Search This Blog

Showing posts with label flax seed. Show all posts
Showing posts with label flax seed. Show all posts

Friday, April 7, 2017

Milagu-Podi-with-Flax-Seed

#மிளகுப்பொடிஆளிவிதையுடன் : நாம் நமது மூதாதையர் காலந்தொட்டு மிளகை சமையலில் உபயோகப்படுத்தி வருகிறோம். உணவிற்கு காரம் கொடுப்பதற்காக மட்டுமன்றி அதன் மருத்துவ குணங்களுக்காகவும் #மிளகு பயன்படுத்தப்படுகிறது. சளி, இருமல் மற்றும் செரிமானம் சம்பத்தப்பட்ட நோய்களுக்கு அருமருந்தாக மிளகு செயல் படுகிறது.
#ஆளிவிதை உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை தரக்கூடிய ஒரு அருமையான விதையாகும்.
இவ்விரண்டுடன் சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து சத்தான ஒரு பொடி செய்வதெப்படி என காண்போம்.

மிளகுப்பொடி ஆளிவிதையுடன்

தேவையானவை :
1/4 கப்மிளகு
1/4 கப்சீரகம்
1/4 கப்ஆளிவிதை
1 Tspஉப்பு
1 கைப்பிடிகாய்ந்த கருவேப்பிலை இலைகள்

செய்முறை :
ஒரு வாணலியை அடுப்பின் மீது வைத்து குறைந்த தீயில் சூடாக்கவும்.
ஆளிவிதையை போட்டு கைவிடாமல் கிளறவும்.
நல்ல மணத்துடன் படபடவென பொரிந்து வரும் பொது அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் கொட்டவும்.
அதே வாணலியில் மிளகு சேர்த்து சிறிது சூடு வரும் வரை வறுத்து தட்டில் எடுத்து வைக்கவும்.
அதே போல சீரகத்தையும் சூடு ஏறும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
அடுப்பை அணைத்து விடவும்.
நிழலில் காயவைத்து எடுத்து வைத்துள்ள கருவேப்பிலையை சூடான வாணலியில் போட்டு சூடாக்கவும்.
அதே தட்டில் எடுத்து வைக்கவும்.
நன்கு ஆற விடவும்.


மிளகுப்பொடி ஆளிவிதையுடன்

ஆறியதும் மிக்சியில் உதவியுடன் நன்கு பொடியாக அரைத்து எடுக்கவும்.
ஒரு சுத்தமான பாட்டிலில் எடுத்து வைத்து பத்திரப்படுத்தவும்.

மிளகுப்பொடி ஆளிவிதையுடன்

சூடான சாதத்தில் ஒரு தேக்கரண்டி தயாரித்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பிசைந்து உண்ணலாம். ஆளிவிதையின் மணமும் மிளகின் காரமும் நல்ல சுவையை கொடுக்கும்.
சூப் மேல் தூவி உண்ணலாம்.
காய்கறி கொண்டு தயாரிக்கப்படும் சாலட் மற்றும் பழங்களின் சாலட் ஆகியவற்றின் மேலும் தூவி உண்ணலாம்.
ஆம்லெட் மீது தூவி சாப்பிடலாம்.

மிளகுப்பொடி ஆளிவிதையுடன்









மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள் 
சாம்பார் பொடி
சாம்பார் 
பொடி
கரம் மசாலா பொடி
கரம் மசாலா
பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
கொத்தமல்லி முரு ங்கைக்கீரை பொடி
இட்லி மிளகாய்ப் பொடி
 இட்லி மிளகாய்ப் 
பொடி
மதராஸ் ரசப் பொடி
மதராஸ்
ரசப் 
பொடி






Tuesday, February 18, 2014

Flax Urundai

#ஆளிவிதைஉருண்டை : #ஆளிவிதை ஆங்கிலத்தில் Flax seed என அழைக்கப்படுகிறது.
இந்த ஆளி விதை உடலுக்கு எவ்விதத்தில் பயனளிக்கிறது என்பதை அறிய   click here.

ஆளி விதை


ஆளி விதை கொண்டு செய்த இட்லி மிளகாய் பொடி மற்றும் சாதத்தில் போட்டு சாப்பிட பொடித்த ஆளி விதை பொடி இரண்டும் மிகுந்த மணத்துடன் மிக்க  சுவையாகவும் இருந்தது. அதனால் ஆளி விதை கொண்டு உருண்டை செய்து பார்க்கலாம் என களத்தில் இறங்கினேன். எப்படி என பார்ப்போம். சுமார் முக்கால் அங்குல அளவுடைய 20 உருண்டைகள் தயாரிக்க முடிந்தது.

ஆளி விதை உருண்டை

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                          ஆளி விதை
1/2 கப்                                         பொட்டு கடலை [ வறுகடலை ]
2 tsp                                              எள்
2                                                    ஏலக்காய்
4                                                    கிராம்பு
1 சிறிய துண்டு                       ஜாதிக்காய் மற்றும் ஜாதி பத்திரி
1/2 கப்                                         வெல்லம்
4                                                     பாதாம் பருப்பு, செதுக்கி வைக்கவும்
8                                                   முந்திரி பருப்பு
4                                                   பதப்படுத்திய அத்தி பழம்

செய்முறை :
ஆளி விதையை  வெறும் வாணலியில் படபடவென பொரியும்  வரை வறுத்து எடுக்கவும்.
எள்ளையும் அதே போல படபடவென பொரியும் வரை வறுக்கவும்.
பொட்டுகடலையையும் நன்கு வறுத்தெடுக்கவும்.
முந்திரியை சிவக்க வெறும் வாணலியில் வறுத்து சிறு சிறு துண்டுகளாக உடைத்து வைக்கவும்.


அத்தியையும் சிறு துண்டுகளாக்கவும்.
மிக்சியில் ஆளி  விதை, எள், ஏலக்காய், ஜாதிக்காய் மற்றும் ஜாதி பத்திரியை பொடித்து எடுக்கவும்.
பிறகு பொட்டுக்கடலை பொடித்து எடுக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் பொடித்தது, துண்டுகளாக்கிய பருப்பு  மற்றும் அத்தியை எடுத்துக் கொள்ளவும்.


வெல்லத்தை கல்லினால் நசுக்கி சேர்க்கவும்.
கைகளினால் நன்கு கலந்து விடவும்.
இப்போது தேன் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.

ஒரு காற்று புகா பாத்திரத்தில் அடுக்கி வைக்கவும்.
ஒரு வார காலத்திற்கு சேமித்து வைத்து சுவைக்கலாம்.

ஆளி விதை உருண்டை

மிக மிக அருமையான மணமிக்க ஆளி விதை உருண்டை தயார்.








மற்றும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
தினை மாவு உருண்டை
தினை மாவு உருண்டை
குலாப் ஜாமூன்
குலாப் 
ஜாமூன்
ஸ்ரீ கண்ட்
ஸ்ரீ கண்ட்
இன்ஸ்டன்ட் தூத் பேடா
இன்ஸ்டன்ட் தூத் பேடா
பயத்தம் பருப்பு உருண்டை
பயத்தம் பருப்பு உருண்டை