#ஆப்பம்சுடும்முறை : #ஆப்பம் பொதுவாக ஆழம் அதிகமில்லாத வாணலியை போன்ற பாத்திரத்தில் ஊற்றி மூடி போட்டு சுட்டு எடுக்கப்படும். ஆப்பம் தயாரிக்க பயன் படுத்தப்படும் பாத்திரத்திற்கு ஆப்ப சட்டி அல்லது ஆப்ப கடாய் என்று கூறப்படுகிறது. மாவை எண்ணெய் தடவப்பட்ட சூடான ஆப்ப சட்டியின் நடுவே ஊற்றி சட்டியை சுழற்றி மாவை சட்டி முழுவதும் பரவுமாறு செய்யப்படும். பிறகு மூடி வேக வைத்து எடுக்கப்படும். இவ்வாறு செய்யப்படும் ஆப்பம் ஆப்ப சட்டி போன்ற வடிவத்தை கொண்டிருக்கும். ஆப்பம் நடுவில் தடிமனாகவும் ஓரங்களில் மெல்லியதாகவும் இருக்கும்.
ஆனால் எனக்கு இந்த மாதிரி ஆப்பம் செய்வது வேலை அதிகம் போல் தோன்றும். ஒவ்வொரு முறையும் ஊற்றி சட்டியை சுழற்றி... ம்ம்.... என்னிடம் ஆப்ப சட்டி இருந்தாலும் அதை உபயோகிப்பதே இல்லை. தோசை கல்லிலேயே ஊற்றி எடுத்து விடுவேன்.
எப்படி ஆப்பத்தை ஊற்றி சுட்டு எடுப்பது என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
ஆப்ப மாவு
தோசை கல்
எண்ணெய்
குழி கரண்டி
தோசை திருப்பி
தோசை கல்லை மூட மூடி
செய்முறை :
ஒரு டிஷ்யு பேப்பரை அல்லது மெல்லிய சுத்தமான துணியை எண்ணெயில் நனைத்து கல்லில் தடவுவதற்கு ஏதுவாக மடித்துக் கொள்ளவும்.
டிஷ்யு பேப்பரை அல்லது துணியை இலேசாக எண்ணெயில் நனைத்து
அல்லது
கல்லின் மேல் ஒன்றிரண்டு சொட்டு எண்ணெய் விட்டு டிஷ்யு பேப்பரால் அல்லது துணியால் தடவி விடவும்.
இரண்டு கரண்டி மாவை கல்லின் நடுவே ஊற்றி பரப்பவும்.
மூடியால் மூடி ஒன்று முதல் இரண்டு நிமிடம் வேக விடவும்.
இலேசாக ஓரத்திலும் நடுவிலும் சிவக்கும் வரை சுட வேண்டும்.
வெந்ததும் மூடியை எடுத்து விட்டு தோசை திருப்பியால் ஆப்பத்தை கல்லை விட்டு எடுத்து பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
ஆப்பத்தை திருப்பிப் போட்டு வேகவிட வேண்டியது இல்லை.
மறுபடியும் பேப்பரால் எண்ணெய் தடவி அடுத்த ஆப்பத்தை ஊற்றவும்.
தேங்காய் பால் தயாரித்து வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்த பாலுடன் அல்லது பூண்டு சிகப்பு சட்னியுடன் சுவைக்கவும்.
மேலும் சில சமையல் குறிப்புகள்
ஆப்பத்துடன் தொட்டுக்கொண்டு சுவைக்க
தொட்டுக்க

|
|
|
|
ஆப்பத்துடன் தொட்டுக்கொண்டு சுவைக்க
தொட்டுக்க
No comments:
Post a Comment