#பயத்தம்பருப்புஉருண்டை : #ரவாஉருண்டை போலவே இதுவும் பாரம்பரியமாக தீபாவளியின் போது செய்யப்படும் இனிப்பு வகைகளில் ஒன்றாகும். இவைகள் இரண்டையும் புதிய நெய் காய்ச்சும் போது செய்தால் சுவையும் மணமும் மிக மிக அருமையாக இருக்கும். உருண்டை பிடிப்பதுதான் சிறிது சிரமமான வேலை. ஆனால் ருசியை நினைத்தால் உருண்டை பிடிப்பது சிரமமாக தோன்றாது.
மேலும் இந்த உருண்டை ரவா உருண்டையை காட்டிலும் சத்துக்கள் நிறைந்தது. பருப்பில் செய்திருப்பதால் ப்ரோடீன் சத்து அதிகமாக உள்ள தின் பண்டமாகும். குழைந்தைகளுக்கு அவசியம் செய்து கொடுக்க வண்டிய இனிப்பாகும்.
இனி எப்படி என காண்போம்.
தேவையான பொருட்கள் :
1/2 கப் பயத்தம் பருப்பு
1/2 கப் சர்க்கரை
2 அ 3 ஏலக்காய்
1/4 கப் நெய்
5 - 6 முந்திரி பருப்பு
செய்முறை :
ஒரு வாணலியை அடுப்பின் மேல் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.
அதில் பருப்பை சேர்த்து விடாமல் கிளறி பொன்னிறமாக வறுக்கவும்.
பொன்னிறமாக வறுத்த பின்னர் ஒரு தட்டில் தனியே எடுத்து வைத்து ஆற விடவும்.
ஆறிய பின்னர் மிக்ஸியில் நன்றாக மைய அரைத்து மாவாக்கவும்
சல்லடையில் சலித்து எடுத்து வைக்கவும்.
மிக்சியில் சர்க்கரை மற்றும் ஏலக்காயை நன்றாக மைய அரைத்து தூளாக்கவும்.
அரைத்த மாவையும் சர்க்கரையையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கலக்கவும்.
முந்திரியை சிறு துண்டுகளாக்கவும்.
வாணலியில் நெய் விட்டு வறுத்தெடுத்து மாவு சர்க்கரை கலவையுடன் சேர்க்கவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கவும்.
சூடானவுடன் மாவு சர்க்கரை கலவையை சிறிது சூடேறும் வரை கலக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு கை பொறுக்கும் சூடு வந்த பிறகு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
உருண்டை பிடிக்க முடியாமல் உடைந்து போகுமானால் மேலும் சிறிது நெய்யை சூடாக்கி ஊற்றி கலந்து உருண்டை பிடிக்கவும்.
சுவையான சத்துக்கள் நிரம்பிய பயத்தம் பருப்பு உருண்டை தயார். சுவைத்து மகிழவும்.
மூடியுடன் கூடிய டப்பாவில் எடுத்து வைத்து பாதுகாக்கவும்.
குறிப்பு :
மற்றும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

- 1 அல்லது 2 கிலோ பயத்தம் பருப்பை சிவக்க வறுத்து மாவு அரைக்கும் இயந்திரத்தில் அரைத்து வைத்துக்கொள்ளலாம். தேவை ஏற்படும்போது சிறிது எடுத்து இவ்வாறு உருண்டைகள் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம்.
- சர்க்கரையின் அளவை தேவைக்கேற்ப கூட்டி குறைத்துக் கொள்ளவும்.
மற்றும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
|
|
|
|
|
No comments:
Post a Comment