Search This Blog

Friday, April 4, 2014

Poduthalai Thuvaiyal

#பொடுதலைதுவையல் : #பொடுதலை சாதாரணமாக எல்லா இடங்களிலும் புற்களின் நடுவே படர்ந்து காணப்படும். இதன் பூ கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும்.
இது ஒரு மூலிகையாகும். தமிழ் மருத்துவ முறையில் இந்த மூலிகை பயன் படுத்தப் படுகிறது. இது முக்கியமாக பொடுகுத்தொல்லைக்கு மருந்தாக பயன் படுத்தப் படுகிறது. இதனை பற்றி மேலும் அறிய சொடுக்கவும் : பொடுதலை மருத்துவ பயன்கள் .
பொடுதலையின் அறிவியல் பெயர் : Phyla nodiflora [ Lippia nodiflora ] 
இதனை ஆங்கிலத்தில் Frog Fruit அல்லது Purple Lippia என்று அழைக்கப்படுகிறது.

பொடுதலை [ Frog Fruit அல்லது Purple Lippia ]

நான் சென்ற மாதம் எனது வீட்டிற்கு சென்ற போது என் தாயார் இந்த இலையை வாங்கி வைத்திருந்தார். வயிற்று உபாதைக்கும் தோல் சம்பந்தமான நோய்களுக்கும் நல்லது என்று கூறினார்கள். அதனால் சில செடிகளை என் வீட்டில் நட்டு வைப்பதற்காக எடுத்து வந்தேன். நட்டும் வைத்தேன். அப்போதுதான் என்னுடைய வீட்டை சுற்றி ஏற்கனவே இந்த செடிகள் இருப்பதை கண்டேன். ஒரு இலையை பறித்து சுவைத்து பார்த்தேன். சிறிது கசப்பாக இருந்தது.

பொடுதலை [ Frog Fruit அல்லது Purple Lippia ]
பொடுதலை [ Frog Fruit அல்லது Purple Lippia ]








பொடுதலை [ Frog Fruit அல்லது Purple Lippia ]


அம்மாவிடம் இதனை எவ்வாறு சமையலில் பயன் படுத்தலாம் என கேட்டேன். துவையல் அரைத்து சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும் என்றார்கள். அவர்கள் கூறியபடி செய்து சுவைத்தேன்.
இப்போது துவையல் செய்முறையை பார்ப்போம்.

பொடுதலை துவையல்

தேவையான பொருட்கள் :
1/4 கப்                                        பொடுதலை இலைகள், கழுவி .வைக்கவும்.
1 Tsp                                           உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                        கொத்தமல்லி விதை
10                                                மிளகு
3                                                  மிளகாய் வற்றல்
சிறு துண்டு                            பெருங்காயம்
சிறு நெல்லி அளவு            புளி, சுடு நீரில் ஊற வைக்கவும்.
3/4 Tsp                                        உப்பு
1 Tsp                                           வெல்லம்
4  பற்கள்                                 பூண்டு
1 Tsp                                           நல்லெண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை ஏற்றி 1/2 Tsp  எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் மிளகாயை வறுத்தெடுக்கவும்.
பின்னர் உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து மிளகாயோடு வைக்கவும்.
இப்போது மிளகையும் மல்லியையும் இலேசாக வறுத்துக்கொள்ளவும்.
எடுத்து மற்றவையோடு வைக்கவும்.


மேலும் 1/2 Tsp  எண்ணெய் விட்டு பொடுதலை இலைகளை நன்கு வதக்கவும்.
வறுத்த பொருட்களை ஆற விடவும்.


மிக்சி அரைக்கும் பாத்திரத்தில் வறுத்த பொருட்களுடன் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை சேர்த்து முதலில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பிறகு திறந்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்தெடுக்கவும்.
உப்பு சரி பார்க்கவும்.
சுவையான காரம், புளிப்பு, கசப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் கூடிய துவையல் தயார்.                                           

பொடுதலை துவையல்

ஒரு தட்டில் சூடான சாதம் எடுத்துக் கொண்டு அதன் மேல் 1 Tsp நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் தனி சுவையுடன் இருக்கும்.
பொங்கல், உப்புமா போன்ற பலகாரங்களுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.





மேலும் சில சட்னி வகைகள் முயற்சி செய்து பார்க்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
பிரண்டை துவையல் நெல்லிக்காய் புதினா துவையல் கொத்தமல்லி தேங்காய் சட்னி
இஞ்சி துவையல் கரிசலாங்கண்ணி துவையல்



மற்ற சட்னி வகைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

சட்னி வகைகள்

இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



No comments:

Post a Comment