#புதினா #பிரியாணி : என்னுடைய தோட்டத்தில் புதினா செடிகள் நன்றாக வளர்ந்து ஒரு படுக்கை போல் அடர்ந்துள்ளது. அதனால் அன்றாட சமையலில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புதினாவை உபயோகித்து வருகிறேன். அந்த வகையில் இங்கு புதினாவை உபயோகித்து செய்த பிரியாணி செய்முறையைக் காண்போம்.
தேவையான பொருட்கள் :
1/2 cup பாசுமதி அரிசி
1 cup புதினா இலைகள்
1/4 cup கொத்தமல்லி தழை நறுக்கியது
1 வெங்காயம் நீள வாக்கில் அறிந்து கொள்ளவும்
1 தக்காளி, துண்டுகளாக்கவும்
1/4 cup காலிப்ளவர் துண்டுகள்
1 குடை மிளகாய், பொடியாக அறிந்துகொள்ளவும்
1 காரட், துண்டுகளாக்கிகொள்ளவும்
1 பச்சை மிளகாய், கீறி வைக்கவும்
8 cloves பூண்டு
1 inch long piece இஞ்சி
4 கிராம்பு
2 ஏலக்காய்
2 ப்ரிஞ்சி இலை
2 அன்னாசி மொக்கு
1 inch long இலவங்கப்பட்டை
1/2 Tsp சீரகம்
1/2 Tsp சோம்பு [ பெருஞ்சீரகம் ]
1/4 Tsp மிளகாய் தூள்
1/2 Tsp மல்லி தூள்
1/4 Tsp சீரகத்தூள்
3 Tsp எண்ணெய்
செய்முறை :
இஞ்சியையும் கொடுக்கப்பட்டுள்ள பூண்டில் பாதியையும் மிக்ஸியில் விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள புதினாவில் பாதியையும் கொத்தமல்லியில் சிறிது அலங்கரிக்க எடுத்து வைத்து விட்டு மற்றனைத்தையும் மிக்ஸியில் விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
அரிசியை ஒரு முறை கழுவி விட்டு தண்ணீரில் ஊற வைக்கவும்.
மிதமான தீயில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் சீரகத்தையும் சோம்பையும் வெடிக்க விடவும்.
பின்னர் மற்ற வாசனை சாமான்களை போடவும்.
சில மனிதுளிகளுக்குப் பிறகு கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து சிறிது வதக்கவும்.
இப்போது பூண்டை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
அதன் பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் இலேசாக பொன்னிறமாகும் வரை வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள பொடிகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
பின்னர் காரட், காலி ப்ளவர் ஆகியவற்றை போட்டு சிறிது வதக்கிய பின்னர் புதினா கொத்தமல்லி விழுதை சேர்க்கவும்.
ஒரு பிரட்டு பிரட்டி விட்டு அரிசியிலிருந்து தண்ணீரை வடித்து விட்டு சேர்க்கவும்.
அரிசி வெள்ளையாக நிறம் மாறும் வரை வதக்கவும்.
கடைசியாக புதினா இலைகள் மற்றும் உப்பு சேர்த்து சில மணி துளிகள் வதக்கவும்.
ஒரு கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி வெயிட் வைக்கவும்.
அதிக தீயில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
3 விசிலுக்கு பின்னர் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கியபின் குக்கரின் மூடியை திறக்கவும்.
அதற்குள் மற்றொரு அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 2 சிட்டிகை உப்பை சேர்க்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய குடை மிளகாயை சேர்த்து முக்கால் பாகம் வேகும் வரை வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.
ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறந்தவுடன் வதக்கி வைத்துள்ள குடை மிளகாயை சேர்த்து கிளறவும்.
பரிமாறும் தட்டில் எடுத்து வைத்து தயிர் பச்சடியுடன் சுவைக்கவும்.
பன்னீர் கறியுடன் அல்லது குருமாவுடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.

No comments:
Post a Comment