Search This Blog

Sunday, April 27, 2014

Idly

#இட்லி : இட்லி மாவு தயாரிக்க தேவையான பொருட்களின் அளவை பார்த்தோம். எவ்வாறு அரைத்து எடுத்து வைப்பது என்றும் பார்த்தோம். இப்போது இட்லி மாவிலிருந்து இட்லி எப்படி ஆவியில் வேகவைத்து எடுப்பது என்று பார்ப்போம். இட்லி செய்வதற்கு இட்லி பானை அல்லது குக்கர் தேவை.
இட்லி பானையில் வைத்து இட்லி செய்வதற்கு குழியுடன் கூடிய தட்டுகள் இருக்கும். ஒவ்வொரு குழியிலும் துளைகள்  இடப் பட்டிருக்கும். அவ்வாறு உள்ள தட்டின் மேல் துணி விரித்து இட்லி ஊற்றி வேக விட வேண்டும்.

குழிகளில் ஓட்டை இல்லாவிடின் எண்ணெய் தடவியும்  இட்லி மாவை ஊற்றி எடுக்கலாம் அல்லது துணியை பரப்பியும் இட்லியை வேக வைக்கலாம்.

குக்கரில் வைப்பதெற்கென்று தனியாக தட்டுகள் இருக்கும். குக்கரில் இட்லி வேக வைக்கும் போது மூடியில் வெயிட் பொருத்தக் கூடாது.

செய்முறை :
முதலில் துணி போட்டு இட்லி எவ்வாறு வேக வைத்து எடுப்பது என பார்ப்போம்.
இட்லி பானையில் 3 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.


இட்லி தட்டின்  மேல் ஈரமான துணியை விரிக்கவும்.


இட்லி மாவினால் ஒவ்வொரு குழியையும் நிரப்பவும்.


இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லி தட்டை இட்லி பானையினுள் வைத்து மூடியால் மூடவும்.


சரியாக பத்து நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.
வெந்து விட்டதா என கத்தியையோ அல்லது தேக்கரண்டியின் பின் பாகத்தையோ இட்லியினுள் சொருகி பார்க்கவும்.
மாவு ஒட்டிக்கொண்டு வந்தால் மேலும் 2 நிமிடங்கள் வேகவிடவும்.


வெந்துவிட்டதென்றால் இட்லி தட்டை போன்ற அளவுள்ள தட்டின் மேல் அப்படியே தலை திருப்பி கவிழ்க்கவும்.


இட்லி தட்டை மெதுவாக எடுத்து விடவும்.
இட்லி துணியுடன் ஒட்டிகொண்டிருக்கும்.

இட்லி

துணியின் மேல் சிறிது தண்ணீர் தெளித்து மெதுவாக இட்லியிலிருந்து துணியை பிரித்தெடுக்கவும்.

இட்லியை சூடாக வைத்திருக்க உதவும் பாத்திரத்தில் எடுத்து அடுக்கவும்.

மறுபடியும் இட்லி தட்டின் மேல் துணியை பரப்பி அடுத்த ஈட்டிற்கு மாவு நிரப்பி மறுபடியும் ஆவியில் வேக விடவும்.
ஒவ்வொரு ஈடு வேக வைத்து எடுக்கும் போதும் இட்லி பானையில் உள்ள தண்ணீர் குறைந்திருந்தால் சிறிது சேர்க்கவும்.

ஓட்டைகள் இல்லாத இட்லி தட்டில் இட்லி ஊற்றி எடுப்பது எப்படி என பார்ப்போம்.

இட்லி தட்டின் குழிகளில் ஒரு சொட்டு நல்லெண்ணெய் விடவும்.



எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும்.



இப்போது குழிகளில் மாவை நிரப்பவும்


இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் இட்லி தட்டை உள்ளே வைத்து மூடவும்.



ஆவியில் எட்டு நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

குழிகளிலிருந்து இட்லி ஒட்டிக்கொள்ளாமல் எடுக்க ஒவ்வொரு இட்லியின் ஓரத்தை சுற்றி நீர் விட்டு பிறகு தேக்கரண்டியால் எடுக்கவும். தேக்கரண்டியை அடிக்கடி தண்ணீரால் ஈரப்படுத்திக்கொள்ளவும்.

இட்லி


சூடான இட்லியை குழிவான தட்டில் வைத்து இட்லியின் மேலே தக்காளி சாம்பார் அல்லது சாம்பார் ஊற்றி ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு ருசிக்கவும்.

இட்லி தக்காளி சாம்பார்

இட்லியை தேங்காய் சட்னி யுடன் சுவைக்கவும்.

இட்லியுடன் காரமான சிகப்பு மிளகாய் சட்னி அல்லது பச்சை மிளகாய் சட்னி அல்லது பூண்டு மிளகாய் சட்னி யுடன் சுவைத்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

இட்லி மிளகாய் பொடி யுடன் சாப்பிட்டால் அதன் ருசியும் மணமும் தனிதான்.

குறிப்பு :

இட்லி பானையினுள் அல்லது குக்கரினுள்  இரண்டு அல்லது அதற்கு மேலும் ஒன்றன் மேல் ஒன்றாக தட்டுக்களில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கலாம்.
அவ்வாறு செய்யும் போது மேலே உள்ள தட்டிலிருந்து தண்ணீர் கீழே உள்ள தட்டின் இட்லியின் மேல் விழுந்து இட்லியை நச நசவென ஆகி விடும்.
அதை தடுக்க இட்லி தட்டில் மாவு நிரப்பிய பிறகு மாவின் மேலும் ஒரு ஈரமான துணியை விரித்து உள்ளே வைக்க வேண்டும். அப்போதுதான் மேல் தட்டிலிருந்து விழும் தண்ணீரை இந்த துணி உறிஞ்சிக்கொள்ளும்.

Lunch Box : 
 
இட்லி மதிய உணவிற்காக அல்லது பயணத்தின் போது  எடுத்து செல்ல ஏற்ற உணவாகும்.
இட்லியின் மேல் நல்லெண்ணெய் தடவி சூடு ஆறிய பிறகு எடுத்து டிபன் டப்பாவில் அடைக்க வேண்டும்.
தொட்டுக்கொள்ள சட்னி அல்லது சாம்பாரை தனியாக வேறொரு டப்பாவில் எடுத்து செல்வது நல்லதாகும்.

இட்லியின் மேல் இட்லி மிளகாய் பொடியை நல்லெண்ணையுடன் சேர்த்து  தடவி  ஆற விட்டு எடுத்து அடுக்கினாலும் அருமையாக இருக்கும்.

 இட்லியை நல்லெண்ணெய் தடவி வாழை இலையில் வைத்து பொட்டலம் மடித்து எடுத்து செல்வதற்காக கட்டினால் இன்னும் அருமையான மணத்துடன் இருக்கும். 





மற்ற இட்லி வகைகள்

சோள இட்லி
சோள இட்லி
ரவா இட்லி
ரவா இட்லி
கோதுமை ரவா இட்லி
கோதுமைரவா இட்லி
காஞ்சீபுரம் இட்லி
காஞ்சீபுரம் இட்லி
கம்பு இட்லி
கம்பு இட்லி
கள்ளாப்பம்
கள்ளாப்பம்

தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க



இந்த சமையல் செய்முறை விளக்கம் மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.




No comments:

Post a Comment