Search This Blog

Monday, April 11, 2016

Kothamalli-Pudhina-Sauce

#கொத்தமல்லிபுதினாசாஸ் : நான் ராய்ப்பூரில் வசித்து வந்த போது எனது தோட்டத்தில் புதினா வளர்த்து வந்தேன். அதனால் எல்லாவிதமான உணவு வகைகளிலும் புதினா சேர்ப்பது அல்லது அலங்கரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஆனால் இப்போது மார்கெட்டிலிருந்துதான் வாங்கி வருகிறேன். புதினா இலைகளை சுத்தம் செய்து குளிர் சாதனப்பெட்டியில் வைத்தாலும் அதன் தனித்தன்மையான சுவையும் மணமும் நாட்கள் செல்ல செல்ல குறைந்து விடுகிறது. அதனை ஓரளவு தடுக்க கொத்தமல்லியுடன் சேர்த்து பச்சையாக இருக்கும் போதே அரைத்து ஒரு சுத்தமான பாட்டிலில் அடைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து ரசம் முதல் அனைத்து உணவுடனும் சேர்க்க ஆரம்பித்து விட்டேன். இந்த சாஸ் மிகவும் உபயோகமாக இருக்கிறது. 
கொத்தமல்லி தழை மட்டுமின்றி அதன் தண்டையும் சேர்த்து அரைக்கலாம்.
இனி எவ்வாறு அரைத்து எடுத்து வைப்பது என காணலாம்.



தேவையான பொருட்கள்  :
1 கப்புதினா [ Mint ] இலைகள்
1 கப்கொத்தமல்லி தழை
10 - 12பச்சை மிளகாய் [ adjust ]
சிறு துண்டுஇஞ்சி [ optional ]
3/4 Tspஉப்பு [ adjust ]
1 - 1 1/2 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]
1/4 கப்வினிகர்

செய்முறை :
கொத்தமல்லி மற்றும் புதினா இரண்டையும் தனித்தனியாக நன்கு கழுவி தண்ணீரை வடிய விடவும்.
மிக்ஸியில் கொத்தமல்லி, உப்பு , பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை  போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பின்னர் புதினா, எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
நன்கு அரைத்த கொத்தமல்லி புதினா சாஸை ஒரு சுத்தமான பாட்டிலில் எடுத்து வைத்து குளிர் சாதனபெட்டியில் பத்திரப்படுத்தவும்.

காரமும் மனதை மயக்கும் மணமும் நிறைந்த இந்த சாஸ் இட்லி,  & தோசை, அரிசி சுண்டல், & உப்புமா, & பொங்கல் போன்ற அனைத்து காலை உணவு வகைகளுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

எலுமிச்சை ரசம் செய்யும் போது இறக்கிய பிறகு சிறிது இந்த சாஸை சேர்த்தால் ருசியும் மணமும் தூக்கலாக இருக்கும்.

பிரியாணி செய்யும் போது புதினாவுடன் இந்த சாஸையும் சேர்த்து செய்தால் இன்னும் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

பிரட் சான்விச் செய்யும் போது பிரட்டின் மீது தடவ பயன் படுத்தலாம்.

தயாரித்து சுவைத்துப் பாருங்கள்!! மிக மிக அருமையான சாஸ் இது!!!






மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்த்து சுவைக்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
வல்லாரை சட்னி பொடுதலை துவையல் கரிசலாங்கண்ணி துவையல்
இஞ்சி துவையல் பொங்கல் துவையல்




இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

No comments:

Post a Comment