#தோசை : இந்த தோசையை மாவு தோசை என்று அழைக்கப்படுவது வழக்கம். சிற்றுண்டி சாலைகளில் மொறு மொறு தோசையை பிரபல படுத்திய பிறகு அனைவருக்கும் தோசை என்றதும் நிறைய நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சுடப்படும் முறுவல் தோசைதான் கண் முன்னே நிற்கிறது!!
மெத்து மெத்தென்று தடிமனாக சுடப் படும் தோசையும் மிக மிக ருசியுடன் இருக்கும். இந்த தோசையை சுட நிறைய எண்ணெய் தேவையில்லை.
தோசைக்கென்று தனியாக மாவு அரைக்க தேவையில்லை. இட்லி மாவு கொண்டே அருமையான தோசை தயாரிக்கலாம். மேல் மாவை இட்லி தயாரிக்கவும் கீழே உள்ள மாவை தோசைக்கும் பயன் படுத்தலாம்.
காலையில் இட்லி தயாரித்தால் மீதமுள்ள மாவை கொண்டு இரவில் தோசை தயாரிக்கலாம்.
இனி ஊற்றும் முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு
எண்ணெய், தோசை சுட தேவையான அளவு
சிறு மெல்லிய சுத்தமான துணி
செய்முறை :
மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவை விட சிறிது நீர்க்க கரைத்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.
சரியான சூடேறியதும் எடுத்துக்கொண்டுள்ள துணியை பந்து போல சுருட்டி சிறிது எண்ணெயில் நனைத்து தோசை கல்லின் மேல் தடவவும்.
பின்னர் மாவை தோசை கல்லின் நடுவே வைத்து சீராக தடவி வட்டமான தோசையாக்கவும்.
ஒன்றரை முதல் 3 mm தடிமனாக இருக்க வேண்டும்.
தோசையின் மேலே சில துளிகள் எண்ணெய் தெளிக்கவும்.
ஓரங்கள் இலேசாக சிவந்ததும் திருப்பி போடவும்.
இரண்டு பக்கமும் நன்கு சிவந்த பின்னர் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதே போல ஒவ்வொரு தோசையும் சுட்டு அடுக்கவும்.
நன்கு சிவப்பதற்கு முன்பேயும் எடுக்கலாம்.
அத்தகைய தோசை இன்னும் சுவையாக இருக்கும்.
மாவு நன்கு புளித்திருந்தால் மட்டுமே அழகான ஓட்டைகளுடனும் மெத்தென்றும் தோசை அமையும்.
சூடாக சாப்பிட்டால் மிக அருமையான ருசியுடன் இருக்கும்.
தேங்காய் சட்னி அல்லது சாம்பார் அல்லது கொத்தமல்லி சட்னி உடன் சுவைத்தால் அருமையாக இருக்கும்.
இதே மாவில் மொறு மொறு தோசை சுட வேண்டும் என்றால்
கல்லில் துணியினால் எண்ணெய் தடவிய பிறகு நடுவில் மாவை வைத்து தட்டையான கரண்டியினால் அல்லது தட்டையான சிறிய கிண்ணத்தினால் மெல்லியதாக தேய்க்கவும்.
பின்னர் தோசையின் மேல் தாராளமாக எண்ணெய் விட்டு சிவந்த பின் திருப்பி போடவும்.
இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் தட்டில் எடுத்து வைக்கவும்.
மேலே நெய் அல்லது வெண்ணெய் தடவி சுவைக்கலாம்.
சாம்பார், சட்னி அல்லது ஏதேனும் கொத்தமல்லி சட்னி போன்ற கார சட்னியுடன் சுவைக்கவும்.
மேலும் சில சமையல் முறைகள் முயற்சி செய்து பார்க்க :
இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி

|
|
|
||||||

No comments:
Post a Comment