Search This Blog

Friday, May 2, 2014

Honey Nellikkai - Honey Gooseberry

#நெல்லிக்காய்தேனில் : #நெல்லிக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இக்கனியின் சுவை  துவர்ப்பும் இனிப்பும் சிறிது புளிப்பும் கொண்டதாக இருக்கிறது. நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி அறிய

நெல்லிக்காய்.

சென்ற மாதம் என் வீட்டிற்கு சென்ற போது நெல்லிக்காய் வாங்கிக் கொண்டு சென்றேன். அங்கு என் தாயார் நெல்லிக்கனிகளை தேனில் ஊற வைத்தார்கள்.

நெல்லிக்காயை எப்படி தேனில் பதப் படுத்தினார்கள் என காணலாம்.

தேவையான பொருட்கள் :
1/2 kg                               நெல்லிக்காய் [ Amla ]
1/2 lt                                  தேன் [ honey ]
1 Tsp                                 நெய் [ ghee ]

செய்முறை :
நெல்லிக்காயை நன்கு தண்ணீரில் கழுவி வைக்கவும்.
காரட் துருவியில் செதுக்கி துருவலாக்கிக் கொள்ளவும்.


நல்ல சுத்தமான இரண்டு அல்லது மூன்று காய்ந்த தட்டில் எடுத்து பரப்பி வைக்கவும்.
வெய்யிலில் ஒரு நாள் முழுவதும் காய வைக்கவும்.


மாலையில் அடுப்பில் ஒரு அகன்ற வாணலியை வைத்து நெய்யை ஊற்றி காய்ந்த நெல்லிக்காய் துருவலை குறைந்த தீயில் வைத்து வதக்கவும்.
பொன்னிறமாகும் வரை வதக்கவும்.


மறுபடியும் தட்டில் கொட்டி ஆற விடவும்.

சூடு நன்றாக ஆறியதும் ஒரு சுத்தமான பாட்டிலில் நிரப்பவும்.


ஒன்று அல்லது இரண்டு பாட்டில்களில் நிரப்பலாம்.
பாட்டில் சுத்தமாகவும் ஈரபசை இல்லாமலும் இருப்பது மிக மிக அவசியமாகும்.

பிறகு நெல்லிக்காய் துருவல் மூழ்கும் வரை தேன் விடவும்.
மூடி அதிக உஷ்ணம் இல்லாத இடத்தில வைத்து பத்திர படுத்தவும்.


தினமும் ஒரு முறை இலேசாக குலுக்கி விடவும்.

ஒரு வாரம் கழித்து சாப்பிட ஆரம்பிக்கலாம்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் அதனுடைய அனைத்து சத்துக்களும் நம் உடலில் சேரும்.
நாம் நீண்ட நாட்களுக்கு இளமையாக இருக்கலாம்.








சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய்
மிட்டாய்
நெல்லிக்காய் புதினா துவையல்
நெல்லிக்காய் புதினா துவையல்
நெல்லிக்காய் ஜாம்
நெல்லிக்காய் 
ஜாம்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்


No comments:

Post a Comment