Search This Blog

Monday, December 3, 2018

Karunai-kizhangu-Chutney

#கருணைக்கிழங்குசட்னி :  #கருணைக்கிழங்கு சட்னியை #கருணைக்கிழங்குகுழம்பு அல்லது #கருணைக்கிழங்குபுளிகுழம்பு என்றும் கூறலாம். இந்த குழம்பு செய்வதற்கு பருப்பு வேகவைத்து சேர்க்க வேண்டிய தேவையில்லை. இது கத்தரிக்காய் சட்னி  போன்ற சுவையுடைய ஒரு குழம்பு ஆகும்.
கிழங்கை நன்கு வேகவைத்த பின்னர் தோலை நீக்கி நன்கு மசித்து விட வேண்டும். மசித்த கிழங்குடன் சாம்பார் பொடி, மல்லித்தூள், அரைத்துவிட்ட குழம்பு தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். நறுக்கிய வெங்காயத்தை கடுகு, கருவேப்பிலை, கீறிய பச்சைமிளகாய் மற்றும் பெருங்காயத்துடன் வதக்கி கிழங்கு கலவையுடன் சேர்க்க வேண்டும். புளியை கரைத்து விட்டு நன்கு கலக்கி இரண்டு விசில் வரும்வரை குக்கரில் வேகவைத்து எடுத்தால் சுவையான கருணைக்கிழங்கு சட்னி தயார்.
இனி தேவையான பொருட்களின் அளவுகள் மற்றும் செய்முறையை காண்போம்.



தேவையானவை :
2 ( அ ) 3கருணைக்கிழங்கு
சிறு நெல்லிக்காய் அளவு புளி
1வெங்காயம், பொடியாக நறுக்கவும்
10 - 12சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கவும்
2 - 3பச்சை மிளகாய்
10 - 12கறுவேப்பிலை
1/2 Tspகடுகு
1/4 Tspபெருங்காய தூள்
1 Tspகடலை எண்ணெய்
1 1/2 Tspஉப்பு [ adjust ]
2 pinchesமஞ்சத்தூள்
2 Tspசாம்பார் பொடி
1 Tspஅரைத்துவிட்ட குழம்பு தூள்
1 Tspகொத்தமல்லித்தூள்

சிறிது கொத்தமல்லி தழை அலங்கரிக்க

செய்முறை :
கருணைக்கிழங்கை மண் போக  நன்கு கழுவிய பின்னர் குக்கரில் போடவும்.
ஒரு கப் தண்ணீர் ஊற்றி 1/4 Tsp உப்பு சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வரும் வரை வேக விடவும். அல்லது ஒரு விசில் வந்த பின்னர் தீயை குறைத்து 7 நிமிடம் வேகவைக்கவும்.
வெயிட்டை சிறிது சிறிதாக தூக்கியோ அல்லது தண்ணீர் குழாயின் அடியில் வைத்து தண்ணீரை ஊற்றியோ உடனே ஆவியை வெளியேற்றவும்.
வெந்த கிழங்கை குக்கரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்.
குக்கரிலுள்ள வேகவைத்த தண்ணீரை கீழே கொட்டி விடவும்.
கிழங்கின் தோல் நீக்கி குக்கரினுள் இட்டு மசிக்கும் கரண்டி கொண்டு நன்கு மசித்து விடவும்.
நன்கு மசித்த பின்னர் 1/2 கப் தண்ணீர், மஞ்சத்தூள், சாம்பார் பொடிஅரைத்துவிட்ட குழம்பு தூள்மற்றும் கொத்தமல்லித்தூள் சேர்க்கவும்.
அடுப்பை பற்ற வைத்து குக்கரை மிதமான தீயில் க்சூடாக்கவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விட்ட பின்னர் பெருங்காயத்தூள், கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வாசனை வரும் வரை வதக்கினால் போதும்.
அடுப்பை அணைத்து விட்டு வதக்கியவற்றை கொதிக்கும் கருணைக்கிழங்கு கலவையில் கொட்டவும்.

புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி குக்கரில் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி தீயை அதிகப்படுத்தி இரண்டு விசில் வரும் வரை வைத்திருக்கவும்.
ஆவி அடங்கியபின் திறந்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சிறிது கறுவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
இட்லி மற்றும் தோசை உடன் தொட்டுக்க வும் நன்றாக இருக்கும்.












மேலும் சில உணவு குறிப்புகள் முயற்சி செய்து பார்த்து ருசிக்க

வெங்காய சாம்பார்
வெங்காய சாம்பார்
தக்காளி சட்னி
தக்காளி
சட்னி
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு
வெண்டைக்காய் தக்காளி கறி
வெண்டைக்காய் தக்காளி கறி
அவியல்
அவியல்


இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ட்விட்டர்,  G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

Saturday, December 1, 2018

Athalaikai-Sambar

#அதலைக்காய்சாம்பார் : #அதலைக்காய், பாகற்காய் போல கசப்பு சுவை கொண்டது. ஆனால் உருவத்தில் மிக மிகச் சிறியது. #அதலைக்காய் கொண்டு அதலைக்காய் மசாலா கறி செய்து சுவைத்தோம். இப்போது அதலைக்காய் உபயோகித்து சாம்பார் செய்யும் முறையை காண்போம்.

Tiny BitterGourd Sambar


தேவையானவை :
1/3 கப்துவரம் பருப்பு வேகவைத்தது
நெல்லி அளவுபுளி, ஊறவைக்கவும்
1 சிட்டிகைமஞ்சத்தூள்
3 Tspசாம்பார் மிளகாய்த்தூள்
1 Tspகொத்தமல்லித்தூள் 
சிறிதளவுபரங்கிக்காய், துண்டுகளாக்கவும்.
1முருங்கைக்காய், வெட்டி வைக்கவும்.
20 - 25அதலைக்காய், 2 ( அ ) 4 ஆக வெட்டவும்.
7 - 8சின்ன வெங்காயம் உரித்து வைக்கவும் 
2பச்சை மிளகாய், நீளவாக்கில் அரியவும்.
10 - 15கருவேப்பிலை
சின்ன துண்டுபெருங்காயம்
1 Tspகடலை எண்ணெய்
1/2 Tspகடுகு
1 1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
2 Tspகொத்தமல்லி தழை

குறிப்பு : உங்களுக்கு பிடித்தமான சாம்பாருக்கு உகந்த வேறு காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை :
குக்கரில் வேக வைத்த பருப்பை எடுத்துக்கொள்ளவும்.
அதனுடன் மஞ்சத்தூள், கொத்தமல்லி தூள், சாம்பார் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை போட்டு 3/4 கப் தண்ணீர் விட்டு நன்கு கலந்து விடவும்.
அதனுடன் வெட்டிவைத்துள்ள காய்கறிகள், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
ஊறவைத்துள்ள புளியை 3/4 கப் தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றவும்.
அடுப்பின் மீது அதிக அளவு தீயில் வைத்து மூடி போட்டு வெயிட் வைத்து சூடாக்கவும்.
இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
குக்கரின் ஆவி அடங்கியவுடன் திறந்து பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
சுவையான அதலைக்காய் சாம்பார் தயார்.
சூடான சாதத்தின் மீது ஒரு கரண்டி அதலைக்காய் சாம்பார் விட்டு நன்கு பிசைந்து பிடித்தமான பொரியல் அல்லது காரக்கறியுடன் சுவைக்கவும்.

Tiny BitterGourd Sambar








மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் 
முயற்சி செய்து பார்க்க
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
பூசணிக்காய் மோர்க்குழம்பு
பூசணிக்காய் மோர்க்குழம்பு
வெந்தய பச்சடி
வெந்தய பச்சடி
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு
கொள்ளு சுண்டல்
கொள்ளு
சுண்டல்


Thursday, September 6, 2018

Sundal-Varieties

#சுண்டல்வகைகள் : #சுண்டல் என்றதும் உங்களுக்கு கடற்கரை ஞாபகம் வருகிறதா? இது அதுவல்ல!.... இது அரிசி மற்றும் பச்சை பருப்பு கொண்டு பாரம்பரியமாக செய்யப் படும் ஒரு உணவு வகையாகும்.அரிசியும் பருப்பும் உபயோகித்துதானே பொங்கல் செய்யப்படுகிறது. பிறகு இதிலென்ன விசேஷம் என தோன்றுகிறதா??!! பொருட்கள் என்னமோ ஒன்றுதான். ஆனால் செய்முறையில் சிறிது வித்தியாசம். இந்த சிறு வித்தியாசம்  சுவையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்து விடுகிறது.

பொங்கல் போல ஒன்று சேர்ந்து கொழகொழவென இல்லாமல் உதிர் உதிராக இருக்கும். அதனால் இதனை பழங்கால Fried Rice  என கூறலாம்.
அரிசி உப்புமாவை போலவும் இதன் ருசி இருக்காது. பருப்பின் வாசனையுடன் மிக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

மேலும் இதன் சுவை அரிசியின் வகையை ஒத்ததாகவே இருக்கும்.
உதாரணமாக பாசுமதி அரிசியில் செய்யும் போது கிடைக்கும் சுவையும் பொன்னி, சோனாமசூரி போன்ற வகை பச்சரிசியுடன் செய்யும் போது அமையும் சுவையும் சிறிது வித்தியாசமாகவே இருக்கும்.
இது தவிர சிறு தானியங்கள் கொண்டும் சுவையான சுண்டல் செய்யலாம்.

இங்கு சுண்டல் வகைகளின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
படத்தின் மீது ஒருமுறை சொடுக்கினால் சமையல் குறிப்பின் பதிவுக்கு செல்லலாம்.

அரிசி சுண்டல்
அரிசி சுண்டல்
குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி சுண்டல்
வரகரிசி சுண்டல்
வரகரிசி சுண்டல்
புளி சுண்டல்
புளி சுண்டல்



சுண்டலுக்கு தொட்டுக்க தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.

மற்ற சட்னி வகைகள் கூடவும் ருசிக்கலாம்.


Monday, September 3, 2018

Boli-Puri-Roti-Varieties

#போளிவகைகள் : #போளி என்பது இனிப்பு அல்லது கார பூரணத்தை போளி மாவினுள் வைத்து சப்பாத்தி போல கைகளால் வாழை இலையின் மேல் தட்டி பிறகு தோசைக்கல்லில் சுட்டெடுக்கும் ஒரு பலகாரமாகும்.
போளி செய்ய, போளி மாவு மற்றும் பூரணம் முதலிலேயே தயார் செய்ய வேண்டியது அவசியம். 
இங்கு இனிப்பு மற்றும் கார போளி,
மேலும் #பூரணம் செய்யும் குறிப்புகளின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


போளிவகைகள்
போளி மாவு
போளி மாவு
சோயா பூரண போளி
சோயா பூரண போளி
கார போளி
கார போளி
சோயா பூரணம்
சோயா பூரணம்
தேங்காய் பூரணம்
தேங்காய் பூரணம்




பூரி வகைகள் :
அடுத்ததாக இங்கு பல்வேறு பூரி செய்முறைகளின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 


பூரி வகைகள்
பூரிு
பூரிு
கொடிப்பசலை பூரிி
கொடிப்பசலை பூரிி
பீட்ரூட் பூரிி
பீட்ரூட் பூரிி


ரொட்டி [ அ ] சப்பாத்தி வகைகள் :

பல வகையான ரொட்டி [ அ ] சப்பாத்தி செய்முறைகளின் இணைப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.



ரொட்டி [ அ ] சப்பாத்தி வகைகள்
அமராந்த் ரொட்டி
அமராந்த் ரொட்டி
பாப்பரை [ Buckwheat ] சப்பாத்தி
பாப்பரை [Buckwheat ] சப்பாத்தி
சிகப்புக்கீரை சப்பாத்தி
சிகப்புக்கீரை சப்பாத்தி
பாலக்கீரை சப்பாத்தி
பாலக்கீரை சப்பாத்தி



தொட்டுக்கொண்டு சுவைக்க






Athalaikai-Curry

#அதலைக்காய்கறி : ஜூலை மாதம் முதல் வாரம் ஹூப்ளி நகரத்திற்கு சென்றிருந்தேன். அங்கு காய்கறி கடைத்தெருவிற்கு சென்றேன். அங்கு காய்கறி விற்பவர்கள் குவியல் குவியலாக பச்சை நிறத்தில் ஒரு காயை விற்க வைத்திருந்தார்கள். நான் முதலில் அவை பச்சை மிளகாயின் ஒரு வகையாக இருக்கும் என எண்ணினேன். பின்பு அருகில் சென்று பார்த்த போது பாகற்காயை போன்று மிக சிறு வடிவத்தில் இருப்பதைக் கண்டேன். காய் விற்றுக்கொண்டிருந்த வணிகர்களிடம் அதன் பெயரை வினவினேன். அதனை உபயோகித்து என்னென்ன செய்யலாம் எனவும் வினவினேன். அந்த காயிற்கு சொன்ன கன்னட பெயர் எனக்கு நினைவில் இல்லை. அவர்கள் இக்காயைக்கொண்டு குழம்பு மற்றும் கறி செய்யலாம் என சொன்னார்கள்.
புதிய காயின் சுவையை முயற்சி செய்யலாம் என வாங்கி வந்தேன். அதன் தோற்றம், சுவை மற்றும் மணம் பாகற்காயைப் போன்றே இருந்தது.
பின்பு கூகுளில் தேடிய போது தமிழில் இந்த காயின் பெயர் #அதலைக்காய் என்றறிந்தேன். இவ்வகை காய்கள் தமிழ் நாட்டின் தெற்கு மாவட்டங்களில் கிடைக்கும் என அறிந்துகொண்டேன். மேலும் நீரிழிவு மற்றும் குடல் புழுக்களை நீக்கவல்லது என அறிந்தேன். மேலதிக விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.
Athalaikai [ அதலைக்காய் ]

அதலைக்காயை உபயோகித்து பாகற்காய் மசாலா கறி போன்று செய்து சுவைத்தேன். அதன் சமையல் குறிப்பு இங்கு பகிர்ந்துள்ளேன்.

#Athalaikai [ #அதலைக்காய் ]


தேவையானவை :
150 gmஅதலைக்காய்
1 Tspகடலை எண்ணெய்
1 சிட்டிகைமஞ்சத்தூள்
1/4 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/2 Tspஉப்பு
அரைக்க :
1 1/2 Tbspதேங்காய் துருவல்
2 - 3சிகப்பு மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspசீரகம்
1/2 Tspசோம்பு
1/4 Tspகொத்தமல்லி விதை
10 - 15கருவேப்பிலை
சிறிதளவுகொத்தமல்லி தழை
2 பற்கள்பூண்டு
1 medium sizeவெங்காயம், நறுக்கவும்
1/8 Tspஉப்பு

செய்முறை :
அதலைக்காயை கழுவி சுத்தம் செய்த பின்னர் ஒவ்வொரு காயையும் இரண்டாகவோ அல்லது நான்காகவோ நறுக்கி வைக்கவும். விதை சிறிது கடினமாக இருந்தால் நீக்கி விடவும்.

வெங்காயம் தவிர்த்து மற்ற அரைக்கவேண்டிய பொருட்கள் அனைத்தையும் மிக்சியில் போட்டு அளவான தண்ணீர் விட்டு அரைக்கவும்.
கெட்டியாக அரைப்பது நல்லது.
கடைசியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் இட்டு தனியே வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வெடித்த பின்னர் உளுத்தம் பருப்பை இட்டு சிவக்க வறுத்த பிறகு வெட்டி வைத்துள்ள அதலைக்காயை சேர்க்கவும்.
மஞ்சத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலந்து விடவும்.
சிறிது தண்ணீர் தெளித்து மூடியால் மூடி வேக விடவும்.

காய் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பச்சை வாசனை போகும் வரை சிறிய தீயில் வைத்திருக்கவும்.
இடையில் அவ்வப்போது கிளறி விடவும்.
உப்பு சரி பார்க்கவும்.

தண்ணீர் வற்றி நன்கு வதங்கியவுடன் கொத்தமல்லி தழையை கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மேலும் சிறிது கொத்தமல்லி தழைகளை தூவி அலங்கரிக்கவும்.
சுவையான அதலைக்காய் கறி தயார்.

சாம்பார் மற்றும் ரசம் விட்டு பிசைந்து இக்கறியை தொட்டுக்கொண்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்.








மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் 
முயற்சி செய்து பார்க்க
சுண்டைக்காய்மசாலாகறி
சுண்டைக்காய்
மசாலாகறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு
மசாலா கறி
கொள்ளு சுண்டல்
கொள்ளு
சுண்டல்