Search This Blog

Thursday, March 27, 2014

Idiyappam

#இடியாப்பம் : முற்காலத்தில், மிகவும் பழைய காலம் என நினைத்து விடாதீர்கள்! நான் பள்ளியில் படித்த காலத்தைத்தான் குறிப்பிடுகிறேன். எனது தாயார் மாவை இடித்து பின்னர் அதை ஆவியில் வேக வைத்து, பின்னர் ஆறவைத்து, சலித்து எடுத்து வைப்பார்கள். இவ்வாறு பதப் படுத்திய மாவை கொண்டுதான் இடியாப்பம் செய்ய உபயோகப் படுத்துவார்கள்.
முன்பு மாவை இடிக்க ஆள் கிடைக்கும். இப்போது கிடைப்பது சிறிது சிரமம்தான்.
பிறகு மாவு அரைக்கும் மிஷின் கடையில் ஈர அரிசி அரைத்து  வந்து அவித்து சலித்து பத படுத்தினார்கள்.
அதன் பின்னர் அரிசி மாவை கொண்டே இடியாப்பம் செய்யும் முறையை கண்டு பிடித்து விட்டார்கள். இது மிக சுலபமான முறையாகும். ருசியிலும் மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரிய வில்லை.
நான் அம்மாவிடமிருந்து இந்த எளிமையான முறையை கற்றுக் கொண்டேன்.
எப்படி என பார்ப்போம்.

இடியாப்பம்

தேவையான பொருட்கள் :
2 கப்                                            அரிசி மாவு
1/2 Tsp                                          உப்பு

செய்முறை :
 அடுப்பில் ஒரு அடி கனமான வாணலியை வைத்து அரிசிமாவை குறைந்த தீயில் வறுக்கவும்.
இலேசாக சூடு ஏறினால் போதும்.


அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை சூடாக்கவும்.
பாத்திரத்தின் அடியில் சின்ன சின்ன குமிழ்கள் தோன்ற ஆரம்பித்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.


இந்த சூடான தண்ணீரை மாவில் ஊற்றி கரண்டியால் கலக்கவும்.
தேவையான தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.


கை பொறுக்கும் சூடு ஆறியபின் கையால் பிசைந்து பெரிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
இட்லி தட்டில் துணியை விரித்து வைக்கவும்.
முறுக்கு அச்சில் இடியாப்ப அச்சை பொருத்தி உருட்டி வைத்த மாவை நிரப்பவும்.



இட்லி தட்டின் மேல் பிழிந்து விடவும்.


இட்லி பானையில் வேக  விடவும்.
5 நிமிடங்களில் வெந்து விடும்.
எடுத்து ஒரு தட்டில் இட்லி தட்டில் உள்ள வெந்த இடியாப்பத்தை தலை கீழாக திருப்பி தட்டவும்.

இடியாப்பம்

இட்லி தட்டிலிருந்து தட்டிற்கு இவ்வாறு மாற்றிய பிறகு அடுத்த ஈடு பிழிந்து வேக வைக்கவும்.
எல்லாம் பிழிந்து வேகவைத்து எடுத்த பின் எலுமிச்சை, புளிகாச்சல், சர்க்கரை, வெல்லம் ஆகிவற்றை கலந்தோ அல்லது தேங்காய் பாலுடனோ சுவைத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.

புளிகாச்சல் இடியாப்பம் :
கடுகு, கடலை பருப்பு, நிலக்கடலை மற்றும் கருவேப்பிலையை தாளித்து கொட்டவும்.


தேவையான அளவு புளிகாச்சல் மற்றும் உப்பு சேர்த்து நல்லெண்ணெய் விடவும்.
சிறிது ஆறியதும் அழுத்தம் கொடுக்காமல் கையால் பிசையவும். புளிகாச்சல் இடியாப்பம் தயார்.

புளிகாச்சல் இடியாப்பம்

இனிப்பு இடியாப்பம் :
இடியாப்பத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்தால் இனிப்பு இடியாப்பம் தயார்.

இனிப்பு இடியாப்பம்


இதற்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையே இல்லை. அருமையான மெத்தென்ற இடியாப்பத்தை சுவைத்து மகிழுங்கள்!!









மற்ற டிபன் வகைகள் முயற்சி செய்ய

சோள இட்லி
சோள இட்லி
தோசை
தோசை
எலுமிச்சை இடியாப்பம்
எலுமிச்சைஇடியாப்பம்
காஞ்சீபுரம் இட்லி
காஞ்சீபுரம் இட்லி
கம்பு இட்லி
கம்பு இட்லி

தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



No comments:

Post a Comment