#தர்பூசணி #பானம் : வெய்யில் காலங்களில் தர்பூசணி பழம் சாலையோரத்தில் குவிக்கப்பட்டு விற்கப்படும். பச்சை நிறத்தின் வெவ்வேறு நிறங்களில் இந்த பழங்களை காணலாம். இந்த பழம் கோடையில் உடலை குளிர்விக்க மிக மிக அவசியமானது.
இதில் தொண்ணூறு சதவிகிதம் தண்ணீர் சத்தும் மீதி சதைபற்றும் மிகுந்து காணப்படுகிறது. இத்தண்ணீர் சத்து கோடையில் உடலை குளிர்விக்க மிக அத்தியாவசியமாகும். இனிப்பும் நிறைந்த பழமாகும்.
ஜூஸ் செய்யும் போது சில்லென்று வேண்டுமானால் ஐஸ் கட்டிகளுடன் சேர்த்து அடித்து தயாரிக்கலாம். ஆனால் சிலருக்கு மிக குளிர்ந்த பானம் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. பழங்களை குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்து பின்னர் ஜூஸ் செய்தால் சிறிது சில்லென்று இருக்கும்.
மற்ற பானங்கள்
இதில் தொண்ணூறு சதவிகிதம் தண்ணீர் சத்தும் மீதி சதைபற்றும் மிகுந்து காணப்படுகிறது. இத்தண்ணீர் சத்து கோடையில் உடலை குளிர்விக்க மிக அத்தியாவசியமாகும். இனிப்பும் நிறைந்த பழமாகும்.
இனி இந்த பழத்தை கொண்டு எப்படி பானம் தயாரிக்கலாம் என காண்போம்.
தேவையான பொருட்கள் :
2 கப் தர்பூசணி பழத்துண்டுகள்
2 Tsp எலுமிச்சை சாறு [ புளிப்பு சுவைக்காக ]
1 சிட்டிகை உப்பு
2 Tsp தேன் [ விரும்பினால் ]
அலங்கரிக்க :
மெல்லியதாக அரிந்த தர்பூசணி துண்டுகள்
செய்முறை :
மிக்ஸி ஜாரில் கொடுக்கப்பட்டுள்ள அணைத்து பொருட்களையும் அடித்து ஜூசாக்கவும்.
ஜூஸ் பருகும் கண்ணாடி கோப்பையில் ஊற்றி மேலே தர்பூசணி பழ துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும்.
மற்ற பானங்கள்
தர்பூசணி ஆரஞ்சு பானம் |
தர்பூசணி ஆப்பிள் பானம் |
No comments:
Post a Comment