Search This Blog

Tuesday, March 25, 2014

Karisalaankanni Thuvaiyal

#கரிசலாங்கண்ணிதுவையல் : என்னுடைய வீட்டை சுற்றியுள்ள நில பரப்பில் அழகான சிறு சிறு வெள்ளை நிற பூக்கள் கொண்ட செடிகள் மெத்தை போல அடர்ந்து பரவி இருந்தது. இது ஏதோ  கீரையாக இருக்கலாம் என சந்தேகித்தேன். மக்கள் டிவி யில் அருண் சின்னையா என்பவர் மூலிகை கீரை கொண்டு சமைப்பதை பார்த்திருக்கிறேன். அதனால் வலை தளத்தில் தேடினேன். ஒரு பட காட்சியில் அவர் இதே போல இலைகளை கொண்டு சூப் தயாரிக்கும் பட காட்சியை பார்த்தேன். அவருடைய படகாட்சியின் மூலம் இந்த செடி #கரிசலாங்கண்ணி என அறிந்து கொண்டேன்.

கரிசலாங்கண்ணி

இதனை சமஸ்க்ரிதத்தில் ப்ரிங்கராஜ் [ Bhringaraj ] என அழைக்கப்படுகிறது.

கரிசலாங்கண்ணி நீலம், வெள்ளை மற்றும் மஞ்சள் என மூன்று வகைகள் உள்ளன.
இவற்றில் வெள்ளை ரகம் சாதாரணமாக எல்லா இடங்களிலும் களை செடியாக வளர்ந்திருப்பதை காணலாம்.
நீல வகை மலை பகுதிகளில் நிறைந்திருக்கும்.
நீளம் மற்றும் வெள்ளை கரிசலாங்கன்னியின் அறிவியல் பெயர் : Eclipta Prostrata [ ஓல்ட் நேம் : Eclipta  alba ]
மஞ்ச கரிசலாங்கண்ணி வீடுகளில் பிரத்யேகமாக மருந்துக்காக வளர்க்கப்படுகிறது.
இதன் அறிவியல் பெயர் : Wedelia chinensis [ or  Wedelia calendulacea ]
தலை முடி மற்றும் சரும நோய்களுக்கும் மற்ற நோய்களுக்கும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பயன் படுத்தப் படுகிறது.
இனி செய்முறையை காண்போம்.

கரிசலாங்கண்ணி துவையல்

தேவையான பொருட்கள் :

கரிசலாங்கண்ணி

3/4 அ 1 கப்                                     கரிசலாங்கண்ணி கீரை
1                                                        சிகப்பு மிளகாய்
1 Tsp                                                 உளுத்தம் பருப்பு
8                                                        மிளகு
4 பற்கள்                                         பூண்டு
1/4 Tsp                                              கொத்தமல்லி விதை
1 Tsp                                                 நல்லெண்ணெய்
1/2 Tsp                                              உப்பு
சின்ன கோலி  குண்டு அளவு புளி
செய்முறை :
கீரையை கழுவி தண்ணீரை வடித்து சிறிது ஆற விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 1/2 tsp எண்ணெய் விட்டு சிகப்பு மிளகாய், உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.
அதிலேயே மிளகு மற்றும் மல்லியை வறுத்துக்கொள்ளவும்.
தனியே எடுத்து வைக்கவும்.


அதே வாணலியில் மேலும் 1/2 tsp எண்ணெய் விட்டு கீரையை வதக்கிக் கொள்ளவும்.


ஆறியபின் மிக்சியில் மற்ற பொருட்களுடன் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.


பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

சாதத்தில் 1 tsp துவையல் சேர்த்து நல்லெண்ணெயுடன் கலந்து சாம்பார் மற்றும் பிடித்தமான பொரியல் அல்லது முருங்கைக்காய் சாம்பார் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்.





மேலும் சில சட்னி வகைகள் முயற்சி செய்து பார்க்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
பொடுதலை துவையல் நெல்லிக்காய் புதினா துவையல் கொத்தமல்லி தேங்காய் சட்னி
இஞ்சி துவையல் பிரண்டை துவையல்



மற்ற சட்னி வகைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

சட்னி வகைகள்

இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.





No comments:

Post a Comment