Search This Blog

Sunday, February 28, 2016

Karuvaeppilai-Poondu-Milagai-Chutney

#கறுவேப்பிலைபூண்டுமிளகாய்சட்னி : முன்பொரு பதிவில் பூண்டுமிளகாய்சட்னி செய்யும் முறையை பார்த்திருக்கிறோம். அதே பூண்டு மிளகாய் சட்னியை வேறு ஒரு முறைப்படி செய்யும் போது அதன் சுவையும் மணமும் அருமையாக இருந்தது.
சிகப்பு மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து பின்னர் அரைக்கும் போது வெகு விரைவில் அரைபடுவதுடன்  நன்கு ஒன்று சேர்ந்தாற்போல சாஸ் பதத்தில் கிடைக்கிறது.
முந்தைய பூண்டுமிளகாய்சட்னி யை விட கருவேப்பிலை இதில் அதிக அளவு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பதிவில் தங்களுடன் மற்றுமொரு பூண்டு மிளகாய் சட்னியின் செயல் முறையை பகிர்ந்துகொள்ள அவா.


கறுவேப்பிலை பூண்டுமிளகாய்சட்னி [ curry leaf garlic sauce ]


தேவையான பொருட்கள் :
4 - 6சிகப்பு மிளகாய்
1 Tspசிகப்பு மிளகாய் தூள்
8 - 10 பூண்டு பற்கள்
ஒரு கைப்பிடிகறுவேப்பிலை
3/4 Tspஉப்பு [ adjust ]
செய்முறை :
ஒரு அகலமான பாத்திரத்தில் 3/4 கப் தண்ணீர் விட்டு சூடு படுத்தவும்.
அதில் சிகப்பு மிளகாயை 20 நிமிடங்கள் ஊற விடவும்.
20 நிமிடங்கள் கழிந்த பிறகு ஊறவைத்த சிகப்பு மிளகாய்,பூண்டு, உப்பு, கறுவேப்பிலை மற்றும் சிகப்பு மிளகாய்த்தூள் ஆகியவற்றை மிக்ஸி அரைக்கும் பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
முதலில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பின்னர் சிறிது தண்ணீர் விட்டு நன்கு மைய அரைக்கவும்.
அரைத்த சட்னியை ஒரு சின்ன பீங்கான் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

இந்த கறுவேப்பிலை பூண்டு மிளகாய் சட்னி பூண்டின் மணத்துடன் கருவேப்பிலையின் மணமும் சேர்ந்து கலக்கலாக இருக்கும்.
ஆப்பம்,  தோசை, நீர் தோசை, கஞ்சி தோசை போன்றவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
காரம் அதிகமாக இருப்பதால் சட்னியின் மேல் நல்லெண்ணெய் ஊற்றி தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிக மிக அருமையாகவும் ருசியாகவும் இருக்கும்.
கறுவேப்பிலை பூண்டுமிளகாய்சட்னி [ curry leaf garlic sauce ]
குறிப்பு :
  • அவரவர் சுவை மற்றும் மிளகாயின் காரதன்மைக்கு ஏற்ப சிகப்பு மிளகாயின் அளவை கூட்டி குறைத்துக்கொள்ளவும்.
  • கறுவேப்பிலையின் அளவையும் விருப்பத்திற்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளவும்.




சில சட்னி வகைகளின் சமையல் குறிப்புகள் :

  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை காட்டினால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பின் பக்கத்திற்கு செல்லலாம்

பூண்டு மிளகாய் சட்னி பூண்டு தக்காளி சட்னி வெங்காயம் தக்காளி சட்னி
கொத்தமல்லி தேங்காய் சட்னி நெல்லிக்காய் புதினா துவையல்





இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

Tuesday, February 23, 2016

Parangikkai-Chutney

#பரங்கிக்காய்துவையல் : #பரங்கிக்காய் சாம்பார் வைத்தது போக மீதி இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பிறகு முட்டைகோஸ் சட்னி மற்றும் காரட் சட்னி போல செய்து சுவைக்கலாம் என முடிவெடுத்து செயலிலும் இறங்கி விட்டேன்.
சிகப்பு மிளகாய், உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி விதை, சிறிது மிளகு எல்லாவற்றையும் தனித்தனியாக வாசனை வரும் வரை எண்ணெயில் வறுத்து எடுக்க வேண்டும்.
வறுத்த பொருட்களுடன் தேங்காய் துருவல், கொத்தமல்லி தழை மற்றும் ஒரு பல் பூண்டு சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்க வேண்டும். பிறகு கடுகு தாளித்து கொட்டினால் சுவையான பரங்கிக்காய் சட்னி தயார்.

yellow pumpkin chutney


தேவையான பொருட்கள் :
1/4 கப்பரங்கிக்காய் துண்டுகள்
1/4 கப்கொத்தமல்லி தழை நறுக்கியது
3 Tspதேங்காய் துருவல்
1 Tspஉளுத்தம் பருப்பு
1/4 Tspகொத்தமல்லி விதை
6 - 8மிளகு
2சிகப்பு மிளகாய் வற்றல் [ adjust ]
2பூண்டு பற்கள் [ விரும்பினால் ]
2 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]
3/4 Tspஉப்பு [ adjust ]
2 Tspஎண்ணெய்
1/2 Tspகடுகு

சிறிதளவு கொத்தமல்லி தழை அலங்கரிக்க.

செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும். முதலில் சிகப்பு மிளகாயை நன்கு வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.
அடுத்து அதே வாணலியில் உளுத்தம் பருப்பை நன்கு சிவக்கும் வரை வறுத்து எடுத்து மிக்ஸி அரைக்கும் பாத்திரத்தில் வைக்கவும்.
அடுத்ததாக மேலும் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு கொத்தமல்லி விதைகளை வாசனை வரும் வரை வறுக்கவும்.
அதனை எடுத்த பின்னர் மிளகு பொறியும் வரை வறுத்து எடுக்கவும்.
வறுத்த பொருட்களுடன் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களையும் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
உப்பு மற்றும் புளிப்பு சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
மீண்டும் வாணலியை சூடு பண்ணி எண்ணெய் விட்டு கடுகை வெடிக்க விட்டு தயாரித்து வைத்துள்ள துவையலின் மேல் கொட்டவும்.
 சுவையான பரங்கிக்காய் துவையல் தயார்.

பொங்கல், உப்புமா, சுண்டல் போன்றவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
சூடான சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.
செய்து பார்த்து சுவைத்து மகிழவும்.
yellow pumpkin chutney

குறிப்பு : எலுமிச்சை சாறுக்கு பதிலாக சிறு கோலி குண்டளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து சேர்த்து அரைக்கலாம்.
பரங்கிக்காய் சிறிது இனிப்பு சுவை கொண்டது. அதனால் அவரவர் சுவைக்கு ஏற்ப சிகப்பு மிளகாய் எடுத்துக்கொள்ளவும்.





மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்க்க

பரங்கிக்காய் பொரியல்
பரங்கிக்காய் பொரியல்
இஞ்சி துவையல்
இஞ்சி
துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
  கரிசலாங்கண்ணி துவையல்
பொடுதலை துவையல்
பொடுதலை
துவையல்
பொங்கல் துவையல்
பொங்கல் 
துவையல்


இந்த சமையல் குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருப்பின் மற்றவர்களும் பயனடையும் விதமாக கீழே உள்ள பெட்டியின் வாயிலாக முகநூல், கூகுள்  மற்றும் சில சமூக வலைதளங்களில் பகிரவும்.
இங்கு தங்கள் கருத்தையும் பதிவிடவும். நன்றி.


Tuesday, February 2, 2016

Kanji-Dosai

#கஞ்சிதோசை : அரிசியையும் தேங்காய் துருவலையும் உபயோகித்து
ஆப்பம்கேரளாஸ்டைல் 2 போல ஒரு சிறு மாறுதலுடன் வித்தியாசமாக செய்யப்படும் ஒரு சுவையான தோசை இந்த கஞ்சி தோசை. இதன் தயாரிப்பு முறை  நீர்தோசை போன்று தோன்றினாலும் சிறிது வேறு படுகிறது.
இனி எப்படி செய்வது என காணலாம்.

kanji dosai


தேவையான பொருட்கள் :
2 கப்பச்சரிசி
1/2 கப்தேங்காய் துருவல் 
2 Tspஉப்பு
1 Tspசர்க்கரை [ விருப்பப்பட்டால் ]

தோசை சுட்டெடுக்க தேவையான அளவு நல்லெண்ணெய்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை போட்டு நன்கு கழுவி தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பின்னர் மாவரைக்கும் இயந்திரத்தில் ஊறவைத்த அரிசி மற்றும் தேங்காய் துருவல்  ஆகியவற்றை தண்ணீர் விட்டு நன்கு மைய அரைத்து  எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

3/4 கப் முதல் 1 கப் வரை தண்ணீர் விட்டு மாவரைக்கும் இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டுள்ள மாவை கழுவி மற்றொரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அடுப்பை பற்ற வைத்து இந்த மாவு கழுவிய தண்ணீர் உள்ள பாத்திரத்தை சிறிய தீயில் சூடாக்கவும்.
தொடர்ந்து கை விடாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
மாவு கலந்த தண்ணீர் சற்று நேரத்தில் கஞ்சி பதத்தை அடைந்து பளபளப்பாக மாறும்.
இப்போது அடுப்பை அணைத்து விட்டு ஆற விடவும்.
தயாரித்த கஞ்சியின் மேல் ஆடை படியாமல் இருக்க அவ்வப்போது கரண்டியால் கலக்கி விடவும்.

ஆறிய கஞ்சியை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும்.

உப்பு மற்றும் சர்க்கரையையும் சேர்த்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

அல்லது முதல் நாள் மாலை மாவு அரைத்து இரவு முழுவதும் புளிக்க விட்டு மறுநாள் காலை கஞ்சி தோசை தயாரிக்கலாம்.

அடுப்பின் மேல் தோசை கல்லை வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் ஒரு சுத்தமான காய்ந்த மெல்லிய சிறு துண்டு துணியை எண்ணெயில் இலேசாக நனைத்து தோசை கல்லை தடவி விடவும்.
இப்போது மாவை கல்லின் ஓரத்தில் இருந்து ஒரு வட்டமாக ஊற்றி நடு வரை நிரப்பவும்.
மேலே சில துளிகள் நல்லெண்ணெய் விடவும்.

வெந்து ஓரங்கள் இலேசாக சிவக்க ஆரம்பித்து இருக்கும்.
திருப்பிப் போட தேவையில்லை.
தோசை திருப்பியினால் தோசையின் மேலே விட்ட எண்ணெயை மெதுவாக தடவி பரப்பி விடவும். இல்லையென்றால்  தோசை வர வரவென்று ஆகி விடும்.
பிறகு கல்லிலிருந்து எடுத்து தட்டில் வைக்கவும்.
இதே போல எண்ணெய் தடவி ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.


பூண்டு மிளகாய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
தக்காளி சட்னி மற்றும் பூண்டு தக்காளி  சட்னியுடனும் நன்றாக இருக்கும்.

kanji dosai

குறிப்பு :
மாவை புளிக்க வைக்காமல் உடனேயும் தோசை தயாரிக்கலாம். சுவை சிறிது மாறுபடும்.





மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து சுவைக்க

மசால் தோசை
மசால் தோசை
ரவா இட்லி
ரவா இட்லி
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
கேவுரு அடை
கேவுரு அடை
ரவா தோசை
ரவா தோசை


இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழே உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.