#கேழ்வரகுகூழ் : #கேழ்வரகு கொண்டு தோசை மற்றும் பணியாரம் செய்யும் முறையை முன்பு பார்த்திருக்கிறோம். இங்கு மிக எளிமையானதும் சுவையானதும் ஆகிய கூழை எவ்வாறு காய்ச்சுவது என்று காண்போம்.
சிறிது கொத்தமல்லி தழை மேலே தூவ
செய்முறை :
பின்னர் மிதமான தீயில் சூடாக்கவும்.
தினமும் முதல் நாள் இரேவே தயாரித்து வைத்து மறுநாள் காலை காபி / டீ கு பதில் அருந்தி வந்தால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
1 Tbsp குவித்து | கேழ்வரகு மாவு |
1 கப் | தண்ணீர் |
1/2 Tsp | உப்பு |
1/2 Tsp | கடுகு |
6 - 8 | கறுவேப்பிலை |
2 - 3 | சின்ன வெங்காயம் |
2 pinch | பெருங்காய தூள் |
1 Tsp | எண்ணெய் |
செய்முறை :
பின்னர் மிதமான தீயில் சூடாக்கவும்.
ஒரு கரண்டியால் கை விடாமல் கலக்கிகொண்டே இருக்கவும்.
சில நிமிடங்கள் கழித்து மாவு வெந்து பளபளப்பாக மாற ஆரம்பிக்கும்.
நிறமும் ஆழ்ந்த நிறத்திற்கு மாறும்.
கஞ்சி பதத்தை அடைந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு சேர்த்து வெடிக்கவிட்ட பின்னர் பெருங்காய தூள் மற்றும் கறுவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை தயாரித்து வைத்துள்ள கூழில் கொட்டவும்.
நன்கு ஆற வைக்கவும்.
பரிமாறுவதற்கு முன் தயிர், சில கொத்தமல்லி தழைகள் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பருகவும்.
சுவையான கேழ்வரகு கூழ் தயார்!!!
தினமும் முதல் நாள் இரேவே தயாரித்து வைத்து மறுநாள் காலை காபி / டீ கு பதில் அருந்தி வந்தால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.
அருமை & எளிமை!
ReplyDelete