Search This Blog

Tuesday, September 29, 2015

Appam-Kerala-Style-1

#ஆப்பம்கேரளாஸ்டைல் 1 : பொதுவாக தமிழகத்தில் செய்யப்படும் ஆப்பம் அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து புளிக்க வைத்த மாவு கொண்டு செய்யப்படும் ஒரு பலகாரமாகும். மேலும் ஆப்பத்தின் மேலே தேங்காய் பாலை ஊற்றி அல்லது தொட்டுக்கொண்டு சாப்பிடுவது நமது முறையாகும்.
ஆனால் கேரளாவில் ஆப்பம்-கடலை கறி மிகவும் பிரபலமாகும். மேலும் ஆப்ப மாவு பச்சரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை மட்டுமே உபயோகித்து செய்யப்படுகிறது.
இங்கு கேரளா முறைப்படி ஆப்ப மாவு அரைத்தெடுப்பது எப்படி என்றும் ஆப்ப சட்டியில் எவ்வாறு சுட்டெடுப்பது என்றும் பார்ப்போம்.

ஆப்பம் கேரளா ஸ்டைல் ஆப்பம் கேரளா ஸ்டைல்

தேவையான பொருட்கள் :
1 1/2 கப்பச்சரிசி
1/4 கப்சாதம் [ வேகவைத்த அரிசி ]
1/2 கப்தேங்காய் துருவல்
1 Tspஉப்பு
1 Tspசர்க்கரை
1 சிட்டிகைசமையல் சோடா

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை போட்டு நன்கு கழுவி தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பின்னர் மாவரைக்கும் இயந்திரத்தில் ஊறவைத்த அரிசி, தேங்காய் துருவல் மற்றும் சாதம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு நன்கு மைய அரைத்து  எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
1/2 கப் தண்ணீர் விட்டு மாவரைக்கும் இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டுள்ள மாவை கழுவி அரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.
உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அல்லது முதல் நாள் மாலை மாவு அரைத்து இரவு முழுவதும் புளிக்க விட்டு மறுநாள் காலை ஆப்பம் தயாரிக்கலாம்.

ஆப்ப சட்டியை அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கவும்.
ஒரு தேக்கரண்டி தண்ணீரில் சமையல் சோடாவை கலக்கி ஆப்ப மாவில் ஊற்றி நன்கு கலக்கவும்.
ஆப்ப சட்டி சூடானதும் ஒரு சுத்தமான துணியை எண்ணெயில் நனைத்து ஆப்ப சட்டியில் தடவும்.
ஆப்ப சட்டி சூடானதும் நடுவில் மாவை ஊற்றி ஆப சட்டியில் கைப்பிடியை துணியினால் பிடித்து கொண்டு சுழற்றி மாவை பரப்பவும்.
ஆப்ப மாவு ஆப்ப சட்டியின் சூட்டில் நன்கு ஒட்டிக்கொள்ளும்.
அடுப்பின் மீது வைத்து ஓரிரு துளிகள் எண்ணெயை ஆப்பத்தின் ஓரத்தில் சொட்டு சொட்டாக விடவும்.
 அடுத்து மூடியினால் மூடவும்.
ஓரிரு நிமிடங்களில் மூடியை திறந்து பார்த்தால் ஆப்பம் வெந்து ஓரங்கள் இலேசாக சிவக்க ஆரம்பித்து இருக்கும்.
கத்தியின் நுனி கொண்டோ அல்லது தோசை திருப்பியினாலோ ஆப்ப சட்டியிலிருந்து எடுத்து தட்டில் வைக்கவும்.
இதே போல எண்ணெய் தடவி ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.

ஆப்ப சட்டி ஆப்பம் கேரளா ஸ்டைல்

இந்த ஆப்பத்திற்கு கொண்டை கடலை கொண்டு செய்யப்படும் கறிதான் நல்ல இணையாகும்.
பூண்டு மிளகாய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
தக்காளி சட்னி மற்றும் பூண்டு தக்காளி  சட்னியுடனும் நன்றாக இருக்கும். 

ஆப்பம் கேரளா ஸ்டைல்


குறிப்பு :
மாவு நீர்க்க இருக்க வேண்டும். அப்போதுதான் ஆப்பம் மெல்லியதாக வரும்.
தேவையானால் தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.




மற்ற ஆப்ப வகைகளின் சமையல் குறிப்புகள் :
ஆப்ப மாவு
ஆப்ப மாவு
ஆப்பம் சுடும் முறை
ஆப்பம் சுடும் முறை
சோள ஆப்பம்
சோள ஆப்பம்
ஆப்பம் கேரளா ஸ்டைல் 1
ஆப்பம் கேரளா .. 2
ஆப்பத்துடன் தொட்டுக்கொண்டு சுவைக்க

தொட்டுக்க


Sunday, September 27, 2015

Beetroot Poori

#பீட்ரூட்பூரி : #பூரி மாவுடன் #பீட்ரூட் கலந்து கவர்ச்சியான சிகப்பு நிற பூரி இரு தினங்களுக்கு முன் செய்தேன். அதனை இங்கு பகிர்ந்து கொள்ள விருப்பம்.
சுமார் 12 முதல் 15 பூரிகள் தயாரிக்கலாம்.

பீட்ரூட் பூரி

மாவு செய்ய தேவையானவை  :
1 1/2 கப்கோதுமை மாவு
1/2 கப்மைதா
1/2 Tspநெய்
1/2 Tspஎண்ணெய்
1/4 cupபீட்ரூட் துண்டுகள்
1/2 Tspஉப்பு

பூரி பொரிக்க தேவையான எண்ணெய்
பூரி மாவு திரட்ட சப்பாத்தி பிரஸ்

செய்முறை :
குக்கரில் பீட்ரூட் துண்டுகளை போட்டு கால் கப் தண்ணீர் விட்டு மூடி ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை தண்ணீர் குழாயின் கீழே வைத்து தண்ணீரை திறந்து விடவும்.
ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து வெந்த பீட்ரூட்டை வேக வைத்த தண்ணீருடன் வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஆறிய பின்னர் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்து வைக்கவும்.

இப்போது பூரி மாவு எவ்வாறு பிசைய வேண்டும் என காணலாம்.
  • ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவை எடுத்துக்கொள்ளவும்.
  • அதில் நெய்யையும் உப்பையும் சேர்க்கவும்.
  • கைகளால்  பிசறி விடவும்.
  • அடுத்து அரைத்த பீட்ரூட் விழுதை சேர்த்து பிசையவும்.
  • மாவு ஒன்றுசேர்ந்தாற்போல வந்தவுடன் 1 Tsp எண்ணெய் சேர்க்கவும்.
  • மறுபடியும் நன்கு பிசையவும்.
  • அழுத்தி பிசைய பிசைய மாவு நன்கு மிருதுவாக வரும்.
  • சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
இப்போது பூரிகளை இட சப்பாத்தி அமுக்கும் கருவியை உபயோகிக்கலாம்.
இல்லையென்றால் வட்ட வட்டமாக பூரி கட்டை கொண்டு இடவும்.

இங்கு சப்பாத்தி ப்ரஸில் எப்படி இடுவது என பார்க்கலாம்.


ப்ரெசின் உள்ளே அடி தட்டிலும் மேல் தட்டிலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.

அடி தட்டின் மேல் உருட்டி வைத்துள்ள மாவை வைத்து மேல் தட்டால் மூடி கைப்பிடியால் அழுத்தம் கொடுத்து வட்ட வடிவ பூரியை உருவாக்கவும்.
இவ்வாறு தட்டிய பூரி மிகவும் மெல்லியதாகவும் இருக்ககூடாது.
தடிமனாகவும் இருக்கக் கூடாது.
ஒரே சீராக 1/2 mm தடிமன் உடையதாக இருக்கலாம்.
  • எண்ணெய் நன்கு புகை வரும் அளவுக்கு சூடாக இருக்க வேண்டும்.
  • திரட்டிய பூரி மாவை எண்ணெய்யில் மெதுவாக விடவும்.
  • போட்ட உடனேயே பந்து போல உப்பி மேலெழுந்து வரும்.
  • சாரணியால் அடுத்த பக்கத்திற்கு திருப்பி விடவும்.
  • இரண்டு பக்கமும் பொரிந்ததும் எண்ணையை வடித்து வேறு தட்டில் எடுத்து வைக்கவும்.
  • இதே போல ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்.
  • எண்ணெயின் சூட்டை தேவைக்கேற்றவாறு அவ்வப்போது தீயை கூட்டி குறைத்து கொள்ளவும்.
  • உருளை கிழங்கு மசாலா செய்து இதனுடன் தொட்டு கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
உருளை கிழங்கு குருமா, காய்கறிகள் குருமா, தக்காளி சட்னி ஆகியவற்றுடனும் அருமையாக இருக்கும்.

பூரியை ஒரு குழியான தட்டில் வைத்து பாலை ஊற்றி ஊறவைத்து சர்க்கரையை மேலே தூவி சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.

இங்கு காராமணி கறியுடன் பூரி பரிமாறப்பட்டுள்ளது.
பீட்ரூட் பூரி பீட்ரூட் பூரி

பூரியுடன் ஜாம் மற்றும் வெல்லம்  ஆகியவற்றுடன் சாப்பிட்டால் இன்னும் சுவையோ சுவை!!
பள்ளிக்கு டிபன் பாக்ஸில் பூரியின் மேல் ஜாம் தடவி சுருட்டி வைத்து அனுப்பினால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆனால் ஹோட்டல்களிலும் வீடுகளிலும் பூரி கிழங்குதான் மிகவும் பிரபலம்!!!....
ஆனால் பீட்ரூட் பூரி சிற்றுண்டி சாலையில் கிடைப்பது கடினம். நிறம் மட்டுமல்லாமல் சுவை மற்றும் இன்றியமையாத சத்துக்களும் நிரம்பியுள்ளது இந்த பீட்ரூட் பூரியில் ...  அதனால் வீட்டில் செய்துதான் பாருங்களேன்.




மற்ற பூரி வகைகள்
பூரி பூரி கிழங்கு கொடி பசலை பூரி