Search This Blog

Sunday, January 5, 2014

Cabbage Chutney

#முட்டைகோஸ்சட்னி :  தேங்காய் சட்னியை தினமும் அரைத்து சலிப்பாக வேண்டாமே என்று ஒரு மாறுதலுக்காக முட்டைகோஸை வதக்கி சட்னி செய்து பார்த்தேன் மிக்க சுவையுடன் அருமையாக வந்தது. அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. இதோ இங்கே எப்படி என காணலாம்.

முட்டைகோஸ் சட்னி

தேவையான பொருட்கள் :

1 கப்                           முட்டைகோஸ் பொடியாக அரிந்தது
சிறிது                        கொத்தமல்லி
சிறிய துண்டு         இஞ்சி
1 Tsp                            உளுத்தம் பருப்பு
2                                   சிகப்பு மிளகாய்
1/4 கப்                        தேங்காய் துருவல்
1 Tsp                            எலுமிச்சை சாறு ( அட்ஜஸ்ட் )
1/2 Tsp                          உப்பு ( அட்ஜஸ்ட் )

தாளிக்க :

1 Tsp                            கடுகு
1/2 Tsp                         சீரகம்
1/2 Tsp                        கருஞ்சீரகம்

அலங்கரிக்க :
கொத்தமல்லி தழை சிறிதளவு.



செய்முறை :

முதலில் அடுப்பில் வாணலியை வைத்து சிகப்பு மிளகாயை நன்கு வறுத்தெடுக்கவும்.
பின் உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
இப்போது இஞ்சி துண்டுகளை வாசனை வரும் வரை வதக்கி எடுக்கவும்.
கடைசியாக முட்டைகோஸை இலேசாக வேகும் வரை வதக்கி எடுக்கவும்.
மிக்சியில் மற்ற பொருட்களுடன் வதக்கிய பொருட்களையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

வாணலியில் கடுகு, சீரகம் மற்றும் கருஞ்சீரகத்தை வெடிக்க விட்டு அரைத்து வைத்துள்ள சட்னியின் மேல் ஊற்றவும். கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.

முட்டைகோஸ் சட்னி

தோசை, உப்புமா , பொங்கல் மற்றும் இட்லி போன்றவற்றிற்கு ஏற்ற சட்னியாகும்.




பிற சட்னி வகைகளின் சமையல் குறிப்புகள்

பீர்கங்காய் கொத்தமல்லி சட்னி பொடுதலை துவையல் புதினா தயிர் சட்னி

No comments:

Post a Comment