Search This Blog

Monday, March 30, 2015

Amaranth-Buckwheat-Paal-Payasam

#அமராந்த்பாப்பரைபால்பாயசம் : #அமராந்த் அல்லது #அமராந்தம் அல்லது #அமர்நாத்விதைகள் என்றழைக்கப்படும் விதைகள் தண்டுகீரை [ முளைக்கீரை ] யின் விதைகளாகும். இவ்விதைகளில் புரோட்டீன் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளன.
இதே போல பாப்பரை [ #buckwheat ] என்பதும் ஒரு தாவரத்தின் விதைகள் ஆகும். இதுவும் புரோட்டீன் அதிக அளவில் கொண்ட உணவாகும். இதில் அடங்கியுள்ள ஒரு வேதிப்பொருள் ரத்த நாளங்களை வலுவுள்ளதாக ஆக்குகிறது.
இங்கு இவையிரண்டையும் பயன் படுத்தி ஒரு சுவையான பாயசம் செய்யும் முறையை காண்போம்.

அமராந்த் பாப்பரை பால் பாயசம்


Ingredients :
1/8 Cupஅமராந்த் [ அ ] அமராந்தம்
1 Tbspபாப்பரை [ Buckwheat ]
1 pinchஉப்பு
2 Cupபால்
2 Tbspசர்க்கரை [ adjust ]
1/4 Tspஏலக்காய் பொடி
1 Tspபாதாம் துருவல்
5 or 6குங்குமப்பூ இழைகள்

செய்முறை :
அமராந்த் மற்றும் பாப்பரை ஆகிய இரண்டையும் ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
தண்ணீர் விட்டு ஒரு முறை கழுவி வைக்கவும்.
அரை கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
குக்கரில் 1 கப் தண்ணீர் விடவும்.
பின்னர் இந்த கிண்ணத்தை குக்கரினுள் வைத்து மூடி வெயிட் பொருத்தவும்.
அதிக தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
பின்னர் தீயை சிறியதாக்கி 10 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பிறகு வெளியில் எடுத்து வைக்கவும்.


அடுப்பில் மற்றொரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும்.
பால் பொங்கியதும் வேக வைத்துள்ள அமராந்த் பாப்பரையை சேர்த்து கலக்கி 3 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு சர்க்கரையை சேர்த்து கலக்கி மீண்டும் 5 முதல் 10 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
இறுதியாக ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி பாதாம் துருவலையும் குங்குமப்பூவையும் தூவி அலங்கரிக்கவும்.
சுவையான பாயசம் தயார்!!!
சூடாக இருக்கும் போதே அருந்தி மகிழவும்.
அமராந்த் பாப்பரை பால் பாயசம் அமராந்த் பாப்பரை பால் பாயசம்




மேலும் சில பாயசம் வகைகளின் சமையல் குறிப்புகள்  

காரட் தினை பாயசம் சாமை பாப்பரை பாயசம் அமராந்த் பாப்பரை பருப்பு பாயசம்
குதிரைவாலி பால் பாயசம் ஜவ்வரிசி சேமியா பாயசம்


Monday, March 23, 2015

Kambu Pakoda

#கம்புபகோடா : #கம்பு #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். கம்பு கொண்டு முறுக்கு மற்றும் கஞ்சி செய்யும் முறையை ஏற்கனவே பார்த்துள்ளோம். இங்கு பகோடா செய்வது எப்படி என்று காண்போம். 

கம்பு பகோடா [ Bajra Pakoda ]

தேவையான பொருட்கள் :
3/4 cupகம்பு மாவு
1/3 cupகடலை மாவு
2 Tbspஅரிசி மாவு
1/4 Tspமஞ்சத்தூள்
3/4 Tspமிளகாய்த்தூள் [ adjust ]
1/2 Tspசீரகப் பொடி
3/4 Tspஉப்பு [ adjust ]
3 Tspசூடான எண்ணெய்
1 cupஎண்ணெய் பொரிப்பதற்கு
மற்ற பொருட்கள் :
2வெங்காயம், நீள மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்
1/2 Cupமுட்டைகோஸ் மெல்லியதாக நறுக்கியது
2 or 3பச்சை மிளகாய், சிறுசிறு துண்டுகளாக்கவும்
10 - 15கறுவேப்பிலை, பொடியாக நறுக்கவும்
2 or 3 Tbspகொத்தமல்லி தழை நறுக்கியது

செய்முறை :
எண்ணெய் நீங்கலாக தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்காக எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கவும்.
அதிலிருந்து 3 தேக்கரண்டி சூடான எண்ணெயை மாவில் ஊற்றி பிசறி விடவும்.
இப்போது வெட்டி வைத்துள்ள மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பிசறவும்.


சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும். கம்பு பகோடா மாவு தயார்.

கம்பு பகோடா மாவு [ Kambu Pakoda dough ]

எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் கிள்ளி போட்டு பொரிக்கவும்.

Kambu Pakoda [ Bajra Pakoda ]

சாரணியால் திருப்பி விட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
ஒரு தட்டில் எண்ணெய் உறிஞ்சும் தாளை பரப்பி வைத்து பொரித்ததை எடுத்து வைக்கவும்.
கம்பு பகோடா [ Bajra Pakoda ]

தக்காளி சாஸுடன் பரிமாறவும். டீ/காபியுடன் கொறிக்க அருமையான நொறுக்கு தீனியாகும்.



மேலும் முயற்சி செய்ய 

சோள இட்லி
சோள இட்லி
சோள குழிபணியாரம்
சோள குழிபணியாரம்
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
நீர்தோசை
நீர்தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
கம்பு முறுக்கு
கம்பு முறுக்கு




Thursday, March 12, 2015

Vallarai-Paruppu-Thuvaiyal

#வல்லாரைபருப்புத்துவையல் : #வல்லாரைகீரை நீர்நிலைகளின் அருகே அதிகமாக வளர கூடிய ஒரு கொடியாகும். வல்லாரை நினைவாற்றலை மேம்படுதவல்லது. முந்தைய பதிவுகளில் இக்கீரையை கொண்டு துவையல் செய்யும் முறையை அறிந்து கொண்டோம். இங்கு இக்கீரையை சேர்த்து பருப்பு துவையல் செய்வது எப்படி என காண்போம்.

Vallarai Paruppu Thuvaiyal

தேவையான பொருட்கள் :
20 - 25வல்லாரை இலைகள்
3 Tbspதேங்காய் துருவல்
3 Tbspதுவரம் பருப்பு
2 or 3சிகப்பு மிளகாய்
5 - 6 பற்கள்பூண்டு
1 Tspநல்லெண்ணெய் [ Til/sesame oil ]
3/4 Tspஉப்பு [ adjust ]
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும்.
அடுத்து துவரம் பருப்பை சேர்த்து கை விடாமல் திராவி சிவக்க வறுக்கவும்.
தனியே தட்டில் எடுத்து வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு கழுவி சுத்தம் செய்த கீரையை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.
வதக்கிய கீரையையும் தட்டில் எடுத்து வைத்து ஆற விடவும்.
ஆறிய பின்னர் மிக்ஸியில் மற்ற பொருட்களையும் சேர்த்து முதலில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

Vallarai Paruppu Thuvaiyal
சூடான சாதத்தில் துவையலை சேர்த்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து புளிச்சாறு அல்லது வத்த குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால்... ஆஹ்... ஆஹா அலாதியான சுவைதான்.





மேலும் முயற்சி செய்ய 

சோள இட்லி
சோள இட்லி
சோள குழிபணியாரம்
சோள குழிபணியாரம்
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
நீர்தோசை
நீர்தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
கம்பு முறுக்கு
கம்பு முறுக்கு