Search This Blog

Wednesday, January 6, 2016

Spaghetti

#ஸ்பகட்டி [ #spaghetti ] : Noodles மற்றும் pasta போன்ற உணவுதான் spaghetti என்பதும். இது நூடல்ஸ் போல மெல்லியதாக இல்லாமல் சிறிது தடிமனாகவும், தட்டையாகவோ அல்லது உருளை வடிவத்தை உடையதாக இருக்கும். இவை அனைத்துமே மைதா அல்லது கோதுமை மாவில் தயாரிக்கப் படுகிறது. பாஸ்தா பல வடிவங்களில் கிடைக்கிறது.

இதனை கொண்டு உணவு தயாரிக்கும் போது, முதலில் கொதிக்கும் தண்ணீரில் தயாரிப்பாளர்கள் அறிவுரைப்படி வேக வைத்து தண்ணீரை வடித்து பின் எடுத்து வைக்க வேண்டும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க சிறிது குளிர்ந்த நீரில் கஞ்சி போக கழுவிய பின்னர் ஓரிரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலந்து ஆற விடவும். பிறகு அவரவர் சுவைக்கு ஏற்ப உணவு தயாரிக்கலாம்.

பாஸ்தா மற்றும் ஸ்பகட்டி இத்தாலியில் பிரசித்தமான உணவு வகைகளாகும். வேகவைத்த பாஸ்தாவை தக்காளி குழம்புடன் பாசில் இலைகளை மேலே தூவி பரிமாறுவார்கள். அல்லது பெஸ்டோ சாஸுடன் கலந்து பரிமாறுவார்கள்.
இங்கு எனது சுவைக்கேற்ப காரட், பீட்ரூட், வெந்தய கீரை மற்றும் புதினா - கொத்தமல்லி சாஸ் கொண்டு ஸ்பகட்டி எவ்வாறு தயாரிக்கப் பட்டது என காண்போம்.


spaghetti

தேவையான பொருட்கள் :
150 gmsஸ்பகட்டி
2 tspஎண்ணெய் 
1 tspஉப்பு
1/4 கப்பீட்ரூட் துருவியது
1/4 கப்காரட் துருவியது
1/2 கப்வெந்தய கீரை, கழுவி நறுக்கியது
1 நடுத்தர அளவுவெங்காயம் நீளவாக்கில் அரியவும்
சாஸ் தயாரிக்க :
1/4 கப்புதினா
1/4 கப்கொத்தமல்லி நறுக்கியது
5 - 6பச்சை மிளகாய் 
4 - 5பாதம் பருப்பு
2 tspஎலுமிச்சை சாறு [அ ] வினிகர்
தாளிக்க :
1/2 tspசீரகம் 
1/2 tspகருஞ்சீரகம் [ kalonji ]
2 tspஆலிவ் அல்லது சமையல் எண்ணெய்

உப்பு ருசிக்கேற்ப
அலங்கரிக்க பொடியாக நறுக்கிய கொத்தமல்லி

செய்முறை :
முதலில் சாஸ் தயாரிக்க தேவையான பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து தனியே வைக்கவும்.

அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு மற்றும் என்னை 2 தேக்கரண்டி விட்டு ஸ்பகட்டியை தேவையான அளவிற்கு உடைத்து சேர்க்கவும்.
தயாரிக்கும் முறை அதன் மேல் உரையில் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதற்கு ஏற்றவாறு மிதமான தீயில் வேக விடவும்.
வெந்ததும் தண்ணீரை வடிகட்டி விடவும்.
மேலும் சூட்டில் வேகாமல் இருக்கவும் ஸ்பகட்டி மேலுள்ள கஞ்சியை அகற்றவும் குளிர்ந்த நீரில் அலசி தண்ணீரை வடிய விடவும்.
பிறகு ஓரிரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் அல்லது வேறு சமையல் எண்ணெய் ஊற்றி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க கலந்து வைக்கவும்.

வாணலியை அடுப்பில் மிதமான தீயின் மேல் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய சூடானதும் சீரகம் மற்றும் கருஞ்சீரகம் தாளித்து வெங்காயம் மற்றும் சிறிது கொத்தமல்லி சேர்க்கவும்.
அதிக தீயில் வைத்து வெங்காயம் வெளிர் நிறமாகும் வரை வதக்கவும்.
அடுத்து துருவி வைத்துள்ள காரட் மற்றும் பீட்ரூட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு வேக வைத்துள்ள ஸ்பகட்டி மற்றும் மைய அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி - புதினா விழுதை சேர்க்கவு.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
கடைசியாக வெந்தய கீரையை போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
நன்கு கலந்து விட்ட பின்னர் பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
பீட்ரூட் நிறம் தூக்கலாக புதினா கொத்தமல்லி நறுமணத்துடன் கூடிய சுவையான ஸ்பகட்டி தயார்.
சுவைத்து மகிழவும்.

பின் குறிப்பு :
காரம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் அரைக்கும் போது பச்சை மிளகாய் மேலும் ஒன்றிரண்டு அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.
சிலருக்கு பீட்ரூட்டின் நிறமும் சுவையும் பிடிக்காது. அதற்குப் பதில் முட்டைகோஸ் மற்றும் குடை மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்.




சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்ய

இடியாப்பம் மசாலா தோசை நூடுல்ஸ் தக்காளி சாஸுடன்
கொத்தமல்லி சட்னி டிபன் வகைகள்