Search This Blog

Showing posts with label ridge gourd chutney. Show all posts
Showing posts with label ridge gourd chutney. Show all posts

Tuesday, June 30, 2015

Peerkangkai-Thuvaiyal

#பீர்கங்காய்துவையல் : #பீர்கங்காய் ஒருவிதமான இனிப்பு சுவையுடையது. தோல் வரிகளுடன் சிறிது கடினமாக இருக்கும். ஆனால் உள்ளே சதை பற்று மிகவும் மென்மையானது. மேலும் எளிதில் வேகக் கூடியது. பொதுவாக சமைக்கும் போது தோலை நீக்கிய பின்னர் உள்ளே உள்ள சதை பற்றை அரிந்து சாம்பார் அல்லது கூட்டு செய்ய சேர்க்கப்படுகிறது. இந்த தோலையும் எண்ணெய் விட்டு வதக்கினால் வெந்து விடும். பிறகு சுவைக்கு தேவையான பொருட்களையும் வறுத்து தேங்காயுடன் சேர்த்து அருமையான சட்னி தயாரிக்கலாம்.
தோல் மட்டுமின்றி முழு பீர்கங்காய் கொண்டு சட்னி செய்தாலும் அருமையாக இருக்கும்.
இனி செய்முறையை பார்ப்போம்.

பீர்கங்காய் துவையல்

தேவையான பொருட்கள் :
1/2 கப்பீர்கங்காய் தோல்
1/2 கப்பீர்கங்காய் துண்டுகள்
3 - 4 Tspதேங்காய் துருவல்
1 1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/4 Tspகொத்தமல்லி விதை
2 or 3சிகப்பு மிளகாய்
சிறு துண்டுபெருங்காயம்
1 or 2 Tspஇஞ்சி துண்டுகள்
கோலிகுண்டு  அளவு புளி
1/2 Tspஉப்பு
2 Tspஎண்ணெய்

செய்முறை :
புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு சுடு தண்ணீரில் ஊற வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானபின் மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
சிவந்த பின் எடுத்து தனியே வைக்கவும்.
பெருங்காயத்தை வறுத்தெடுக்கவும்.
மீண்டும் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு இஞ்சியை வாசனை வரும் வரை வதக்கி எடுக்கவும்.
இப்போது மறுபடியும் எண்ணெய் விட்டு பீர்கங்காய் தோல் மற்றும் பீர்கங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
மூடி போட்டு தோல் வேகும் வரை சிறிய தீயில் வைத்திருக்கவும்.
அவ்வப்போது மூடியை திறந்து கரண்டியால் பிரட்டி விட்ட பின் மூடி வேக விடவும்.
வறுத்த பொருட்கள் அனைத்தும் நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு மற்ற பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
உப்பு சரி பார்த்த பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
பொங்கல், உப்புமா போன்ற டிபன் வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.





மேலும் சில சட்னி வகைகள் :

இஞ்சி துவையல்
இஞ்சி துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
கரிசலாங்கண்ணி
கொத்தமல்லி சட்னி 1
கொத்தமல்லி
கொத்தமல்லி விதை சட்னி
கொத்தமல்லி விதை
கொத்தமல்லி புதினா துவையல்
கொத்தமல்லி புதினா