#வல்லாரைதேங்காய்சட்னி : #வல்லாரை யை நீர் நிலைகளின் அருகே அதிக அளவில் தானாக படர்ந்திருப்பதை காணலாம். வல்லாரை தரையில் பரவும் கொடியாகும். கொத்து கொத்தாக ஒன்றோடு ஒன்று இணைந்து பரவி இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு இலையும் நீண்ட தண்டை உடையதாக இருக்கும்.
இதனை ஆங்கிலத்தில் பொதுவாக #centella அல்லது gotu kola என அழைக்கப்படுகிறது. வல்லாரையின் அறிவியல் பெயர் Centella asiatica.
வல்லாரையை Asiatic pennywort அல்லது Indian pennywort என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது உண்டு.
வல்லாரைக்கு நினைவாற்றலை அதிகப்படுத்தும் தன்மை உள்ளதாக இயற்கை மருத்துவத்தில் கூறப்படுகிறது. ஆனால் அத்தகைய கூற்று எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. இருப்பினும் நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதில் தவறேதும் இல்லையே!!
இங்கு வல்லாரை மற்றும் தேங்காய் சேர்த்து சட்னி எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

| தேவையான பொருட்கள் : | |
|---|---|
| 20 | வல்லாரை இலைகள் |
| 1/3 கப் | தேங்காய் துருவல் |
| 2 Tsp | உளுத்தம் பருப்பு தோலுடன் |
| 2 or 3 | சிகப்பு மிளகாய் |
| 1 Tsp | எலுமிச்சை சாறு [ adjust ] |
| 1/2 Tsp | நல்லெண்ணெய் [ Til/sesame oil ] |
| 3/4 Tsp | உப்பு [ adjust ] |
| தாளிக்க : | |
| 1/2 Tsp | கடுகு |
| 1 Tsp | உளுத்தம் பருப்பு |
| 1 Tsp | நல்லெண்ணெய் [ Til/sesame oil ] |
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
முதலில் மிளகாயை வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
பின்னர் உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு அதே வாணலியில் கழுவிய வல்லாரை இலைகளை அரை நிமிடம் வதக்கி எடுக்கவும்.
அனைத்தையும் ஆற விடவும்.
பின்னர் வதக்கிய பொருட்களுடன் மற்ற தேவையான பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
உப்பு மற்றும் எலுமிச்சை சாறின் சுவையை சரி பார்க்கவும்.
உப்பு மற்றும் எலுமிச்சை சாறின் சுவையை சரி பார்க்கவும்.
ஒரு சிறு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அடுப்பில் மறுபடியும் வாணலியை சூடாக்கி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை தாளித்து கொட்டவும்.
சுவையான வல்லாரை தேங்காய் சட்னி தயார்!!
தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
இட்லி, பொங்கல், உப்புமா, மற்றும் பணியாரம் ஆகியவற்றுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
சூடான சாதத்தில் ஒரு தேக்கரண்டி சட்னி சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பாருடன் சாப்பிட்டால் சுவையோ சுவை!!..
No comments:
Post a Comment