#வல்லாரைபருப்புத்துவையல் : #வல்லாரைகீரை நீர்நிலைகளின் அருகே அதிகமாக வளர கூடிய ஒரு கொடியாகும். வல்லாரை நினைவாற்றலை மேம்படுதவல்லது. முந்தைய பதிவுகளில் இக்கீரையை கொண்டு துவையல் செய்யும் முறையை அறிந்து கொண்டோம். இங்கு இக்கீரையை சேர்த்து பருப்பு துவையல் செய்வது எப்படி என காண்போம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
20 - 25 | வல்லாரை இலைகள் |
3 Tbsp | தேங்காய் துருவல் |
3 Tbsp | துவரம் பருப்பு |
2 or 3 | சிகப்பு மிளகாய் |
5 - 6 பற்கள் | பூண்டு |
1 Tsp | நல்லெண்ணெய் [ Til/sesame oil ] |
3/4 Tsp | உப்பு [ adjust ] |
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும்.
அடுத்து துவரம் பருப்பை சேர்த்து கை விடாமல் திராவி சிவக்க வறுக்கவும்.
தனியே தட்டில் எடுத்து வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு கழுவி சுத்தம் செய்த கீரையை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.
வதக்கிய கீரையையும் தட்டில் எடுத்து வைத்து ஆற விடவும்.
ஆறிய பின்னர் மிக்ஸியில் மற்ற பொருட்களையும் சேர்த்து முதலில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மேலும் முயற்சி செய்ய
|
|
|
||||||
|
|
|
No comments:
Post a Comment