Search This Blog

Thursday, January 2, 2014

Ragi Dosai

#கேழ்வரகுதோசை : #கேழ்வரகு என்பதை பேச்சு வழக்கில் கேவுரு என்றும் கேப்பை என்றும் சொல்லப் படுகிறது. ஆங்கிலத்தில் Ragi என்றும் Finger Millet என்றும் அழைக்கப்படுகிறது. கேழ்வரகு சிறுதானியம் வகைகளில் ஒன்றாகும். கேழ்வரகு மாவிலிருந்து கூழ், அடை , களி மற்றும் தோசை போன்ற உணவு வகைகளை செய்யலாம். தற்போது கடைகளில் கேழ்வரகு அவல் , உடனே செய்யக்கூடிய இடியாப்பம் போன்றவையும் கிடைகின்றன.
சிறுதானிய வகைகளை பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை அழுத்தவும்.

Millets - சிறுதானிய வகைகள் 

குறிப்பாக கேழ்வரகில் சுண்ணாம்பு ( கால்சியம் - Calcium ) சத்து மற்ற தானியங்களை விட அதிக அளவில் உள்ளது.

இனி தோசை எவ்வாறு செய்வது என பார்ப்போம் .
கொடுக்கப்பட்டுள்ள அளவு 10 முதல் 12 தோசைகள் செய்ய போதுமானது.

கேழ்வரகு தோசை [ ராகி தோசை ]

தேவையான பொருட்கள் :
3/4 கப்                                   கேழ்வரகு மாவு
1/4 கப்                                    கோதுமை மாவு
1/2 கப்                                   தோசை அல்லது இட்லி மாவு
1/2 Tsp                                     உப்பு

மாவில் சேர்க்க :
1 அ 2 Tbsp                             வெங்காயம் பொடியாக நறுக்கியது
1 Tbsp                                      குடை மிளகாய்  பொடியாக நறுக்கியது ( இருந்தால் )
1 Tbsp                                      காரட் துருவியது ( இருந்தால் )
10 அ 15                                  கருவேப்பிலை  பொடியாக நறுக்கியது
1 Tsp                                        பச்சை மிளகாய்  பொடியாக நறுக்கியது
1 Tsp                                       சீரகம்
1 Tsp                                       கடுகு
எண்ணெய் தோசை சுடுவதற்கு தேவையான அளவு.

செய்முறை : 
கொடுக்கப்பட்டுள்ள எல்லா மாவையும் 1 கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
கரைத்த மாவு நீர்க்க இருக்க வேண்டும்.
கரைத்த மாவை 1/2 மணி நேரம் ஊற விடவும்.
பிறகு அதில் சேர்ப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் கடுகு நீங்கலாக சேர்த்து கலக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து ஒரு தேக்கரண்டி என்னை விட்டு கடுகை வெடிக்க விட்டு மாவில் சேர்க்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் மிதமான தீயில் சூடேற்றவும்.
எண்ணெய் 1/2 Tsp கல்லின் மேல் ஊற்றி தடவி விடவும்.
தோசை மாவை கரண்டியில் எடுத்து தோசைகல்லில் ஊற்றவும்.
மாவை சுற்றி முதலில் ஊற்றி நடுவுக்கு வர வேண்டும்.
தோசை சுடும் முறை  யை காணவும்.

இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக வெந்து கொண்டிருக்கும் தோசை மேல் விடவும்.
தோசையின் ஓரம் இலேசாக சிவந்து வரும் போது தோசை திருப்பியினால் திருப்பி சுட்டு எடுக்கவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்த பின் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
கேழ்வரகு தோசை [ ராகி தோசை ] கேழ்வரகு தோசை [ ராகி தோசை ]

தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
மற்ற சட்னி வகைகளும் இட்லி மிளகாய் பொடியும் கூட இந்த தோசையுடன்  நன்றாக இருக்கும்.

குறிப்பு :  இட்லி அல்லது தோசை மாவுக்கு பதிலாக 1/4 கப் தயிர் மற்றும் 1/4 கப் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
கோதுமை மாவுக்கு பதிலாக மைதா உபயோகப்படுத்தலாம்.




முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள்

கேழ்வரகு [ ராகி ] குழிபணியாரம்
கேழ்வரகு
குழிபணியாரம்
கேழ்வரகு அடை [ ராகி அடை ]
கேழ்வரகு அடை
கேழ்வரகு புட்டு [ ராகி புட்டு ]
கேழ்வரகு புட்டு
கம்பு தோசை
கம்பு தோசை
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை


தொட்டுக்க சட்னி வகைகள்


No comments:

Post a Comment