#உப்புஎலுமிச்சை : #எலுமிச்சைபழம் ஊறுகாய்க்கு மிக மிக சிறந்த பழமாகும். இந்த ஊறுகாயில் எலுமிச்சை பழம் உப்புடன் சேர்த்து பதப் படுத்தப்படுகிறது. மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஊறுகாயும் ஆகும்.
இதனை தயார் செய்து சுத்தமான பாட்டிலில் அடைத்து வைத்தால் வருடக்கணக்கில் கெடாமல் இருக்கும்.
வாந்தி வருகிறமாதிரி இருக்கும் போது ஒரு சிறிய துண்டு சாப்பிட்டால் குமட்டல் வராமல் இருக்கும். சுரத்தின் போதும் வாய் கசந்து சாப்பிடவே பிடிக்காது. அப்போதும் துளி ஊறுகாயை நாக்கில் சப்புகொட்டினால் நன்றாக இருக்கும்.
இனி எப்படி செய்வது என காண்போம்.
தேவையான பொருட்கள் :
எலுமிச்சை பழம்
கடல் உப்பு [ கல் உப்பு ]
சுத்தமான பாட்டில்
செய்முறை :
எலுமிச்சை பழத்தை தண்ணீரில் நன்கு கழுவி ஒரு சுத்தமான துணியினால் ஒத்தி எடுத்து ஈரத்தை போக்கவும்.
மேலிருந்து கீழாக வெட்டவும். முழுவதுமாக வெட்டாமல் அடிபகுதி ஒட்டிக்கொண்டிருக்குமாறு வெட்டவேண்டும்.
இப்போது குறுக்காக அதே போல வெட்டவும்.
4 துண்டுகளாக பிளக்குமாறு இருக்க வேண்டும்.
நன்கு விரித்து வைத்து உப்பை அழுத்தி நிரப்பவும்.
பாட்டிலினுள் ஒவ்வொன்றாக உப்பு கொண்டு நிரப்பிய பின் அடுக்கவும்.
மூடி போட்டு இரண்டு மூன்று நாட்கள் மூடி வைக்கவும்.
எலுமிச்சையிலிருந்து தண்ணீர் வெளிவந்து உப்பை கரைக்கும்.
இந்த தண்ணீர் பாட்டிலின் உள்ளே கீழ் பகுதியில் இருப்பதை காணலாம்.
இவ்வாறு தண்ணீர் அடியில் தங்க ஆரம்பித்த பிறகு தினமும் எல்லா எலுமிச்சை மீதும் படுமாறு ஒரு முறை தினமும் குலுக்கி விட்டு வைக்கவும்.
நாளாக நாளாக எலுமிச்சையின் நிறம் மாறத் துவங்கும்.
எலுமிச்சை தோலும் மிருதுவாக ஆகத் துவங்கும்.
சுமார் ஒரு மாதம் ஆன பிறகு எலுமிச்சை முழுவதுமாக நிறம் மாறி மிருதுவான உப்பு சுவையுடன் கூடிய ஊறுகாயாக மாறி விடும்.
பாட்டிலின் அடியில் தங்கியுள்ள நீரும் கெட்டியாகி தேன் போன்ற தன்மையாக மாறி விடும்.
இதனை இப்போது உபயோகிக்க ஆரம்பிக்கலாம்.
இந்த உப்பு எலுமிச்சை பல வருடங்களுக்கு உபயோகப் படுத்தலாம்.
குறிப்பு :
மூன்று நான்கு நாட்களுக்கு பிறகு உப்பு தண்ணீரில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்து வெயிலில் காயவைக்கவும். மாலையில் காய வைத்த எலுமிச்சையை மறுபடியும் பாட்டிலில் உள்ள உப்பு தண்ணீரில் பத்திர படுத்தவும்.
மீண்டும் மறுநாள் காலை தட்டில் எலுமிச்சையை வைத்து காய வைக்கவும்.
உப்பு நீர் அனைத்தையும் எலுமிச்சை உறுஞ்சும் வரை இதே போல காய வைத்து எடுக்கவும்.
பிறகு நன்கு காய வைத்து பாட்டிலில் பத்திர படுத்தவும்.

No comments:
Post a Comment