#பச்சைமிளகாய்சட்னி : பச்சை மிளகாயுடன் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை கொத்தமல்லி தழை சேர்த்து அரைக்கப்படும் மிகவும் காரமான சட்னியாகும். அரைத்தவுடன் சாப்பிடும் போது ருசியாகவும் சுள்ளென்ற காரத்துடனும் இருக்கும். இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற சட்னியாகும். சிறிது புளிப்பு சுவை இருந்தால் நன்றாக இருக்கும் என கருதுபவர்கள் எலுமிச்சை சாறை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
இனி தேவையான பொருட்களையும் அரைக்கும் விதத்தையும் காண்போம்.
இனி தேவையான பொருட்களையும் அரைக்கும் விதத்தையும் காண்போம்.
Ingredients : | |
---|---|
10 - 12 | பச்சை மிளகாய் |
15 - 20 | சின்ன வெங்காயம் |
1/4 cup | கொத்தமல்லி தழை நறுக்கியது [ adjust ] |
1/2 Tsp | உப்பு [ adjust ] |
செய்முறை :
வெங்காயத்தின் தோலை உறித்து தனியே வைக்கவும்.
பச்சை மிளகாயை கழுவி காம்பை நீக்கவும்.
கொத்தமல்லி தழையை கழுவி பின்னர் நறுக்கி வைக்கவும்.
எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயின் நீர் சத்து அரைக்க போதுமானதாக இருக்கும்.
தேவையெனில் 1 அல்லது 2 தேக்கரண்டி நீர் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கார சாரமான பச்சைமிளகாய் சட்னி தயார்.
தோசையுடனும் அருமையாக இருக்கும்.
ஓரிரு நாட்களுக்கு குளிர் சாதன பெட்டியில் பத்திர படுத்தலாம்.
ஆனால் செய்தவுடன் சாப்பிடும் சுவை இருக்காது. காரமும் குறைந்து விடும்.
No comments:
Post a Comment