Search This Blog

Tuesday, February 23, 2016

Parangikkai-Chutney

#பரங்கிக்காய்துவையல் : #பரங்கிக்காய் சாம்பார் வைத்தது போக மீதி இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பிறகு முட்டைகோஸ் சட்னி மற்றும் காரட் சட்னி போல செய்து சுவைக்கலாம் என முடிவெடுத்து செயலிலும் இறங்கி விட்டேன்.
சிகப்பு மிளகாய், உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி விதை, சிறிது மிளகு எல்லாவற்றையும் தனித்தனியாக வாசனை வரும் வரை எண்ணெயில் வறுத்து எடுக்க வேண்டும்.
வறுத்த பொருட்களுடன் தேங்காய் துருவல், கொத்தமல்லி தழை மற்றும் ஒரு பல் பூண்டு சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்க வேண்டும். பிறகு கடுகு தாளித்து கொட்டினால் சுவையான பரங்கிக்காய் சட்னி தயார்.

yellow pumpkin chutney


தேவையான பொருட்கள் :
1/4 கப்பரங்கிக்காய் துண்டுகள்
1/4 கப்கொத்தமல்லி தழை நறுக்கியது
3 Tspதேங்காய் துருவல்
1 Tspஉளுத்தம் பருப்பு
1/4 Tspகொத்தமல்லி விதை
6 - 8மிளகு
2சிகப்பு மிளகாய் வற்றல் [ adjust ]
2பூண்டு பற்கள் [ விரும்பினால் ]
2 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]
3/4 Tspஉப்பு [ adjust ]
2 Tspஎண்ணெய்
1/2 Tspகடுகு

சிறிதளவு கொத்தமல்லி தழை அலங்கரிக்க.

செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும். முதலில் சிகப்பு மிளகாயை நன்கு வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.
அடுத்து அதே வாணலியில் உளுத்தம் பருப்பை நன்கு சிவக்கும் வரை வறுத்து எடுத்து மிக்ஸி அரைக்கும் பாத்திரத்தில் வைக்கவும்.
அடுத்ததாக மேலும் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு கொத்தமல்லி விதைகளை வாசனை வரும் வரை வறுக்கவும்.
அதனை எடுத்த பின்னர் மிளகு பொறியும் வரை வறுத்து எடுக்கவும்.
வறுத்த பொருட்களுடன் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களையும் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
உப்பு மற்றும் புளிப்பு சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
மீண்டும் வாணலியை சூடு பண்ணி எண்ணெய் விட்டு கடுகை வெடிக்க விட்டு தயாரித்து வைத்துள்ள துவையலின் மேல் கொட்டவும்.
 சுவையான பரங்கிக்காய் துவையல் தயார்.

பொங்கல், உப்புமா, சுண்டல் போன்றவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
சூடான சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.
செய்து பார்த்து சுவைத்து மகிழவும்.
yellow pumpkin chutney

குறிப்பு : எலுமிச்சை சாறுக்கு பதிலாக சிறு கோலி குண்டளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து சேர்த்து அரைக்கலாம்.
பரங்கிக்காய் சிறிது இனிப்பு சுவை கொண்டது. அதனால் அவரவர் சுவைக்கு ஏற்ப சிகப்பு மிளகாய் எடுத்துக்கொள்ளவும்.





மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்க்க

பரங்கிக்காய் பொரியல்
பரங்கிக்காய் பொரியல்
இஞ்சி துவையல்
இஞ்சி
துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
  கரிசலாங்கண்ணி துவையல்
பொடுதலை துவையல்
பொடுதலை
துவையல்
பொங்கல் துவையல்
பொங்கல் 
துவையல்


இந்த சமையல் குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருப்பின் மற்றவர்களும் பயனடையும் விதமாக கீழே உள்ள பெட்டியின் வாயிலாக முகநூல், கூகுள்  மற்றும் சில சமூக வலைதளங்களில் பகிரவும்.
இங்கு தங்கள் கருத்தையும் பதிவிடவும். நன்றி.


No comments:

Post a Comment