#மதராஸ்ரசப்பொடி : #ரசம் என்பது மல்லி, மிளகு, சீரகம், மிளகாய் ஆகியவற்றை பொடியாக்கி பருப்பு தண்ணீர் மற்றும் புளி கலந்து கொதிக்க வைத்து செய்யப்படுவதாகும். ரசம் செய்யும் போது அதனுடன் சேர்க்க வேண்டிய பொருட்களை அவ்வப்போது அரைத்து சேர்த்தால் மிக மிக வாசனையாக இருக்கும். ஆனால் பருப்பு தண்ணீர் அவசியம் தேவை.
அதனால் துவரம் பருப்பை மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் செய்ய முடியும். பருப்பை வேக வைத்து பருப்பு தண்ணீர் தயாரிக்க தேவையில்லை.
ஒரு மாதத்திற்கு தேவையான ரசப் பொடியை தயாரித்து வைத்து கொள்ளலாம். எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
10 : சிவப்பு மிளகாய்
1 கப் : துவரம் பருப்பு
1/2 கப் : மல்லி விதை ( தனியா )
1/4 கப் : மிளகு
1/4 கப் : சீரகம்
செய்முறை :
வெறும் வாணலியில் முதலில் மிளகாயை வறுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒவ்வொன்றாக தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
கை விடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
ஒரு தட்டில் எடுத்து வைத்து நன்கு ஆற விடவும்.
ஆறியபின் மிக்ஸ்யில் பொடித்து எடுக்கவும்.
ஒரு உலர்ந்த சுத்தமான பாட்டிலில் எடுத்து பத்திரபடுத்தவும்.
காய வைத்த கருவேப்பிலை பொடி இருந்தால் 2 தேக்கரண்டி சேர்த்து கலக்கி வைக்கவும்.
மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள்

|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment