவை இரண்டைத்தவிர முக்கியமான பொடி வேறொன்றும் உள்ளது. அதுதான் இட்லி மிளகாய் பொடி. 

இவற்றைத் தவிர சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட, சமையலுக்கு மணமூட்ட கரம் மசாலா பொடி, மற்றொரு வகையான குழம்பு செய்ய பொடி போன்ற பல விதமான பொடிகளை வீட்டிலேயே தயாரித்து பத்திரப்படுத்தினால் நமது சமையலின் சுவையும் மணமும் மிக மிக அருமையாக இருக்கும்.

சில பொடிகள் செய்யும் முறையை இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன். அவற்றின் இணைப்புகளை இங்கே கொடுத்திருக்கிறேன். 




சாம்பார் மிளகாய் தூள்
சாம்பார் மிளகாய் தூள்
மதராஸ் ரசப்பொடி
மதராஸ் ரசப்பொடி
அரைத்துவிட்ட குழம்புத்தூள்
அரைத்துவிட்ட குழம்புத்தூள்
மிளகுப்பொடி
மிளகுப்பொடி
கரம் மசாலா பொடி
கரம் மசாலா பொடி
மிளகுப்பொடி ஆளிவிதையுடன்
மிளகுப்பொடி ஆளிவிதையுடன்
ஆளிவிதை பொடி
ஆளிவிதை பொடி
இட்லி மிளகாய் பொடி
இட்லி மிளகாய் பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
இட்லி மிளகாய் பொடி ஆளிவிதையுடன்
இட்லி மிளகாய் பொடி ஆளிவிதையுடன்




விதவிதமான சமையல் செய்முறைகளின் தொகுப்பு




Friday, October 16, 2020

Lemon_Koozh

 #எலுமிச்சைகூழ்  [  #LemonKoozh ] :

நான் தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சிற்றூராகிய சித்தரஞ்சன் என்ற இடத்தில் வசித்து வருகிறேன். இங்கு என் வீட்டைச் சுற்றி பல மரங்கள் உள்ளன. அவற்றில் மூன்று எலுமிச்சை மரங்களும் அடங்கும். அதனால் எப்போதும் எலுமிச்சை அபரிமிதமாக கிடைத்துக்கொண்டே இருக்கிறது. 

பொதுவாக எலுமிச்சை ரசம் தான் செய்வது வழக்கம். தற்போது அதிக அளவில் எலுமிச்சை பழங்கள் காய்ப்பதால் சாம்பாரையும் எலுமிச்சை சாறு கொண்டு தயாரித்துக்கொண்டிருக்கிறேன். எலுமிச்சை கொண்டு ஊறுகாய் தயாரித்து சேமித்துவைத்திருக்கிறேன். இது தவிர உப்பு எலுமிச்சங்கா ஊறுகாயும் செய்து பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். எலுமிச்சை சாறு எடுத்து கண்ணாடி குடுவையில் நிரப்பி குளிர் சாதனப் பெட்டியில் சேமித்துவைத்திருக்கிறேன். எலுமிச்சை சாறு எடுத்த பின்பு அதனுள்ளே இருக்கும் வெள்ளை நிறத் தோல்களை நீக்கி விட்டு மஞ்சள் நிறமான வெளிப்புறத் தோலை வெய்யிலில் காய வைத்து பத்திரப்படுத்தியுள்ளேன். இந்த காய்ந்த தோலைக்கொண்டு தேனீர் செய்து சுவைத்து வருகிறேன். இவைதவிர வேறு என்ன செய்யலாம் என யோசித்த போது புளிக்கூழ் ஞாபகத்திற்கு வந்தது.

புளிக்கூழ் என்ற மாலை நேர பலகாரத்தை பலரும் மறந்திருப்பார்கள் என எண்ணுகிறேன். புளிப்பும் காரமும் நிறைந்த நாக்கை சப்புக்கொட்ட வைக்கும்  இந்த பலகாரம் மிக எளிதில் தயாரிக்கக்கூடிய ஒன்றாகும். அதன் சுவையும் மணமும் செய்யும் போதே நம்மை சுண்டியிழுக்கும். செய்து முடித்து தட்டில் கொட்டியவுடன் கையால் எடுத்து நக்கி சாப்பிட்டே முழுவதும் காணாமல் போய்விடும். 

அத்தகைய மிகவும் சுவையான கூழ் அரிசி மாவிலிருந்து செய்யப்படுகிறது. புளிப்பிற்காக புளித்தண்ணீர் மற்றும் சிகப்பு மிளகாய், சில பருப்பு வகைகளை வறுத்து சேர்த்து செய்யப்படுகிறது. புளிக்குப் பதிலாக புளித்த மோர் சேர்த்தும் இந்த பலகாரம் செய்வதுண்டு. 

தற்போது இந்த சுவையான கூழை புளிக்குப் பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

உலர்ந்த அரிசி மாவு அல்லது இட்லி மாவு அரைக்கும் போது சிறிதளவு எடுத்து வைத்த அரைத்த அரிசி மாவு ஏதேனும் ஒன்றை இந்த பலகாரம் செய்ய உபயோகப்படுத்தலாம்.

தயாரிக்க ஆகும் நேரம்              : 20 நிமிடங்கள்

இரண்டு முதல் மூன்று நபர்களுக்கு பரிமாறலாம்.


Lemon koozh [ Elumichai koozh ]


தேவையானவை :
1/2 Cupஅரிசி மாவு
1எலுமிச்சம்பழம் [ லெமன் ]
1 - 2பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கவும் [ adjust ]
1 Tspஇஞ்சி பொடியாக நறுக்கியது
1/2 Tspமஞ்சள் கிழங்கு பொடியாக நறுக்கியது*
10 - 15கருவேப்பிலை
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
1 Tspகடலை பருப்பு [ chick pea ]
2 Tspநிலக்கடலை [ pea nut ] உடைத்து
Small pieceபெருங்காயம்
4 Tspநல்லெண்ணெய் [ Sesame/Til oil ]**

* மஞ்சள் கிழங்கு இல்லையெனில் 1/4 Tsp மஞ்சத்தூளை சேர்க்கவும்.
**தங்களது சுவைக்கேற்ப எண்ணெய்யை தேர்ந்தெடுக்கவும்.



செய்முறை :

உலர்ந்த அரிசி மாவை எலுமிச்சை கூழ் செய்ய எடுத்திருந்தால் 1 கப் தண்ணீரில் நன்கு கலக்கி தனியே வைக்கவும்.

[ அல்லது இட்லி அல்லது தோசை மாவு அரைக்கும் போது 1/2 கப் அரிசி மாவு எடுத்து வைத்திருப்பின் 3/4 கப் தண்ணீரில் நன்கு கலந்து தனியே வைக்கவும். ]

அடுப்பில் இரும்பு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயின் மேல் சூடாக்கவும்.

எண்ணெய் சூடாகி இலேசாக புகைய ஆரம்பித்ததும் கடுகை போட்டு வெடிக்க விடவும்.

அடுத்து பெருங்காய கட்டி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, உடைத்து வைத்துள்ள நிலக்கடலை முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

தீயை நன்கு குறைக்கவும்.

பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.

அடுத்து பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் மஞ்சள் துண்டுகளை சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.

இப்போது தண்ணீரில் கரைத்து வைத்துள்ள அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து விடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.

கிளறுவதை நிறுத்தினால் அடிபிடித்து விடும்.

தண்ணீராக இருக்கும் அரிசிக்கலவை கஞ்சி பதத்தை அடையும்.

பிறகு சிறிது சிறிதாக கெட்டியாக ஆரம்பிக்கும்.

கெட்டியானவுடன் எலுமிச்சை சாரை ஊற்றி கிளறவும்.

உப்பு மற்றும் புளிப்பு சுவையை சரி பார்த்து தேவையெனில் சிறிது சேர்க்கவும்.

சிறிது நேரத்தில் நன்கு கெட்டிப்பட்டு வாணலியில் ஓரத்தில் ஒட்டாமல் பந்து போல உருண்டு வரும்.

அத்தருணத்தில் ஒரு உலர்ந்த சுத்தமான தட்டில் கொட்டவும்.

Lemon koozh [ Elumichai koozh ]

எலுமிச்சை கூழின் மேல் புறம் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு ஒரு உலர்ந்த சுத்தமான தேக்கரண்டியின் பின் பக்கத்தைக் கொண்டு சமமாக பரப்பி விடவும்.

Lemon koozh [ Elumichai koozh ]

சூடாக இருக்கும் போது தேக்கரண்டி கொண்டு எடுத்து கிண்ணத்தில் பரிமாறவும்.

Lemon koozh [ Elumichai koozh ]

சிறிது ஆற விடவும்.

பின்னர் துண்டுகள் போட்டு சூடான காபி அல்லது தேநீருடன் பரிமாறவும்.

இளம் மஞ்சள் நிறத்தில் எலுமிச்சை கூழ் பார்க்கவே அற்புதமாக இருக்கும்.

சுவையும்தான்!! ஆஹா என நாக்கை சப்புகொட்டவைக்கும் அருமையான மாலை நேர பலகாரம்!!

Lemon koozh [ Elumichai koozh ]

இந்த பலகாரம் சூடாக சுவைத்தால் அருமையாக இருக்கும்.

ஆறியவுடன் சுவைத்தால் மேலும் அற்புதமாக இருக்கும்.






மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்க்க :

சோயா பூரணம்
சோயா பூரணம்
போளி - சோயா பூரணம்
போளி - சோயா பூரணம்
வாழைப்பூ மசால் வடை
வாழைப்பூ மசால் வடை
போளி - உருளை பூரணம்
போளி - உருளை பூரணம்
கம்பு பகோடா
கம்பு பகோடா

புளிக்கூழ்
புளிக்கூழ்



பலவித பலகாரங்கள் அட்டவணை