Search This Blog

Monday, July 13, 2015

Nellikkai-Peerkangkai-Chutney

#நெல்லிக்காய்பீர்க்கங்காய்துவையல் : சில தினங்களுக்கு முன் பீர்கங்காய் சட்னி செய்வது எப்படி என பார்த்தோம். சட்னியில் புளிப்பு சுவைக்காக புளி அல்லது எலுமிச்சை சாறை உபயோகப்படுத்துவது வழக்கம். நான் அவ்வாறன்றி இம்முறை புளிக்கு பதிலாக நெல்லிக்காயை உபயோகப்படுத்தினேன். சுவையாக இருந்தது. நெல்லிக்காய் வைட்டமின் C அதிக அளவில் கொண்ட கனியாகும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது. இத்தகைய மருத்துவ குணமுள்ள நெல்லிக்காயை பயன் படுத்துவதால் நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நமக்கு கிடைக்கிறது.

Nellikkai Peerkangkai Chutney


தேவையான பொருட்கள் :
1/2 கப்பீர்கங்காய் தோல்
1/2 கப்பீர்கங்காய் துண்டுகள்
3 - 4 Tspதேங்காய் துருவல்
1 1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/4 Tspகொத்தமல்லி விதை
2 or 3சிகப்பு மிளகாய்
small pieceபெருங்காயம்
1 or 2 Tspஇஞ்சி மெல்லிய துண்டுகள்
2 or 3நெல்லிக்காய்
1/2 Tspஉப்பு
2 Tspஎண்ணெய்

செய்முறை :
நெல்லிக்காயை கழுவி சுத்தம் செய்த பின் 8 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
கொட்டையை நீக்கி துண்டுகளாக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானபின் மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
சிவந்த பின் எடுத்து தனியே வைக்கவும்.
பெருங்காயத்தை வறுத்தெடுக்கவும்.
மீண்டும் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு இஞ்சியை வாசனை வரும் வரை வதக்கி எடுக்கவும்.
இப்போது நெல்லிக்காய் துண்டுகளை 2 நிமிடங்கள் வதக்கி எடுத்து வைக்கவும்.
இப்போது மறுபடியும் எண்ணெய் விட்டு பீர்கங்காய் தோல் மற்றும் பீர்கங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
மூடி போட்டு தோல் வேகும் வரை சிறிய தீயில் வைத்திருக்கவும்.
அவ்வப்போது மூடியை திறந்து கரண்டியால் பிரட்டி விட்ட பின் மூடி வேக விடவும்.
வறுத்த பொருட்கள் அனைத்தும் நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு மற்ற பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
உப்பு சரி பார்த்த பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
பொங்கல், உப்புமா போன்ற டிபன் வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.






மேலும் சில சட்னி வகைகள் :

இஞ்சி துவையல்
இஞ்சி துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
கரிசலாங்கண்ணி
கொத்தமல்லி சட்னி 1
கொத்தமல்லி
கொத்தமல்லி விதை சட்னி
கொத்தமல்லி விதை
கொத்தமல்லி புதினா துவையல்
கொத்தமல்லி புதினா




No comments:

Post a Comment