Search This Blog

Monday, January 4, 2021

Browntop_Millet_Pongal

குலசாமை பொங்கல் : 

Browntop millet Pongal [ குலசாமை பொங்கல் ]

#குலசாமை ஆங்கிலத்தில் பிரவுன் டாப் மில்லெட் [ Browntop Millet or sometimes American Millet ] என அழைக்கப்படுகிறது.

அறிவியல் பெயர் : Brachiaria ramosa or Urochloa ramosa

கன்னட பெயர் : Pedda sama or korle

மிகப்பழங்காலத்திலிருந்தே குலசாமை மக்களின் உணவாக இருந்த போதிலும் இடையில் இத்தானியம் உபயோகத்திலிருந்து மறைந்தே போய்விட்டது. தற்போது இத்தானியம் கர்நாடகத்தில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இதைத்தவிர தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் சிற்சில இடங்களில் பயிரிடப்படுகின்றன. குலசாமை மிகவும் குறைந்த அளவிலே விளைவிக்கப்படுவதால் மற்ற சிறுதானியங்களை விட விலை கூடுதலாகவே இருக்கிறது.

குலசாமை பழுப்பு பச்சையுடன் கூடிய மஞ்சள் நிறம் கொண்டது. 

இதன் நார்சத்து மற்ற அனைத்து சிறுதானியங்கள் மற்றும் மற்ற தானியங்களை விட மிக அதிக அளவில் கொண்டுள்ளது. அதிக நார்சத்து உடலின் நச்சுக்களை வெளியேற்ற மிகவும் உதவுகிறது.

அகில இந்திய சிறுதானிய ஆராய்ச்சி கழகத்தின் வலைதளத்தின் படி 100 கி குலசாமையில் அடங்கியுள்ள சத்துக்கள் :

நார்சத்து 12.5 கி, புரதச்சத்து  11.5 கி, தாதுப்பொருட்கள் [ minerals ] 4.21 கி, நியாசின் [ B 3 ] 18.5 mg, இரும்புசத்து 0.65 mg.

எல்லாவகையான சிறுதானியங்களையும் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரமாவது ஊறவைத்தபின்னர் சமைப்பது நல்லது. அவ்வாறு ஊறவைப்பதால் அத்தானியத்தின் முழுப்பலன்களும் உடலுக்குக்  கிடைக்கிறது.

குலசாமையை ஊறவைக்க வேண்டுமாதலால் 2 மணிநேரம் முன்பே திட்டமிட  வேண்டும்.

தேவையான பொருட்களை சேகரிக்க 10 நிமிடங்கள் 

தயாரிக்க ஆகும் நேரம்               15 நிமிடங்கள்

தயாரிக்கப்படும் அளவு               2 முதல் 2 1/2 கப்.


தேவையானவை :
3/4 கப்குலசாமை [Browntop millet]
1/4 கப்பச்சைப்பருப்பு
1/4 Tspவெந்தயம் [ optional ]
1 Tspமிளகு
1 1/2 Tspசீரகம்
1 Tspஇஞ்சி பொடியாக நறுக்கியது
1 Tspமஞ்சள் கிழங்கு பொடியாக நறுக்கியது*
10 - 15கருவேப்பிலை
4 - 5 பற்கள்பூண்டு, பொடியாக நறுக்கவும்
1பச்சை மிளகாய் [ optional ]
3/4 Tspஉப்பு [ adjust ]
தாளிக்க :
5 - 6முந்திரி பருப்பு, துண்டுகளாக்கவும்
1 Tspசீரகம்
8 - 10மிளகு
10 - 12கருவேப்பிலை
3 -4 Tspநெய்

* மஞ்சள் கிழங்கு இல்லையென்றால் 1/4 Tsp மஞ்சத்தூள் உபயோகிக்கவும்..

செய்முறை :



குலசாமை யை ஒரு பாத்திரத்தில் எடுத்து ஒரு முறை கழுவிய பின்னர் 3 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

மிளகை ஒன்றிரண்டாக உடைத்து வைத்துக்கொள்ளவும்.

இரண்டு மணிநேரம் கழிந்த பின்னர் ஊறவைத்த குலசாமையை தண்ணீருடன் சேர்த்து 3 லிட்டர் குக்கருக்கு மாற்றவும்.

அதில் கழுவிய பச்சைப்பருப்பு, வெந்தயம், சீரகம், மிளகு உடைத்தது, பொடியாக நறுக்கிய இஞ்சி, மஞ்சள், பூண்டு மற்றும் உப்பு சேர்க்கவும்.

ஒரு கரண்டியால் நன்கு கலந்து விடவும்.

குக்கரை மூடி விசில் பொருத்தி அதிக தீயில் சூடாக்கவும்.

ஒரு விசில் வந்த பிறகு தீயைக் குறைத்து மேலும் 8 நிமிடங்கள் வேகவிடவும்.

ஆவி அடங்கும் வரை பொறுத்திருக்கவும்.

அதனிடையே அடுப்பில் மிதமான தீயில் ஒரு வாணலியை சூடாக்கவும்.

முதலில் சிறிது நெய் விட்டு முந்திரி துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

அடுத்து அதே வாணலியில் நெய் விட்டு சீரகத்தை வெடிக்க விட்டு பின்னர் மிளகு சேர்த்து பொரியும் வரை வறுக்கவும்.

மிளகு நன்கு வறுபட்டவுடன் அடுப்பை அணைத்துவிட்டு கருவேப்பிலையை கிள்ளிப்போடவும்.

இதற்குள் குக்கரில் ஆவி அடங்கியிருக்கும்.

குக்கரின் மூடியை திறந்து பொங்கலின் மீது தாளித்த மிளகு, சீரகம் கருவேப்பிலை மற்றும் முந்திரியைப்போடவும்.

கரண்டியால் கிளறி விடவும்.

அருமையான குலசாமை பொங்கல் தயார்.

சூடாக தட்டில் பரிமாறி தாராளமாக நெய் ஊற்றி, 

தேங்காய் சட்னி  அல்லது  பொங்கல் துவையல் 


அல்லது வடவத்துவையல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் சுவைக்கவும்.


வெங்காய சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். 

Browntop millet Pongal [ குலசாமை பொங்கல் ]






மேலும் சில சிற்றுண்டிகள் செய்து பார்த்து ருசிக்க :
Masaal dosai
மசால் தோசை 
குலசாமை ரொட்டி [ Browntop millet bread ]
குலசாமை ரொட்டி  
Appam
ஆப்பம் 
குலசாமை [ browntop millet ] முடக்கத்தான் தோசை
குலசாமை முடக்கத்தான் தோசை
Kuthiraivaali neer dosai
குதிரைவாலி நீர் தோசை 
தினை சக்கரை பொங்கல்
தினை சக்கரை பொங்கல் 

மற்றும் பல சிற்றுண்டி வகைகளுக்கு 

டிபன் வகைகள்

சிறுதானிய சமையல் முறைகள்

No comments:

Post a Comment