#சிகப்புகீரைமசியல் : நான் தற்போது வசிக்கும் ராய்ப்பூரில் #சிகப்புமுளைகீரை மிகவும் பிரசித்தம். மிகுந்து சுவையானதும் கூட!! இந்த கீரையை கொண்டு செய்யப்படும் மசியல் மிக்க ருசியுடையது. பொதுவாக கீரையை வேகவைத்து பூண்டு உப்பு சேர்த்து மசிப்பதுதான் வழக்கம். இது சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். இம்முறை கீரை அதிகமாக இருந்ததால் காலை இட்லியுடன் தொட்டு கொண்டு சாப்பிட கீழ்கண்ட முறையை பின்ப்பற்றி செய்தேன். மிக அருமையாக இருந்தது.
தேவையான பொருட்கள் :
1 கப் சிகப்பு முளை கீரை, கழுவி பொடியாக அரிந்தது
12 சின்ன வெங்காயம், ஒன்றிரண்டாக அரியவும்
2 மத்திய அளவு தக்காளி நாட்டு வகை, இரண்டாக வெட்டியது.
1 அ 2 சிகப்பு மிளகாய்
1/2 கப் துவரம் பருப்பு வேக வைத்தது
1 Tsp உப்பு [ அட்ஜஸ்ட் ]
3 Tsp மணத்தக்காளி [ இருந்தால் ]
தாளிக்க :
1/2 Tsp கடுகு
1 Tsp உளுத்தம் பருப்பு
1 அ 2 சிகப்பு மிளகாய், உடைத்துக் கொள்ளவும்
2 சிட்டிகை பெருங்காய தூள்
1 tsp எண்ணெய்
செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் குக்கரில் எடுத்துக்கொள்ளவும்.
1/2 கப் தண்ணீர் சேர்த்து அதிக தீயில் வைத்து மூடி போட்டு வெயிட்டை பொருத்தவும்.
ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
உடனடியாக ஆவியை வெளியேற்றி விடவும்.
சிறிது சூடு ஆரிய பின் மத்து அல்லது உருளை கிழங்கு மசிக்கும் கரண்டி கொண்டு நன்கு மசித்து விடவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகை வெடிக்க விட்டு சிகப்பு மிளகாயை கிள்ளி போட்டு உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
சிவந்ததும் பெருங்காய பொடி சேர்த்து மசியலின் மேல் ஊற்றவும்.
இதுதான் முதல் முறையாக கீரை மசியலை இட்லிக்கு தொட்டுக்கொள்ள செய்தேன். மிக மிக அருமையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்கவும்.
சிகப்பு கீரை கிடைக்கவில்லையெனில் பாலக் கீரை அல்லது முளை கீரையை பயன்படுத்தியும் செய்யலாம்.
சில சமையல் வகைகள் சமைத்து ருசிக்க

|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment