#பச்சைமிளகுகாரசட்னி : #மிளகு மிக மிக பழங்காலத்திலிருந்தே உணவுக்காகவும் மருத்துவத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சளி, இருமல் மற்றும் உணவு சீரணத்தை சீராக்கவும் மருந்தாக பயன்படுத்தி வருகிறோம். நாம் பொதுவாக காய வைத்த கறுப்பு மிளகையே சமையலில் உபயோகப்படுத்துவோம். இது மட்டுமல்லாமல் மிளகு கொடியிலிருந்து பறித்த பச்சை மிளகையும் சமையலில் உபயோகிக்கலாம்.
இங்கு பச்சை மிளகை கொண்டு ஒரு கார சட்னி அரைக்கும் விதத்தை பாப்போம்.
இங்கு பச்சை மிளகை கொண்டு ஒரு கார சட்னி அரைக்கும் விதத்தை பாப்போம்.
தேவையானவை : | |
---|---|
2 - 3 | பச்சை மிளகு ஆர்க்குகள் |
4 - 5 | பூண்டு பற்கள் |
2 - 3 | பச்சை மிளகாய் [ அட்ஜஸ்ட் ] |
2 Tbsp | வினிகர் [ அட்ஜஸ்ட் ] |
3/4 Tsp | உப்பு [ அட்ஜஸ்ட் ] |
செய்முறை :
மிளகும் காரத்தன்மை உடையதால் பச்சை மிளகாயின் அளவை அவரவர் ருசிக்கேற்ப கூட்டி குறைத்துக்கொள்ளவும்.
காம்பிலிருந்து பச்சை மிளகை உதிர்த்து மிக்சி பாத்திரத்தில் போடவும்.
கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்தெடுக்கவும்.
சிறிது எடுத்து ருசி பார்த்து உப்பு மற்றும் வினிகர் தேவையெனில் சேர்த்து கலக்கவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
மிளகின் காரம் மற்றும் மணத்துடன் கூடிய அருமையான சட்னி தயார்.
இட்லி, ஆப்பம் மற்றும் தோசை வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையான சட்னியாகும்.
மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்த்து சுவைக்க
- படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
- படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.
No comments:
Post a Comment