#கம்புபகோடா : #கம்பு #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். கம்பு கொண்டு முறுக்கு மற்றும் கஞ்சி செய்யும் முறையை ஏற்கனவே பார்த்துள்ளோம். இங்கு பகோடா செய்வது எப்படி என்று காண்போம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
3/4 cup | கம்பு மாவு |
1/3 cup | கடலை மாவு |
2 Tbsp | அரிசி மாவு |
1/4 Tsp | மஞ்சத்தூள் |
3/4 Tsp | மிளகாய்த்தூள் [ adjust ] |
1/2 Tsp | சீரகப் பொடி |
3/4 Tsp | உப்பு [ adjust ] |
3 Tsp | சூடான எண்ணெய் |
1 cup | எண்ணெய் பொரிப்பதற்கு |
மற்ற பொருட்கள் : | |
---|---|
2 | வெங்காயம், நீள மெல்லிய துண்டுகளாக நறுக்கவும் |
1/2 Cup | முட்டைகோஸ் மெல்லியதாக நறுக்கியது |
2 or 3 | பச்சை மிளகாய், சிறுசிறு துண்டுகளாக்கவும் |
10 - 15 | கறுவேப்பிலை, பொடியாக நறுக்கவும் |
2 or 3 Tbsp | கொத்தமல்லி தழை நறுக்கியது |
செய்முறை :
எண்ணெய் நீங்கலாக தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்காக எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கவும்.
அதிலிருந்து 3 தேக்கரண்டி சூடான எண்ணெயை மாவில் ஊற்றி பிசறி விடவும்.
இப்போது வெட்டி வைத்துள்ள மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பிசறவும்.
சாரணியால் திருப்பி விட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
தக்காளி சாஸுடன் பரிமாறவும். டீ/காபியுடன் கொறிக்க அருமையான நொறுக்கு தீனியாகும்.
மேலும் முயற்சி செய்ய
|
|
|
||||||
|
|
|
No comments:
Post a Comment