Search This Blog

Saturday, April 26, 2014

Vengaya Vathal - Onion Vathal

#வெங்காயவத்தல் - #வெங்காய வற்றல் : கோடைகாலம் வந்ததும் #வத்தல் போடுவதுதான் தலையாய வேலை. வத்தல் போட்டு காயவைத்து டின்னில் அடைத்து வைத்துவிட்டால் ஒரு  வருடத்திற்கு கவலையில்லாமல் பொரித்து சாப்பிடலாம்.
பல்வேறு வகையான வற்றல்கள் போடப் படுவதுண்டு. அவற்றில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானது வெங்காய வத்தல்தான். சாம்பார், ரசம், புளில்லாகறி ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



இப்போது வெங்காய #வற்றல் எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
2 கப்                                           புழுங்கரிசி [ இட்லி அரிசி ]
6                                                  பச்சை மிளகாய்
2 Tsp                                           சீரகம்
1/4 கப்                                       ஜவ்வரிசி
3 Tsp                                           உப்பு [ அட்ஜஸ்ட் ]
10 - 15                                        சின்ன வெங்காயம்

செய்முறை :
வத்தல் போடப்போகும் நாளிற்கு முந்தைய தினம் மதியம் அரிசியை நன்கு கழுவி விட்டு ஊறவைக்கவும்.
மாலை கிரைண்டரில் மைய அரைத்து உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.

காலையில் வெய்யில் வருவதற்கு முன் அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து 4 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.

மற்றொரு அடுப்பில் குக்கரில் ஜவ்வரிசியை 3 விசில் வரும் வரை அதிக தீயில் வேக விடவும்.
பின்னர் தீயை குறைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.


அரைத்து வைத்துள்ள மாவில் 1/2 கப்  தண்ணீர் விட்டு கரைத்து சூடேறிக்கொண்டிருக்கும் தண்ணீருடன் சேர்த்து கலக்கவும்.
மிக்சியில் சீரகத்தையும் பச்சை மிளகாயையும் தண்ணீர் விட்டு அரைத்து சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பையும் சேர்த்து கை விடாமல் கிண்டவும்.


தீயை மிதமாக வைத்துக் கொள்ளவும்.
அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.


சிறிது நேரத்தில் கஞ்சி போன்ற பதத்தை அடையும்.
பிறகு கெட்டியாகிக் கொண்டே வரும்.


நன்கு கெட்டியாகி காற்று குமிழ்கள் மாவின் வழியாக சிரம பட்டு வெளியே வரும்.


கெட்டியான கூழ் பதத்திற்கு வரும் போது பாத்திரத்தின் பக்கங்களில் ஒட்டாமல் வரும்.
ஏறக்குறைய அரைமணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை ஆகும்.
அடுப்பை அணைத்து விடவும்.


வெங்காயத்தை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி சேர்க்கவும்.
வேக வைத்த ஜவ்வரிசியையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.


வெளியே ஒரு பிளாஸ்டிக் தாள் அல்லது துணியை பரப்பி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்து வெய்யிலில் காய வைக்கவும்.


நான்கு மணி நேரம் கழித்து மேல் பக்கம் சிறிது காய்ந்து இருக்கும்.


அப்போது பிளாஸ்டிக் தாளிலிருந்து அல்லது துணியில் பரப்பியிருந்தால் அதிலிருந்து எடுத்து தட்டிற்கு மாற்றவும்.


வெய்யிலில் மாலை வரை காய விடவும்.

மறுநாளும் நன்றாக காய விடவும்.


மேலும் இரண்டு மூன்று தினங்களுக்கு சுக்காக காய வைக்கவும்.


நன்கு காயிந்த பின்னர் காற்றுப் புகா டின்னில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைக்கவும்.


பொரிக்கும் முறை :
அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் நன்கு புகை வரும் அளவிற்கு சூடாக இருக்க வேண்டும்.
இப்போது 5 அல்லது 6 வத்தல்களை போட்டு பொரிக்கவும்.
நன்கு விரிந்து வரும்.
அதனால் ஆறு வத்தல்களுக்கு மேல் ஒரு தடவைக்கு எண்ணெயில் போடக்ககூடாது.
ஒவ்வொரு முறை பொரிக்கும் போதும் எண்ணெய் நன்கு சூடாக இருப்பது மிக மிக அவசியம்.
பொரித்ததை எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்.
பிறகு காற்று புகா பாத்திரத்தில் எடுத்து பத்திர படுத்தவும்.


மிக மிக ருசியான வெங்காய வத்தல் தயார்.

குறிப்பு :
காரம் அதிகம் விரும்புவர்கள் வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்க்கும் போது பச்சை மிளகாயையும் பொடியாக அரிந்து சேர்க்கலாம்.





வெங்காயத்தை பத படுத்தும் மற்றொரு முறை :

வெங்காய வடவம் 

No comments:

Post a Comment