#தினைமாவுஉருண்டை : தேனும் #தினை மாவும் முருகப்பெருமானுக்கு படைக்கும் உணவாம். தினை மாவும் வெல்லமும் கலந்த பொடியை பிரசாதமாக தருவார்கள். எப்போதுமே தினை மாவை வைத்து தோசை செய்கிறோமே , வேறேதாவது செய்யலாம் என யோசித்த போது இந்த பொடி ஞாபகம் வந்தது. மாவு மற்றும் வெல்லத்துடன் உலர்ந்த திராட்சை, அத்தி, முந்திரி சேர்த்து தயாரித்தேன். மிகவும் சுவையாக வந்தது. இப்போது எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
தினை மாவு : 1 Cup
வெல்லம் : 1/2 Cup
தேன் : 1 1/2 Tbsp
உலர்ந்த திராட்சை : 5
முந்திரி : 5
உலர்ந்த அத்தி ; 3
ஏலக்காய் போடி : 1/2 Tsp
நெய் : 3 Tsp
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து 1 Tsp நெய் விட்டு மிதமான தீயில் முந்திரி துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
அதே வாணலியில் மேலும் 2 Tsp நெய் விட்டு திணை மாவை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
அடுப்பை அணைத்து விடவும்.
உலர்ந்த திராட்சை மற்றும் அத்தியை சிறு சிறு துண்டுகளாக்கி மாவுடன் கலக்கவும்.
வறுத்த முந்திரியையும் சேர்க்கவும்.
வெல்லத்தை பொடித்து சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது ஏலக்காய் பொடியை சேர்த்து தேனை ஊற்றி கையால் அழுத்தி பிசையவும்.
எல்லா பொருட்களும் நன்றாக கலந்த பின் கையால் அழுத்தி உருண்டையாக பிடிக்கவும்.
காற்று புகாத டப்பாவில் வைத்து பாதுகாக்கலாம்.
ஒரு நல்ல சத்து மிகுந்த இனிப்பு உருண்டை.
மற்றும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

|
|
|
|
|
|
|
தினை இனிப்பு உருண்டை யில் எபப்போது எப்படி வெல்லம் சேர்ப்பது என்று விளக்கமாக கூறவில்லை
ReplyDeletemathivanan krishnamoorthy,
Deleteஎனது வலை தளத்திற்கு வந்தமைக்கு நன்றி!! தவறை திருத்தி விட்டேன். வெல்லத்தை எப்படி எப்போது சேர்ப்பது என்பதை தற்போது கொடுத்துள்ளேன். பார்த்து பயனடையவும்.