Search This Blog

Saturday, April 1, 2017

Pumpkin-Morekuzhambu

#பூசணிக்காய்மோர்க்குழம்பு : #மோர்க்குழம்பு என்றவுடன் நினைவிற்கு வருவது பூசணிக்காய் மோர்க்குழம்புதான். ஹோட்டலில் மதிய உணவுக்கு பரிமாறப்படும் மோர்க்குழம்பு கட்டாயமாக பூசணி மோர்க்குழம்பாகத்தான் இருக்கும். உப்பு காரம் புளிப்பு ஆகிய அனைத்தும் பூசணி துண்டுகளில் ஏறி இருக்கும். இந்த பூசணி துண்டுகளை சுவைக்கும் போது அதன் சாறு நாக்கில் பட்டு தொண்டையில் இறங்கும் போது ஆஹா.... அலாதிதான்!!
மோர்க்குழம்பு செய்முறை ஐந்து நிலைகளை கொண்டது.

  • தயிரை கரண்டியால் அடித்து சிறிது பெருங்காயம் மற்றும் நசுக்கிய இஞ்சி சேர்த்து கலக்கி வைக்க வேண்டும்.
  • தேங்காய் மற்றும் அரைக்க வேண்டிய பொருட்களை நன்கு அரைத்து எடுக்க வேண்டும்.
  • மோர்க்குழம்பில் சேர்க்க வேண்டிய காயை வேக வைத்து எடுக்க வேண்டும்.
  • வெந்த பின்னர் அரைத்த விழுது மற்றும் தயிர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  • கடைசியாக தாளித்து கொட்ட வேண்டும். 

Pumpkin Morekuzhambu

 தேவையானவை :
1 கப்தயிர்
சிறிய துண்டுஇஞ்சி
2 சிட்டிகைபெருங்காய தூள்
150 கிராம்பூசணிக்காய்
1/4 Tspமஞ்சத்தூள்
1 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
அரைக்க :
3 Tspதேங்காய் துருவல்
1 Tspகடலை பருப்பு
1/2 Tspபச்சரிசி
1 Tspசீரகம்
1/2 Tspகொத்தமல்லி விதை
4 or 5மிளகு
2பூண்டு பற்கள்
4 or 5சின்ன வெங்காயம்
1 சிறியதுவெங்காயம்
1 or 2பச்சை மிளகாய்
1 or 2சிகப்பு மிளகாய்
சின்ன துண்டுஇஞ்சி
1/4 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1/2 Tspசீரகம்
1 Tspஉளுத்தம் பருப்பு
1/4 Tspபெருங்காயத்தூள்
1சிகப்பு மிளகாய்
10கருவேப்பிலை
கொத்தமல்லி தழை வாசனையூட்டவும் அலங்கரிக்கவும்.

செய்முறை :
அரை மணி நேரம் முன்னதாக கடலை பருப்பு, பச்சரிசி, மல்லியை ஊறவைத்து கொள்ளவும்.
பூசணிக்காய் தோலை நீக்கிவிட்டு சிறு சதுர வில்லைகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் தயிரை கரண்டியினால் அடித்து கலக்கி பெருங்காயம் மற்றும்  இஞ்சியை இடித்து சேர்க்கவும். தனியே வைக்கவும்.
மிக்சியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தனியே எடுத்து வைக்கவும்.
குக்கரில் பூசணிக்காய் துண்டுகளை போட்டு 1/2 கப் தண்ணீர், 1 சிட்டிகை மஞ்சத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மூடி வெயிட் பொருத்தி ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு உடனே வெயிட்டை தூக்கி நீராவியை வெளியேற்றவும்.

அதே குக்கரில் அல்லது வேறொரு பாத்திரத்தில் இட்டு அடுப்பின் மீது வைத்து  மிதமான தீயில் சூடாக்கவும்.
அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
கரண்டியால் கலக்கி விடவும்.
மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
கலந்து வைத்துள்ள தயிரை சேர்த்து தீயை சிறியதாக்கி ஒரு கொதி வரும் வரை கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலை ஓரிரண்டு மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை கிள்ளி போடவும்.

வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு வெடிக்க விடவும்.
பின் சீரகம், சிகப்பு மிளகாய் துண்டுகள்,உளுத்தம் பருப்பு, மற்றும் கருவேப்பிலை தாளித்து மோர் குழம்பின் மேல் ஊற்றவும்.
சுவையான மோர் குழம்பு தயார்.
Pumpkin Morekuzhambu
சூடான சாதத்தில் மோர் குழம்பை ஊற்றி பிசைந்து பிடித்தமான கறியுடன் சாப்பிட்டால் ம்ம்ம்....... சுவையே தனிதான்!!...




சில சமையல் குறிப்புகள் முயற்சிக்க :

மோர்க்குழம்பு
மோர்க்குழம்பு

morekuzhambu
வாழைப்பூ வடை மோர்க்குழம்பு
கடப்பா
கடப்பா - இட்லிக்கு தொட்டுக்க
வெந்தய குழம்பு
வெந்தய குழம்பு
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு



1 comment:

  1. Dear Chithra!

    Your innovations in recipes are always very interesting and are delicious when they are tried. My greetings to you!

    I have tried your ' vaazhaippoo milaku kuzambu and it is very tasty! I have posted it in my blog! please come and see it.

    http://manoskitchen.blogspot.in/

    ReplyDelete